நேயமுடன் பகிர்க!
வையக நிலையறிக!!

நேயமுடன் பகிர்க!
வையக நிலையறிக!!

இளமை துள்ளும் உள்ளம் அள்ளும்
     வளமை பொங்கும் இன்பம் கொள்ளும்
கோளம் கலசம் ஞானம் நாளும்
     நாளம் தாங்கும் திறன் மிகும்.

மிகும் கடமை முடிவில் ஆர்வம்
     தகும் வடிவம் தங்கும் இடம்
வகுக்கும் வகை பெருகும் பொழுது
      பகுக்கும் பருவம் ஆரம்பம் தொடரும்.

தொடரும் யாவும் பெயரளவு உண்டு
      வடம் பிடித்து எழும் சொல்
உடம்படும் மெய் ஞானம் தரும்
      இடமிடும் கொள்வகை பிடிதரும் உள்நிலை.

உள்நிலை உவகை உயிரினம் காக்கும்
      ஆள்நிலை சொல்லும் அளவு எழும்
தாள்நிலை தடம் பதிக்கும் பணி
      வாள்(பூக்கோள்)நிலை வாழும் இறைமை இயற்கை.

இயற்கை பேரெழில் உயிரியக் கொள்கை
      நயம்பட உரைக்கும் பாடலகப் பொலிவு
ஆயகலைகள் பதியும் பாவின வகுப்பு
      நேயமுடன் பகிர்க! வையக நிலையறிக!!


       
   

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA