தொழுது  வாழ்த்தி வணங்கி மகிழ்வோம்.
ஆய கலைகளின் பண்பாளர் ஆசிரியரே‌.

தொழுது  வாழ்த்தி வணங்கி மகிழ்வோம்.
ஆய கலைகளின் பண்பாளர் ஆசிரியரே‌.

நம்மில் கலந்த ஓர் அறை
தம்மில் நிலை நிறுத்தி வைக்கும்
உம்மில் உறவாடும் உயிர்த் தொடர்
எம்மில் உறுதி நல்கும் உறுப்பே.

அனைத்து உலகும் இன்பம் தரும்
உன்னில் உருவாகும்  சேர்ப்பு வகை
தன்னுள் தரம் பிரித்து உணரும்
அன்புத் தொடர் தாயனைக் கருவினை.

கற்றல் கற்பவரின் ஆய்வுக் களம்
நிற்றல் நினைவுச் செயல் திறன்
உற்று உணர்ந்து கொள்ள முடியும்
தொற்றித் தொடர்ந்து அறியும் அறிவு.

பயன் பலன் கிடைக்க வழிவகுக்கும்
நயம்பட உரைக்கும் பல சிறப்பாகும்
பயம் அகலும் வீரம் பெருகும்
ஆய கலைகளின் பண்பாளர் ஆசிரியரே‌.

வாழும் வாழ்க்கை வளரும் தன்மை
தமிழ் மொழி இலக்கு இலக்கியமும்
எழும் ஏற்றம் தகுதி படைத்தோரை
தொழுது  வாழ்த்தி வணங்கி மகிழ்வோம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA