காட்டுச் சிலம்பன் பேசும் குருவி

காட்டுச் சிலம்பன் :
பேசும் குருவி

குருவி இனக் குழு உயிரி
தரும் யாவும் பல்லுயிர் வளம்
இருப்பிடம் தேடி பேசும் தங்கும்
வரும் வழியமைதல் அதனதன் செல்லினமே.

செல்லினம் காட்டுச் சிலம்பன், பூணில்
சொல்லுடன் நம் மொழி வளர்க
செல்வகை சொல் வழக்கில் பதிவு;
செல்லும் வழி தேடி வளரும்.

வளரும் வாழ்வில் அளவில் சிறிது,
தளமதில் பறந்திடும் ஏழெட்டினில் திரியும்;
வளமிகத் தேடி வலமிடம் பறக்கும்
இளம் குருவிக்கென சேர்க்கும் உணவு.

உணவு உண்ண ஒலியெழுப்பி உண்ணும்
கொணரும் உணவை பகிர்ந்து கொள்ளும்
கணநேரமும் உதவும், உறவினில் கூடும்,
உணவினை தன்குஞ்சுக்கும் சேர்த்திடும்; பறந்திடும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA