தமிழ் சொல் ” கண்ணி ” சொல்லி பழகுவோம்

தமிழ் சொல் ” கண்ணி ” சொல்லி பழகுவோம்.

கண்ணி:

பூமாலை, பூங்கொத்து, சூடுகின்ற பூமாலை, தலைமாலை, ஓர்இசைப்பாட்டு, கரிசலாங்கண்ணி.
எனப் பொருள்பட தமிழ் மொழி முறைமை வழிமுறை ஆகும்.


கண்ணி சொல் முறைமை :

கண்ணி எனும் சொற்‌ பொருள்
கண்ணில் பட வேண்டி நாளும்
கண்ணியம் கட்டுப்பாடுடன் அழகுறச் சொல்வோம் ;
கண்ணிமைக்குள் பகிர்ந்து கொள்ள விரும்புவோம்.

விரும்பிய அரும்பொருள் சொல் வழக்கம்
வரும், வரலாற்றில் தொகுக்க முடியும்;
தரும் வகையில் பண்டைத் தமிழினை,
ஊரும் பேரும் அறிந்து கொள்ளும்.

கொள் நினைவில், பழக்கத்தில் ஏற்றிடு ;
‌உள் நுழைய தடுமாறும் ‘டண்’ணகரம்
தாள் தேர்வு மூலக் கொள்கையோடு
நாள் ஒன்றுக்கு தமிழ்சொல் அறிவோம்.

அறிந்து கொள்ளும் நுண்ணுயிர் உணர்வு
கறிவேப்பிலை போல் ஏற்க மறுத்தாலும்
நெறிமுறை தொகுப்பில் சீராக அமையும்
அறிவோம் “றன்”னகர ‘கன்னி’மொழி வேறுபாடு.
லாலாலஜபதிராய்

பாரதியார் 48.
‘லாஜாபதியின் பிரலாபம்’

கண்ணிகள் :

நாடிழந்து “மக்களையும் நல்லாளை யும்பிரிந்து
வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே?

ஓர் பாட்டு :

திபதை, பெயர்ச்சொல்.

இரண்டடிக் கண்ணிப் பாட்டு.
இசைப் பாடல் என்பது இரண்டு இரண்டு அடிகள் கொண்ட பாடல் வரிகள் ஆகும்.

இரண்டு இரண்டு மலர்களை வைத்துத்தொடுக்கும் மாலைக்குக்
கண்ணி என்பது பெயராதலின் திபதையைக் கண்ணி என்று வழங்குவர்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA