“குருதி ஓட்டம் “:
நாமனைவரின் குருதியில் காணும் இனம்
நாமனைவரின் மனிதயின தாயனை(DNA) வகைப்பாடு
நாமனைவரின் கருத்தினைவு பயணவழி காட்டும்;
நாமனைவரின் ஒற்றுமையே மனிதம் சிறக்கும்.
சிறப்புற ஆற்றல் மிகு திறன்
சிறந்திடச் செய்யும் வகை உண்டு;
சிறந்தது ஏதென வாழ்வில் அறிந்து கொள்;
சிறப்பெது என்பது உள்ளுணர்வில் அகமாற்றும்.
‘அகம்’ ‘புறம்’ வாழ்விடத் தோற்றம்
தகவல், தொழில், நுட்ப மூலமே,
உகந்த நாள், நேரக் கணிப்பு.
முகமது நம் முன்புலனறிச் சேர்க்கை.
சேர்க்கை தரவு வரலாற்று கொள்வினை
ஊர்ச் சாலை(உள்ளூறும்) நடப்பே வழிவகுக்கும்
பார்ப்பதும் கேட்பதும்
ஆழ்ந்த படிப்பினை
மார்பும் வயிறும் உள்ளகத் தசைவினை.
‘தசை’வினை ‘த:ரும் ‘சை’கை ‘மொழி’
‘அசை’வினை, :அ’ங்க ‘சை’கை உயிரிணை;
‘இசை’வினை ‘இ’ங்கித :சை’கை கொள்ளும்
‘பசை’வினை ‘ப’ற்றும் ‘சை’கை தொடரனை(RNA)
தொடரனை ஒற்றும், ஒன்றும் உள்ளவை;
இடது வலது இதய ஏற்பறை
தொடராற் றிடும் தேகச் சுற்று பொலிவு
நடப்பி லாற்றிடும் கீழ் தள்ளறை.
தள்ளறை கொள்ளளவு முற்றும் சுற்றும்.
உள்ளுறை தந்த தந்தித் தந்துகிகள்(Capillaries)
அள்ளிக் கொண்டு தொடர்ந்து செல்லும்.
உள்ளி ‘சதை’, ‘ச’த்தினைத் ‘தை’க்கும்.