இனம் ஆக உலவும் உள்ளம்.
தனம் செயல் திறன் மேவும்.

பாலக வீதி பாதை நோக்கு
உலக வகை வரலாற்று பார்வை
நிலவும் நிலை நிலாவெளி தோற்றம்
பலமும் வளமும் நலம் பெறும்.

விசை கொண்ட வீச்சின் வளையம்
திசை நோக்க விண் மீன்
ஓசை விட்டு நாடும் மண்டலம்
ஆசை சுற்றில் சூரியப் புவி.

புவி சுழலும் கதிரவன் ஒளி
ஆவி வளிம அடுக்கு வாயு
ஏவி விடும் காற்றுத் திரை
அவி வழிப் பனி நீர். 

கடல் கொண்ட புவி நிலம்
உடல் பரவல் மலை மணல்
தடம் பதித்த இட வடிவம்
பட நிரவல் பச்சை உயிர்.

மனம் மெய் மூளை மூலம்
தினம் ஒரு தகவல் தரும்
இனம் ஆக உலவும் உள்ளம்.
தனம் செயல் திறன் மேவும்.

வானுலக வழி காலம் காட்டும்
வால் கொண்ட பாலூட்டி குரங்கு
இல்லாள் துணையாள் மனையாள் குழந்தை
முப்பாலுக்கு அப்பால் உண்டு இயல்பு.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA