நிலவுகின்ற எடிசன் எணினித் தொடர்
தலை கால் நரம்பின் பயணம்.

செல்லும் செல் வழி செயல்படும்
நல்வழி சேவை பெறும் பாலர்
வல்லமை கொண்டத் திசுக்கள் மலரும்
பல்வினை யாவும் ஓர் வகைப்பாடே.

சேவை வகை சேர்க்கும் வையகம்
பார்வை பார்ப்பதில் கோடி நரம்பியல்
தேர்வுத் தொடரில் தேவைப் படுவோர்
உயர்வில் உயிரும் நிறைவுத் துறையே.

மூளைத் தொடர்பு படிகளின் வடிவம்
நாளும் நாரும் ஊரும் சத்து
தோளும் துடிப்பு மிக்கத் தருணமே
ஆளும் தரத்தை ஆளுமை ஆற்றும்.

சங்கம் மருவிய காலத்தின் இசை
பங்கம் இல்லா பெருமித வாழ்வு
தங்கம் மின்னும் பொருளின் சேர்க்கை
அங்கம் தாங்கும் செல்லும் வழியே.

ஒழுங்கு முறை ஆடை அணிகலன்
தழுவிய மொழி பேசும் முறைமை
இழுத்து வந்து சேரும் காலம்
கழுத்து மார்பின் மூக்கின் ஒலி.

காலந் தோறும் அறிவியல் தோற்றம்
உலகின்  வேலைப்பாட்டு உள்ளத்தின் தேற்றம்
நிலவுகின்ற எடிசன் எணினித் தொடர்
தலை கால் நரம்பின் பயணம்.Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA