Audio
ECOLONOMY WITH INTERDISCIPLINARY APPROACH
Audio
Audio
விண்கல இணைப்பு
மண்டல வனப்பு
விண்கலப் பிணைப்பு ஆகாய இணைப்பு
தண்ணீர் தகவல் அறியும் சேவை
கண்ணும் கருத்தாய் அனுப்பும் நுட்பம்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
வாழும் சூழலுக்கு வெளிச்சம் அளிக்கும்
அழும் குழந்தை உள்ளம் மகிழும்
புழுதி, புயல், மழை, காற்று
பழுதில்லாது செல்லும் செயலுக்கு வழிகாட்டி.
வழிகாட்டி, படிக்க பழக்கம் வழக்கமாகும்
ஊழிக்காற்றறிய உள்ளூர் வணிக சேவைபெற
நாழிப் பொழுதிற்கும் என்றும் தேவை
இழுபறி நிலை இல்லா நிலைப்பு.
நிலை கள ஆய்வுச் செயல்
வலைப்பதிவு காட்சி தரும் வகை
கலைக் களஞ்சியம் நின்று நிலைக்கும்
இலைதழை உயர்வு உயிரணுவின் உயிர்ப்பு.
தமிழ் கணக்கு – 7
பட்டய கணக்கு :
பட்டடை கணக்கு என்பது பட்டய கணக்கு என மொழிதனில் நிலைப்பட்டு உள்ளது.
பட்டடை பெயர் விளக்கம்:
செயல்பட்டு குறிக்கோளை அடைந்து தொடராக நிலைப்பது மனித நிலைப்பாடு என்போம்.
நிலைப்பாடு செயலுக்கு உண்டானவைகளை பற்றி கணிப்பில் உள்ள பதிவு பட்டடைவதை “பட்டடை கணக்கு” ஆகத் திகழ்கிறது.
இலக்கிய வரலாற்றுப் பதிவில் முதன்மை நிலையில் நின்ற கருத்தூறும் சொல்,
நெறிமுறை பதிவில் உருவாக்கம் தொல்காப்பிய பாவினத்தில் காணலாம்.
உயிரும் மெய்யும் கலந்து குறுகிய ஒலியுடன் புணர்ச்சியில் நெறிபடுதல் , பட்டடை ஆக அறிவினில் பட்டவை தொடர் நிகழ்வில் சிறந்து விளங்குகிறது.
தொல்காப்பியம் 482
எழுத்து அதிகாரம்
குற்றியலுகரப்
புணரியல்
உயிரும் புள்ளியும் எனத் தொடங்கும் பா
நெறிபடுதல் ஆக
பட, படுதல்,
பட்டு அடைதல்
“பட்டடை” என்ற சொல்லாகி நிலைக்கிறது.
தொல்காப்பியம்
பொருளதிகாரம்
989 அகத்திணையியல்
‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்., ‘ எனத் தொடங்கும் பாடலில் மூலம் நாம்
உயர்திணை, அஃறிணைக்கு
அப்பால் பட்ட “தகுதி:
த-ரம்,
கு-ணம்,
தி-றமை”
என பெற்று தொடர்கிறது.
என்றும் நிலைக்கும் நண்பர்கள், உறவினர்கள் ஒவ்வொரு பருவத்திலும், அந்தந்த காலகட்டங்களில், பழகும் மொழியோடு பட்டதொரு குறியீடு ஆற்றல் மிகவும் வேண்டிய தேவையை நிறைவேற்றுவர்.
ஒன்று எனும் இலக்கின் முதலாய் நிலைக்கும் பொருட்களின் பெயரோடு , ஆவலோடு ஆற்றும் செயல்படும் நற்செயல்கள் தொடர்ந்து நற்பயன் கிட்டும்.
இல்லாத ஒரு பொருளின் தன்மை, உற்ற வேற்றுமை பற்றித் தொடர்ந்து நின்று நிறைவு பெறும் நிலையில் பற்றித் தொடர்வது
” உற்பத்தி”
ஆகும்.
அவற்றை சேவை இலக்குகளின் அடிப்படையில் பற்றுதலுடன் அடையும் கணிப்பு முறை “பட்டய கணக்கு” எனலாம்.
பட்டய கணக்கு வரலாறு:
1913 இல் இயற்றபட்ட இந்திய நிறுமச் சட்டம், முதல்முறையாக ஒரு நிறுமம் குறிப்பிட்ட கணக்கு ஏடுகளை எழுதி பராமரிக்க வேண்டும் என நிலை நிறுத்தியது.
மேலும் இந்த கணக்கு ஏடுகளை கணக்காய்வு செய்ய குறிப்பிட்ட தகுதி உடைய ஒருவரை கணக்கு ஆய்வாளாராக பணியில் அமர்த்த வேண்டும் என்றது.
ஒருவர் கணக்காய்வாளராக பணியாற்ற மாகாண அரசிடம் இருந்து கட்டுப்பாடுக்குட்பட்ட சான்றிதழ் ஒன்றை பெற வேண்டும்.
1930 இல் கணக்காளர் பதிவேடு ஒன்றை அமைக்க இந்திய அரசு முடிவு செய்தது.
இந்த பதிவேட்டில் இடம் பெற்ற நபர்கள் பதிவுபெற்ற கணக்காளர் என்று அழைக்கபட்டனர்.
——
தமிழ் கணக்கு – 7
பட்டய கணக்கு
பற்றித் தொடரும் பற்றின் வடிவம்
தொற்றித் தொடர்ந்து பற்றிக் கொள்ளும்
மற்றும் பல தொடர்பு வடிவமைப்பு
கற்று பெற்ற கணக்கியல் பட்டயம்.
பட்டயக் கணக்கில் பற்றும் வரவும்
நட்ட இலாப பத்திபத்தியாய் பதிவு
வட்டி விகித வரிக் கொள்கை
பட்டியல் இட்டு இருப்புநிலை ஆய்வு.
ஆய்வுத் தேர்ச்சி நம்பிக்கை நாணயம்
தேய்வுப் பகுதி மீட்பில் பொருள்
வாய்ப்பு மிகும் மகிழ்ச்சி பகிர்வு
உய்ய உலவும் தென்றல் காற்று.
காற்று நீர் அகம் புறம்
தேற்றும் மொழி பேசும் வழி
பற்றிய தகவல் பெறுவதில் இன்பம்
ஏற்றத் தாழ்வு ஊறும் உயர்வே.
நாணயம் சுழல் ஆதார நம்பிக்கை.
அங்கத்தை அங்குலமாக ஆடியோடி காக்கும்
பங்கீந்து பகிர்ந்து அளிக்கும் பாங்கு
அங்கும் இங்கும் ஓடியாடிய தசை;
தங்கி வழங்கும் கடை ‘அங்காடி.’
அங்கம் ஆடும் கடைசி வரை
பங்கு சந்தை, பழைய வரி
தங்களது வருமானம் தரும் மானம்
சங்க கால நிலவரி தலைவரி.
தலைவரி ஆள்வரி நாணய வரிவகை
கலை இலக்கியம் பண்பாடு வரலாறு
ஆலையியந்திரம்; கணினியெணினி, துணைக் கருவி
வலைப் பக்கம், ஊராட்சி, உலகாட்சி
நிலையாட்சி.
நிலைகொள்ளும் யாவும் நிலம் கொள்ளுமா?
ஓலைச் சுவடிபதிவு அகராதி
இலைதழை உண்ட மெய் ஞானம்
வலைப்பதிவு வரை சுழலாளாதார குடும்பம்.
குடும்ப நலம், நீதிமன்றம் அரசு நிறுமம்
நடுங்க வைக்கும் போரிடமா மாநிலம்?
உடுப்பு உடுத்தி உண்டுவாழ கண்டம்
துடுப்பு செலுத்தி கடக்கும் கடல்.
கடல்சார் வரலாறு கணிப்பில் பயணம்
உடல்சார் உயர உயிர் திணையாய்
படல் மறைப்புதட்டி தூங்கும் காலமொன்று
ஊடல் கூடல் நிகழ்வு வீடுபேறு.
வீடுபேறு, இறைவணக்கம், கல்வியறிவு பெற்றோர்
நடுத்தர வர்க்க இனத் தொழிலே ;
ஏடு படிப்பறிவே சார்புத் திறன்
நாடு நாளும் புதுப்புதுவிசையே புவி.
புவிக்கோளம் சுற்று முற்றுப் பார்வை
ஏவிவிடும் ஏவுகணை நாடித் துடிப்பு
தாவி தவழ்ந்த காப்பீடே அறிவியல்
சாவிகொண்டு இயங்கும் மனமே வாய்ப்பு.
வாய்ப்பு வழங்கி இயங்கும் படிக்கட்டு
தாய் தந்தையர் சேவை நிலையம்
ஆய்ந்து அறிந்து கொள்ளும் முறை
பாய்ந்து செல்லும் இயக்கம் பரவட்டும்.
பரவி விடும் அளவுகோல் குடியரசு
புரவி கொண்ட வேகம் இயற்பியல்
தரவு மதிப்பு பெறும் வரையறை
இரவு பகலும் அறிவுப் பரவல்.
சுதந்திரநாள் பாயிதழ் :
சுதந்திர மூலம் படரும் கொடி;
ஏதம் பிழைகள் காண்; சீரமை
பதம் ஓர் படிமலர்ச்சி படிவம்
கதம்ப மாலை கோரும் ஒற்றுமை.
ஒற்றுமை ஒற்றை பக்கம் கொண்டு
பற்றி கொள்ளும் தளத்தில் சுழல்;
வற்றாத மலர்கள் பூக்கும் நாளும்
நாற்றங்கால் நன்மை தரும் தொடர்ச்சி.
தொடர் ஆகும் பற்று வரவு
மடல் வழியில் மொழி பேசும்;
தடம் பதிக்கும் சேவை சேர்க்கும்
படம் பார்க்கும் வையகத் தலைமை.
தலைமை ஏற்று நடத்து நம்
வலைப் பின்னல் இயல்பு நிலை;
இலை தழை மணி விதைகள்
கலைகள் பொங்கும் பெருகும் சுழலாளாதாரம்.
பாவிய ‘பு’து ‘வி’சை, ‘புவி’
நீரடி பாரடி திணையடி துறையடி
தேரடி நாளடி தளயடி மடிப்படி
போரடி நாடி ஆடி பாடி
ஈரடி நாலடி பாடிடும் அறமடி.
அறம் அறிவுசார் கொள்ளும் கைத்தலம்(உள்ளங்கை)
மறம் பண்பாட்டின்(பத்து பண்பாடுகள்) திறன் சேர்க்கை
குறம்(குறி சொல்லுதல்) வஞ்சி குறவஞ்சி பாட்டு
வறம்(வறட்சி) தளம் இலாமை சிறப்பு.
சிறப்பு மலர் சீரிய பணி
பறந்து சென்று பற்றும் ஆய்வு
இறக்குமதி ஏற்றுமதி வணிக வாய்ப்பு
ஏற இறங்கிச் செல்லும் புவியடி.
புவியடி நாளும் நிகழும் நிலையடி
கவிதனில் மொழி பேசும் அணி
ஓவியம் ஒளி கால வகை
பாவியப் ‘பு’து ‘வி’சை ‘ புவி.’
ECOLONOMY Paradigm