தமிழ் கணக்கு நாழிகை கணக்கு

தமிழ் கணக்கு 6 –

” நாழிகை கணக்கர்கள் ‘

நேர கால கணிப்பு முறையினை
‘ நாழிகை ‘ வரையறை செய்கிறது.

தமிழில் கணிக்கும் திறனை
‘ நாழிகை ‘‌ கொண்டு வகுக்கும் வழிமுறைகளை அறிவோம்.

‘நா’ வில் ஏற்படும் ஒலி
உதரவிதானத்திற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் துணை செய்யும்.

ஈன்ற உயிரணுக்கள் ஒவ்வொன்றும் எழும்பும்.

ஏற்றமிகு ஒலியுடன், ஐக்கியமாகும்.

உயர‌ எழுப்பி,
வாயை திறந்து
ஒலிக்கும் முயற்சியில் ஈடுபடும்.

மேல் வாய்ப் பல் அடி நாவில் விளிம்பில் ஆழ்ந்து பொருந்தி ஒவ்வொரு சொல்லாக வெளிவரும்.

“நா(ஆ)+(வி)ழி”
“நாழி” என
நம் உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாயில் இருந்து ஒலிப்பது, உயிரணுக்களின் ஒன்று சேர்ந்த அமைப்பு, தாயனை, ஆறனைத் தொடராற்றல் கொண்டது ஆகும்.

இவ்வாறு
நம்
‘நா'(க்கு) வ’ழி’
வகுப்பதை
ஒவ்வொரு மொழியும் பேசும்.

அவ்வாறு பேசும் நொடிக்கு
‘ நாழி ‘ என்போம்.

மெய்யுறுப்புகளின் நிலைப்பாட்டை ஒவ்வொரு நொடியும் அறிந்து, ‘ நாழி ‘ என நம் ‘கை’யின் உதவி கொண்டு நாழி’கை’ என வகுத்தனர்.

சூரிய ஒளி வெளிப்பாடு அறிந்த பின், ஒவ்வொரு காலத்திலும் ஒளியின் வெளிச்சத்தில், நிழல் விழுவதன் மூலமும் அறிந்தனர்.

இவ்வாறு ‘ நாழிகை ‘ சொல் வரலாற்றின் வழிமுறை அறியலாம்.

நாழிகை தொகுப்பவர்களை நாழிகை கணக்காளர்கள் என அழைத்தனர்.

‘ நாழிகைக் கணக்கர் ‘
என்பவர் இரவில் தூங்காமல் நாழிகையை வட்டில் மூலம் கணக்கிட்டு,
அதை மணியோசையால்
ஊரில் உள்ளவர்களுக்கு அறிவிப்பர்.

நாழி குறித்து
முல்லைப்பாட்டு 1-9 :

நனந்தலை யுலகம் வளைஇ நேமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லோடு
நாழி கொண்ட நறுவீ முல்லை

மனித இனம்

” நன+(வு-(‘வ’+’உ’)) ” = ” நனவு “

எனும் சொல் வரலாறுப் பதிவினை அறிவோம்.

” நன “‌ என்ற சொல் “நினை”வில் நின்று, சொல்லாக நிலைக்கிறது.

நினைவில் வளர்ந்து
‘வ’ரும் ‘ உ’ண்மையை ரிங்காரமிட்டு மையமாக,”
மனித இன “உரிமை‌” என கால காலமாக வளர்ந்து உள்ளது.

உரிமை நாம் வாழும் தளத்தின் களம் ஆகும்.

“களம்” என்ற தளத்தில்
“அகலம்” ஆக விளங்கி நாம் வாழும் , ” புவி ” வாழ்நாளினை
குறிக்கத்தக்கது.

(எ.கா: தொல்காப்பியம் சொல்லதிகாரம் 370 உரியியல்)

” நனவே களனும் அகலமும் செய்யும்”

நனவு எனும் உரிச்சொல் களம், அகலம் என குறிப்பாக பொருள்களை உணர்த்தும்.

தலையில் தோன்றும் நனவு, நினைவுத் திறன் கொண்ட மனித வரலாறு ஆகும்.

சக்கரமாக விளங்கும் கருப்பொருள்கள், ஒலி குறிப்பினில், ஒவ்வொரு துளியாக வலிமை பெறும்.

வலிமை பெற்ற ஆறனை தாயனையின் மூலக்கூறுகள் ஆற்றல் கொண்டு இயங்கும்.

அவ்வாறு இயங்கும் உமிழ் நீர் சுரந்து, வாயியல் முறைமையில் நற்சொல் ‘ நாழி ‘ எனப் புரிந்து, தமிழ் சொல்லாக கைத்துணை மூலக்கருவிகள் மூலம்,
” நாழிகை ” என்று கணித்து சொல்லப் படுகிறது.

இவ்வாறே ,
முல்லைப் பாட்டு 55 – 58 பதிவினில்

‘பொழுது’ இது தான் என பல காலமறிந்து ‘நா’வில் பொய்யே கூறாத மக்கள், வி’ழி’ மூலம் கை கூப்பி வணங்கி, அலைகள் சூழ் கடல்நீர் செல்லும் வையகம் செல்வதைக் குறு(உமிழ்) நீரில் சொல்லும் சொல்லாக வாய்மொழியில் அனைவரும் விளங்கும் வகையில்,

‘ நாழிகை வட்டில் ‘ என்ற கருவி மூலம் பின்னர் நேரகாலமுறை ஆக தொகுத்தனர்.

நாழிகை கணக்கர்,

” பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி,
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
குறுநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப ‘
எனப் பதிந்து உள்ளார்.

அதுபோல்,
குறுந்தொகை 261/9 இல்,

நாழிகை கணக்கர் குறித்து, கழார் கீரன் எயிற்றி பதிந்து உள்ளார்.

” நான் உறங்கிவிட்டால், தலைவன் வரும் நேரத்தை அறியாமல் அவனைச் சந்திக்க முடியாமல் போய்விடும்.” என்று இப்பாடலில் தலைவி கூறுகிறாள்.

“பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.”

காவலர் கணக்கு வகை என இப்பாடலில் பதிந்தவை, நாழிகை கணக்கர் இரவில் முழித்து மணியின் மூலம் எழுப்புவது போல், தலைவி தலைவனுக்கு என வருந்தி துஞ்சாதிருப்பதை பதிந்து உள்ளார்.

  1. இந்திரவிழவூரெடுத்த காதை

49
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் நாழிகைக் கணக்கர் - அரசனுக்குச் சென்ற நாழிகையை அறிந்து சொல்லுவார் ;

இதனை, "பூமென் கணையும் பொருசிலையுங் கைக்கொண்டு காமன் றிரியுங் கருவூரா--யாமங்கள் ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும் ஒன்றுபோ யொன்றுபோ யொன்று"

என்பதனாலறிக.
சிலப்பதிகாரம் கூறுகிறது.

புவியியல் பகுதியில் பூ போல ஒவ்வொன்றும் கண்டறிந்து மெல்லிய குரலில் அக்கணமே ஒவ்வொரு பொருளும் சொல்லாக கணித்தனர் .

அப்பொருட்களை நாவிலும் கையிலும் அசைத்து, விழி மூலம் காட்சியகங்களில் திரியும் கருப்பொருள்களாக கண்டறிந்ததை யாவும் ஒரு சிலவற்றை ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக அறிந்து தொகுத்தனர்.

இது போலவே
நாழிகையினையும் கணக்காளர்கள் ஒவ்வொரு பொருளையும் வகுத்துள்ளனர் .

ஒவ்வொரு நாளும், ஆண்டும் நாழிகை மூலம் கணிப்பது

‘நாழிகை கணக்கு’ ஆகும்.

தமிழ் கணக்கு 6

  • ” நாழிகை கணக்கர் ” குறித்து

நாழிகை

நனந்தலை கொண்ட மனித வளம்
ஆன முதலொரு சில மெய்யியல்பு
இனம் ஆக வளர்நில இயல்பு
தனம் மெய்யெனக் கொண்ட நாவிழி.

நாவிழி கை கூடிய நாழிகை
தாவி தத்தி செல்லக் கை
அவியல் சோறு ஆராய்ச்சி வயல்
புவி நில சூழ் ஆழி(கடல்).

ஆழி மழை விண் பொழிவு
நாழிகை காட்டும் எணினி காட்டி
வாழிய செந்தமிழ் சேர்ந்த பதிவு
ஊழியர்கள் செயலே நாட்டின் திறம்.

திறமை திறந்தவெளி மூலச் சேவை
உறவு கொள்ள விரும்பும் யாவும்
ஆற அமர வைத்து சிறக்கும்
பறந்து சென்று பற்றிக் கூறும்.

கூறும் கூடு; கூட்டம் குடில்
ஊறும் நீர்மம், வளிம உமிழ்நீர்
ஏறும் இறங்கும் வடிகால் அமைப்பு
மாறும் நிலை உயிரின மரபுவழி.

2
நாழிகை வந்த வழி பாடல்:

வந்த காலம் ஒன்று; இன்று
பந்த கால நிகழ்வே!

வந்த காலம் ஒன்று, வாழ்ந்து
வந்த காலம் ஒன்று, இன்று
அந்த காலம் முதல், தொகுக்கும்
பந்த பாசம் மிகுதி ஆக்கும்.

ஆக்கும் பேராற்றல் மிக்க மகிழ்ச்சி
ஆகும் கருணை உள்ளம் உள்ளும்
நகும் நல்லுள்ளம் ஓர் பார்வை
வகுக்கும் நிலம், நீர்ச்சுற்று அழகு.

அழகு, ஆனந்தம் புரிதல் வேண்டிப்
பழகு மொழி சொல் முறைமை
வழக்கம் போல் ஏற்க, முயல்க;
குழல் இசை, இனிது காண்க.

காண கோடியாண்டு பதிவு வகை
நாணய மாற்று‌ இயல் கணக்கு
வாண வேடிக்கை அல்ல என்றும்
பாணர், ஆன்றோர், சான்றோர் வாக்கு.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA