சுழளாதாரம் – புவியடி ஐந்தடுக்கு
செந்தழல் பொறியியல் அறிந்தோ ராங்கே
வந்த வழியறிய இருந்தோராய் பலகாலம்
உந்தியத் தீப்பொறி நுண்புலப் பட்டறிவில்
செந்தமிழ் வாழும்படியிலும் மூன்று லட்சமாண்டு.
லட்சலட்ச மாண்டும் உயிர்த்து பிழைத்து
உட்புற உடல் சூடுதணிந் தாங்கே
தட்பவெப்ப நிலை யாலே தளிர்
நட்புறவில் வெளிவந்த மெய்யறி வுணர்வாங்கே.
அறிந்து உணர்ந்த ஞானம் கொள்ளியென
யறிந்த பின்பே பிசாசென பறைசாற்றினோரே
மறித்து இறந்தோர் மனித வளம்பெறவே
பிறிதொரு அறிகுறியால் லட்சமாண்டுச் சுழலென்றார்.
சுழலும் சமயம் சார்பும் புவியியல்
கழலுதல் யடியியக்கி காலூன்றதலின் தளம்
இழப்பு புவியடுக்கு அடித்தட்டு நெருப்பு
வழக்கம் போல் பொங்கி எழும்.
எழும் யடித்தட்டு சுற்றுக்குச் சுற்று
வாழும் நாளின் உயிர்த் துடிப்பு
தழுவும் ஒவ்வொரு உள்வட்டச் சுழலுலகம்
நழுவிச் சுழளாதார இருப்பின் ஆதாரமே.