இனிதே நிறைவு செய்யும் வரலாறு.

பறந்து சென்று பற்றி கொள்ளும்
ஆற அமர யோசி வாசிப்பு
மாற்றம் பெருகும் நாசியும் நாடும்
உறவுகள் மேம்படும் மகிழ்ச்சி தரும்.

கண்ணே கலைமானே காற்றடித்த நீர்த்தேகமே
வண்ண நிலவொளியில் வருகையை தேடுகிறேன்
உண்ணும் உணவில் மெய் சிலிர்க்கும்
எண்ணிய எண்ணம் செயல் திறனே.

இன்சுவை உன்நடை மனித இன
நன்றி பெருக்கு பணி பண்பாடு
அனைத்தும் பண்பாட்டு இயக்கச் சுற்றுலா
உனைத்தான் உரைத்தேன் விழியே புவியே.

இளம் வயதில் இருந்தே நாடு
தளம் சிறக்கும் சிறப்பே நலம்
களம் கரை சேர்க்கும் வகை
வளமான வாழ்வு நலமான தேர்வு.

நாநிலம் நாவில் கனிகாய் வகைகள்
மாநிலம் மாற்றம் போக்கும் போகும்
வானின்று வழங்கி வருதலால்
போகம்
இனிதே நிறைவு செய்யும் வரலாறு.

கரைசேர் நதிநீர் இணைப்பு நிதி
வரையறை செய்து கொள் மதி
ஆநிரையில் இருப்பு நிலை விதி
இரைத் தேடும் பொறி ஆகும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA