ஊர் பட்டி வரலாறு:
கொள்ளும் காலம் வரை செல்லும்
     தள்ளும் வரை நீடிக்கும் சிறப்பு
அள்ளும் அதிகாரம் ஆட்சி முறைமை
      உள்ளும் புறமும் வெளிப்புறத் துறை.
துறை முறையில் ஏற்படும் மாற்றம்
      அறை கொண்ட புவி நிலம்
இறை இயற்கை பங்கில் உள்ளவை
      கறை படிந்து கிடக்கும் நிலையம்.
நிலைய ஒளிபரப்பு ஒலிப்பில் படரும்
       கலை இலக்கியம் பண்பாட்டின் பயணம்
தலைமுறை தாங்கும் திறன் கொண்டே
       இலை காய் மறையான செல்லினம்.
செல்லினம் பற்றி யோர்க்கு எல்லை
     பல்வேர்கள் உள்ளத் தொடர் வண்டி
நல்லறம் நாடும் பாடும் பாட்டு
      பல் மரு உந்துவிசை ஆளும்.
ஆளும் கொள் நிறைக் குறியீடு;
     நாளும் இணையும் ஆள்வினை யாற்றல்
தாளும் துறையும் பதியும் வண்ணமே.
     வாளும் வேலுடை போர்வினைத் தவிர்.
தவிக்கும் வறுமைத் தொடர் வினையில்
     பாவிக்கும் எல்லை, ஏத  ஐயக்குறியோ?
நாவிதழ் நவிலும் நல்வினை “அரசு”
      ஆவியன்று,  “அகப்புறத்திணை  “ர”கவிசை “சு”ற்றும்புவியசைவு.

