நாடிச் செல்வதை நாடும் தேடும்.

நாடிச் செல்வதை நாடும் தேடும்
ஓடி விளையாடுவது நரம்புத் துள்ளல்
ஆடி மாதம் அம்மியும் நகருமென்பர்
இடியும் மின்னல் விண்ணுலக ஆற்றல்.

எல்லோரும் ஓர் அறிமுக உயிர்
பல்லாயிரக் கணக்கான உயிரணுத் தொடர்
நல்லோர் மனிதம் கற்று கொள்வோரினிலை.
வல்லுநர் மெய்யியலில் சத்தில் தைக்கும்.

சத்தில் தைப்பது வளத்தினில் சுழலும்
ஆதரவுக் கோட்பாடுகள் ஆற்றுவதற்கு கூடும்
இதயம் இதமாக இயங்கும் இயக்கம்
உதவும் கரங்கள் தகவலும் தரவும்.

தகவல் தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு
நகமும் விரலும் இணைந்தே செயல்படும்
உகந்த நேரம்தான் ஆளுமை ஆளும்
தகுதி தரம் குணத்தால் திறனாகும்.

மக்கள் அனைவரும் மறைவஞ்சலி செலுத்துவோம்.

மக்கள் அனைவரும் மறைவஞ்சலி செலுத்துவோம்.

நல் சொல் ஊரும் தரும்
‘நெல்லை’ கண்ட முத்து ‘கண்ணன்’
சிலர் கருத்தில் தமிழ் கடலாகும்.
பல  முறைமைக்கு அதுவே சான்று.

சொற்சுவை கூட்டும்  சுழல் பேச்சாளன்
தங்கத் தமிழ் இலக்கிய நோக்கன்
பங்கம் இல்லா சொற்பொருள் குவிப்பான்
எங்கும் எப்பொழுதும்
நிலைக்கும் திறனாளன்.

பகுத்து அறிந்த அறிவுச் சாறினை
தொகுத்து வழங்கிய காணொளி பகிர்தலில்
அகத்தில் நிற்கும் பண்பாட்டு சொற்பொழிவினை
மக்கள் அனைவரும் மறைவஞ்சலி செலுத்துவோம்.


புனித புதிய வழி நாளும் ஆகும்.

பாலக வீதி உலா வரும் வேகம்
காலத்தின் தேர்வு மூலதனப் பயணம்
உலகத் தொடர்பு கொள்ளும் மண்டலம்
பலதிறன் கொண்ட
சூரிய விசையும்.

பாருக்குள் பாரு நொடித் தொடரே
கார்கால மேகம் பேறுகளும் புவியமைவும்
தேர்வு நிலையில் சார்பு கொள்ளும் நிலம்
வார்ப்புரு உருவகம் மனித எல்லையோ!

எல்லை வகுத்து விளக்கம் தருவது
தொல்லை தொடுக்கும் போர்க்குண வாழ்வு
பொல்லாப் பேரழிவு ஆயுத மனமோ!
நல்லவை நிலைக்க பேர்விளங்க நாள்படும்.

மனமே நலமாக உறவாக வழித்தேடு
தனம்தரு புவியை தடமே அறிவு
மனித குணமொரு ஒரே இனமென்று
புனித புதிய வழி நாளும் ஆகும்.

சத்தியம் செய் பலனை காணலாம்
உத்திரம் உள்ள ஒன்றிய உலகம்
ஒத்திகை பார்த்துக் கொண்டே இருக்கும்
இத்தகைய செயலே என்றும் நிலைக்கும்.

ஒலி மொழிகளை எவ்வாறு உருவாக்குகிறது – 1

48 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பல்லுயிர் முதுகெலும்பு இல்லாத கடல் வாழ்க்கை நிகழ்வுகளின் காலம் ஆகும்.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/Digital-e1mg82k

48 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பல்லுயிர் முதுகெலும்பு இல்லாத கடல் வாழ்க்கை நிகழ்வுகளின் காலம் ஆகும்.

எணினி என்றால் என்ன
எணினி Digital என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக எவ்வாறு ஏற்றுக் கொள்ளலாம்?

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/Digital-e1mg82k