நிலை மாறும் உலகில் தரை
வலை நீர் நிலை உயிரூற்று.

மலை மேகம் குளிர் காற்று
தலை கவசம் அணிந்து கொள்
நிலை மாறும் உலகில் தரை
வலை நீர் நிலை உயிரூற்று.

இலை தழை கொடி மரம்
ஓலை குடிசை மாற்று இடம்
அலை அலையாய் கடல் நீர்
கலை அறிவியல் கல்லூரி நடைமுறை

நடைமுறை உண்மை உணர்ந்த செயல்
உடை உணவு இடமே அடிப்படை
தடைக் கல் யாவும் ஊக்கத்தின்
அடையாளம்
மடைத் திறந்தே வழி வகுக்கும்.

கடை என்றும் பொருள்படும் வகை
எடை போடுவதே முதல் முடிச்சு
ஆடை அணிகலன் கவர்ச் சியெலாம்
ஓடைத் தண்ணி பயிர்நிலம் நிறைநிலம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: