தினமணி செய்திதாளில்- செயல் மன்றம் விமர்சனம்.

தினமணி இ-செய்தி தாளில்

கீழ்க்கண்ட தலைப்புகளில் செயல் மன்றம் விமர்சனம்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!

1. பேசு , உருவாகு, தகுதி ஆகுமே என கரந்துறை பாக்களில் கூறலாம்.

பேசு:
பே-பேறுகளை
சு-சுகமாக்கு,

உருவாகு:

உ-உண்மையின்
ரு-ருசிகரத் தன்மையை
வா-வாழ்க்கைகுணங்களாக்கு,

தகுதி:

த-தரமும்,
கு-குறிக்கோளும்
தி-திட்டமிட்ட வாழ்க்கையும் நிரந்தரமாகும்

ஆஆகுமே:

ஆ-ஆக்கப்பூர்வ
கு-குதூகல குடும்பமாக
மே-மேம்படும்

என்பதை அனைவருக்கும் உணர வைப்போம்.

2. மண்ணை நேசிப்போம், மக்களைக் காப்போம்!

மக்களின் வாழ்வாதாரம் விஞ்ஞான தொழில் நுட்பங்களை மேம்படுத்துவது, மேல்தட்டு மக்களின் அதி நவீன வசதி வாய்ப்பிற்குத் துணை செய்கிறது.

விவசாய உற்பத்தி அடிப்படையை தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கியத் தேவை.

அரசின் எரிபொருளுக்கு நிலையான பல தனியார் நிறுவனங்களில் துணை செய்கிறது என்ற காரணத்திற்காக எந்த ஒரு அரசும் தாம் ஆட்சி செய்யும் காலங்களில் அடிக்கலை நிலைநாட்டி தமது சாதனையை என அடுத்த தேர்தலுக்கும் உத்திரவாத படுத்திக் கொள்கிறது.

இந்த தொழில் நுட்ப வசதிகள் அனைத்தும எல்லா மாநிலங்களுக்கும் பகிரப்படுவதால், தமிழ் நாடு நிரந்தரமாக நீர் வசதியின்மைக்கு உள்ளாகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

மக்கள் நிலையான வாழ்வு தான் முக்கியம்.

3. நீதிமன்றத் தீர்ப்பும் நீர்நிலைகள் பாதுகாப்பும்!

பெரும்பாலான நீர் நிலைகள் நகரப் பகுதிகளில் அரசே மனைப் பட்டா வழஙகி குடி இருக்கும்படி செய்து உள்ளது தான் கடந்த 50 ஆண்டு கால அரசின் சாதனை.

நீர்நிலைகளை பராமரிக்காமல் குடியிருப்பாக மாற்றினால், குடிக்க நீர் எப்படி கிடைக்கும்?

நாம் உலகில் வாழ்கின்ற ஓர் உயிர்.

நமக்குத்தான் அனைத்தும் சொந்தமென ஆக்கிரமிப்பு செய்து கொண்டால் நீர்நிலை எப்படி உயரும்?

போர்க்கால அடிப்படையில் நீராதார பெருக்கத்தை என்றும் செயல்படுத்துவதே நல்ல செயல்களுக்கு ஓர் வித்தாகும்.

மெய்ப் பொருள் காண் – தொல்காப்பியம்

மெய்ப் பொருள் காண்- தொல்காப்பியம்

1. எழுத்துக்களின் வகை:

‘ தொல் ‘ என்ற சொல்லுக்கு ‘ தொன்மை ‘
என்ற பொருளாகும்.

‘ காப்பு ‘ என்ற சொல்லுக்கு ‘ காப்பு, காத்து ‘ நிற்கும் எனப் பொருள்படும்.

‘ இயம்பு, இயல்பு ‘ என கருத்தோடு
‘இயம் ‘ என்றாகும்.

‘ தொல் ‘ என்ற சொல்லோடு ‘ காப்பு ‘ என்று
சொல்லை இயல்பாக சேர்த்தால் ‘ தொல்காப்பியம் ‘
என உருப் பெறுகிறது.

தொன்மை காலத்தில் இருந்து தமிழ் மொழியை எழுத்துருவில் மரபு உருவில் காத்து நிற்பது தொல்காப்பியம் ஆகும்.

‘ தமிழ்த் தானே வரும் ‘ தமிழர்களாகிய நாமறிவோம்.’
குழந்தைப் பருவத்திலிருந்தே நம் தாய் மொழி தமிழில் பேசும் பழக்கத்தில் இருப்பதால் பேச்சுத்தான் நாம் முதலில் அறிவோம்.

எழுத்தை பின்பு முறைப்படி படிக்கும்
பொழுதுதான் அறிவோம்.

தொல்காப்பியம் 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதியுடன் பதிந்ததை இங்கு பகிர்கிறேன்.

சைகையின் மூலமும், வரிகளின் மூலமும் உருவான தமிழ் எழுத்துக்களை, தொகையையும் வகைப்படுத்தி முறைப்படுத்தி பெயரையும் கூறும் நூல்,
‘ தொல்காப்பியம் ‘.

வாயில் உச்சரித்து உயிர்ப்புத் தன்மை கொண்ட எழுத்துக்களை உயிர் எழுத்துக்களாக பகிர்கிறோம்.

உயிர் எழுத்துக்களைக் சொல்லும் பொழுது வாயில் இருந்து சொற்கள் எழும். உதடுகள் ஒட்டாது.

உயிரின் ஓசையாக மலரும்.

‘ அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஔ,ஃ’ என்றாகும்.

மெய் எழுத்துக்களைச் சொல்லும் பொழுது
வாய் இதழ்களை ஒன்றொடு ஒன்று கூடி,
உதடுகள் ஒட்டும்.

மெய் எழுத்துக்கள் கூறும் பொழுது
நம் உடம்பு ஒட்டும்.

‘க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,

ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன ‘

1. எழுத்தெனப் படு(ப)வ
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

எழுத்து எனப்படுவது என்னவென்றால்
‘அ ‘ முதல் ‘ ன ‘ வரை உள்ள முப்பது எழுத்துக்களும் சார்ந்து வரும்.

‘அ ‘ முதல் ‘ ஃ ‘ வரை உள்ள 12 உயிர் எழுத்துக்களும்,

‘ குறில் ‘ எழுத்தாக அ,இ,உ,எ,ஒ என ‘ 5 ‘ எழுத்தும்
‘ நெடில் ‘ எழுத்தாக ஆ,ஈ,ஊ, ஏ, ஐ,ஓ,ஔ ‘ 7 ‘ எழுத்தும்
‘ ஃ ‘ என்று ஆயுத்த நிலையில் உள்ள
ஆயுத எழுத்துக்களாகும்.

‘க ‘ முதல் ‘ ன ‘ வரை உள்ள 18 மெய் எழுத்துக்களுடன் க், ங் என்று ‘ அனுகரண ‘ ஓசையை என்று நம் மெய்யாகிய உடம்போடு உருவ வடிவம் பெற்று நம் பிறப்பு இயல்போடு சேரும்.

எழுத்து என்பது சொல்லில் முடியும் இலக்கு அக்கணத்திலேயே நிற்கும்.

இக்கூற்று தொன்று தொட்டு வரும் மரபாகும்.

‘ மரபு ‘ என்ற சொல்லை நாம் கரந்துறையில்

‘ ம-மக்களின்
ர-ரசனையைப்
பு-புரிதல் ‘
எனப் பகிர்வோம்.

எழுத்துக்களின் இலக்கை அக்கணமே நிர்ணயித்து
மக்களின் புரிதலோடு விளங்கச் செய்வது
நமது தமிழ் மொழியின் தொன்மை கால மொழியான
தொல்காப்பியம் ஆகும்.

மொழி முதலாக ‘ வரி ‘வடிவத்திலும்
பின்னர் ‘ ஒலி ‘ உருவத்தையும் பெற்று இருக்கிறோம்.

மெய்ப் பொருள் காண் -எழு

மெய்ப் பொருள் காண் – ‘ எழு ‘

எழு, நட,ஓடு, என்ற வினைச்செயல்கள்
மனித இனச் செயல்களின் அடிப்படைக் கூறுகளாகும்.

‘ எழுந்திருக்கமாட்டான் போல ‘
என பேச்சு வழக்கில் கூறுவோம்.

பொதுவாக ‘ எழு ‘ என்ற சொல் உத்வேகம் இல்லாதவர்களை உத்வேக படுத்தும் சொல்.

சொல்லின் விளக்கம்,
சொல்லில் அமைவது சொற்களின் சிறப்பாகும்.

எந்த மொழியிலும் மனித சிந்தனயில்
அமைவது தான் எழுத்து.

உயிரை அடிப்படையாக கொண்ட எழுத்துக்களை உயிர் எழுத்து என்கிறோம்.

தமிழில் ‘ எழு ‘ என்ற சொல்லில்
‘ எ ‘ என்ற உயிர் எழுத்தும்
‘ ழு ‘ என்ற மெய் எழுத்துடன்
நம் உயிரை உடலுடன் எழச் செய்கிறது.

அவ்வாறு நாம் எழு என்ற சொல்லை கூறும் பொழுது ‘ உற்றுப்பார் ‘ என்ற சொல் ‘ உத்து ‘ என்றாகி
‘ எழு ‘ என்ற சொல்லில் சேரும் பொழுது ‘ எழு(உ)த்து ‘ என்றாகி நிலைப் பெற்று உள்ளது.

மொழிகளில் உள்ள ஒவ்வொரு எழுத்தும்
எழுதி உள்ளதை,
நாம் உற்றுப் பார்க்கிறோம்;
அறிந்து கொள்கிறோம்.
எழுத்தை உற்றுப் பார்த்து உத்தேசமாக அறிந்து
மூலையில் பதிவு செய்து கொள்கிறோம்.

தமிழ் இலக்கணத்தில் எழுவாய் என்ற சொல் பெயர்களைக் குறிக்கும்.
ஒவ்வொரு பெயரையும் அழைக்கப்படும் பொழுது
நம் ‘ வாய் ‘ இல் இருந்து ‘ எழு ‘ வதனால்,
‘ எழுவாய் ‘ என்கிறோம்.

ஒவ்வொரு எழுத்தும் சொல்லப் படும் பொழுது எழுத்தை அறிந்து உத்தேசமாக நம் அறிவு அடுக்கில் சேர்க்கப்படுகிறது.

‘ எழுந்து நட ‘ என நடப்பதற்கு கூறவோம் .

எழு(உ)ந்து என்ற சொல்லிலும் ‘ எழு ‘ என்ற சொல்லில் ‘ உந்து ‘ என்ற சொல்லாகிய
நகருதலைக் குறிக்கும் என்பதை நாம் அறிவோம்.

எழுந்து அர்த்தத்தில் கூறும் பொழுது எழு(உ)ந்து என்ற சொல்லும் உருவாகி உள்ளது.

‘ எழுச்சி பெறு ‘ என்று கூறுவோம்.
‘ எழுச்சி ‘ என்ற சொல்லை
எழு உச்சியில் எழு(உ)ச்சி என்று கூறலாம்.
ஒரு செயலுக்கு முக்கியத்துவம் பெற வேண்டும் எனில் அந்த உயர்நிலை எழுச்சி பெற்று அத்தியாவசியமாக நிறைவேற்றப்படும் நிலைக்கு
கொண்டு செல்லும்.

‘ எழுமை ‘ என்ற சொல்லில் ‘ எழு ‘என்ற சொல்லில்
‘ மை ‘ என்ற சொல்லுடன் ஒருமை படுத்தும் பொழுது ஒற்றுமை உண்டாகும்.

கிட்டத்தட்ட ஆங்கிலத்திலும் ‘ மை ‘ என்ற உச்சரிப்பு தன்னகத்துடன் ஒற்றுமைபடுத்தும் சொல்லே.

எழுமை என்ற சொல் ஒற்றுமையுடன் உயர்வைக் குறிக்கும்.

‘ எழுமின், விழுமின் ‘
என்ற விவேகானந்தர் கூற்று நமக்கு
உத்வேகம் தரும் சொற்கள்.

‘ எழு ‘ என்ற சொல்லை ‘ மின் ‘ என்றச் சொல்லுடன் இணையும் பொழுது ‘ எழுமின் ‘ மின்னல் வேகத்தில் நமக்கு முன்னேற்றம் தரும் சொல்லாகும்.

இவ்வாறான பல ‘ எழு ‘ என்ற சொல் உண்மையிலேயே உயர்வினைக் காட்டும்.

எழுதல், எழுகை என்ற சொல்லும் மனித வரலாற்றிலும், தமிழ் மொழியிலும் பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் குறிக்கும்.

மெய்ப் பொருள் காண் – ஊர்

மெய்ப் பொருள் காண் – ஊர்

‘ ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிக்கிட்டேன்
கண்மணி, கண்மணி ‘

என்ற பாடலுக்கேற்ப ஊரை
தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் உலகத்தையும் புரிந்து
கொள்ள வேண்டும்.

உலகத்தை ஊகத்தால் அறியலாம்.
ஊரை உணர்ந்தறிந்து கொள்ளலாம்.

‘ ஊ ‘ என்ற உயிர் எழுத்தோடு ‘ ர் ‘ என்ற மெய்
எழுத்தில் உருவானது ‘ ஊர் ‘ என்ற சொல்.

ஊக்கமாக செயல்பட்டு இருப்பதற்கு ஊர்ந்து
நகர்ந்து நமது பணிகளைத் தொடர்வோம்.

ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்ப சகலமும்
சில பேர்களுக்கு ஊரின் எல்லையோடு
வாழ்க்கை முறைமை முடிந்து விடும்.

ஊர்ந்து தான் மனித இனம் தான் உயிருடன்
வாழக் கற்றுக் கொண்டது.

‘ எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா ‘

என்ற பாடலும்

‘ சொர்க்கமே என்றாலும் அது
நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும்
பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா ‘

என்ற திரைப் பாடல்களுக்கு ஏற்ப
நாம் எங்கு பெற்றோர், உற்றாருடன்
வளர்கிறோமோ அந்த ஊர்
நம் சொந்த ஊர், பூர்விகம் எனச் சொல்கிறோம்.

நாம் எங்கு தொழில் நிமித்தம் தங்குகிறோமோ
அங்கு சொந்த ஊராக்கிக் கொள்கிறோம்.
தொழில் நிலைப்பட்டவுடன் உடைமைகளை பெருக்கிக் கொள்கிறோம்.

நம்மூர், அசலூர், வெளியூர், என்று ஊரின் பின்னடைவுச் சொற்களிலேயே ஒவ்வொரு ஊரின் பெயரும் அமைந்து விடுகிறது.

‘ திரு ‘ என்ற முன்னோட்டுச் சொல்லில் தான் பல ஊர்கள் உள்ளன.
‘ கோட்டை ‘ என்ற பின்னோட்டுச் சொல்லிலும் பல ஊர்கள் உள்ளன.

புரம், பட்டி, நகர் என பல சிறப்புத் தன்மையுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் தனிப் பெருமையோடும் சிறந்து விளங்கும்.

திருச்சியிலும் ஊர், நகர் புரம் எனப்
பழம் பெயர்களைக் கொண்டது.
உறையூர் ஒரு காலத்தில் சோழ நாட்டின் தலை நகராக இருந்தது.

உறை ஊரை, உறைவிடம் என்று நாம்
குடியிருப்பதற்க்கு அழைப்போம்.

பொன் நிறம் உடைய மலையை பெற்று இருப்பதால் ‘ ‘ ‘ பொன்மலை ‘ என்றும், மலையில் கோட்டை தடுப்புச் சுவர் என்ற உள்ளதால் ‘ திருச்சி மலைக்கோட்டை ‘ எனப் பெயர் பெற்று உள்ளது.

காவிரி நதி இங்கு தான் விரிந்து பரந்து உள்ளதை பிரிக்கப்பட்டு தஞ்சையில் தஞ்சம் புகுந்து செல்கிறது.
நீர்க்கால்வாய் விரிந்து செல்வதனால் கால் விரிந்து ‘ ‘ கா(ல்) விரி(ந்து) ‘ காவிரி ‘ எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

தமிழ் மொழி தரமான சொற்களுடன் இணைக்கும்
ஓர் செம்மொழியாகும்.

மொழியின் சிறப்பை நம் ஊரின் பெயரிலும் காணலாம்.

தினமணியில் விமர்சனம் : தலைப்பு: புதிதாக பிறக்க வைக்கும் வாசிப்பு

தினமணியில்

புதிதாய்ப் பிறக்க வைக்கும் வாசிப்பு!

தலைப்பில் விமர்சனம்.

புது அகத்தைக் காட்டும் புத்தகம்.

வாசி, நேசி எனும் பழக்கம் உருவாகும்.

நல்ல பல நூல்களைத் தேடி படிப்பது
நமது அகத்தை அண்டத்தை
ஒரு துளியேனும் அறிய உதவும்.

சில நூல்கள் நல்ல பல கருத்துக்களை
காலம்தோறும் செயல்பட வைக்கும்.

கட்டுரை ஆசிரியர் பதிப்பது போல உயிரும் உடலும் இணையும் கருத்துடன் கனிந்து காதலாகும்.

மலர் கொத்தான கதைப்பூங்காவின்
நந்தவனத்தை அலங்கரிக்கும்.

வாழ்க்கை பொழுது போக்கு இடம் அல்ல.

சித்திரங்களை உயிரோவியமாக்க முனைந்து செயல்பட உதவும்
ஒரு ஊட்ட சத்தாக புத்தகம் விளங்கும்.

வீடும் நாடும் நூல் வெளியீடு

‘ வீடும் நாடும் ‘ நூல் வெளியீடு –

திருச்சி இலக்கியத் திருவிழாவில்

உரத்த சிந்தனை-வாசக எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் மாத இதழ் நடத்தும்

‘ இலக்கியத் திருவிழாவில் ‘

‘ வீடும் நாடும் ‘ , புது அக நூல்,

கி.நடராஜன் எழுதிய

‘ வழி தெரியா பயணம் ‘ கவிதை நூல்
‘ எதிரும் புதிரும் புதிர் கணக்குகள் ‘ -நூல்

‘ நூல்கள் வெளியீடு,

திறனாய்வரங்கத்தில்

நூல் திறனாய்வில்

1. ” மகளிர் 400 ” 2. ” விடியும் நேரம் ”

வாழ்த்தரங்கில்

திரு. உதயம் ராம், செயலாளர்,

உரத்தசிந்தனை சங்கம்,

சிறப்புரை:

கலைமாமணி

முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்

‘ மற்றும் கலந்துரையாடல் ‘

28-04-2019 காலை 10.20 மணியளவில்

அருண் ஹோட்டலில் நடை பெற உள்ளது.

‘ இலக்கு இயல்பாக உள்ளவர்களை ‘

அன்புடன் அழைக்கிறோம்.

வணக்கத்துடன்

தங்கவேலு சி

மறைக்கப்பட்ட இந்தியா -நூல் விமர்சனம்.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய
‘ மறைக்கப் பட்ட இந்தியா ‘
‘ தாகூரின் கல்விமுறை ‘

என்ற தலைப்பு குறித்து விமர்சனம்

‘ சாந்தி நிகேதன் பல்கலைக்கழக வளாகம்
ஒரு பயிற்சி பட்டறை.

இங்கு நாடகம், இசை போன்றவை கற்பிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்வதற்கும் உருவாக்கப் பட்டது.

மரம் மற்றும் கல்லில் சிற்பம் செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

கிராமப்புற வாழ்வு குறித்தும், வேளாண்மை குறித்தும் தனிப் பிரிவாகவும், கணிதம், புள்ளியியல் இயற்பியல், தாவரவியல், உயிரியல், வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்திய கலாச்சாரம், இலக்கியம் வங்காளம் ஆங்கில இலக்கியங்களும் போதிக்கப்பட்டன.

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் தாகூரின் பிள்ளைகள் சேர்க்கபட்டன. இங்கு லட்சக்கணக்கான புத்தகஙுகளைக் கொண்ட நூலகம் இடம் பெற்று உள்ளதையும் விவரிக்கிறார். சீன, ஜப்பான் அரசு வழங்கிய புத்தகங்கள் மற்றும் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன.

எஸ். ரா எந்தக் குறிப்பையும் நேரில் சென்று பார்த்து அனுபவித்து எழுதும் பழக்கம் கொண்டவர். அதனால்
அவரது பதிப்புகள் அனைத்தும் படித்தோம் எனில் நாம் நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவம் படிப்பவர்களுக்கும் ஏற்படும்.

நேரு தமது மகள் இந்திரா காந்தி அங்கு பயிலச் செய்தார். ரவீந்திரநாத் தாகூர் தான் இந்திரா என்ற பெயருக்கு பின்னால் பிரியதர்ஷினி என்ற பெயரைச் சூட்டினார்.

பள்ளிப் பருவத்தில் இருந்து கல்லாரி வரை அனைத்துத் துறைகளும் இந்த ஓரே பல்கலைக் கழகத்திற்குள் இருக்கின்றன ‘

என்ற இதன் தனிச் சிறப்பை குறிப்பிடுகிறார்.

காந்தியும், தாகூரும் நண்பர்களாயினும், அவர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை பதிகிறார்.

மகாத்மா காந்தி என்ற பட்டத்தை
காந்திக்கு அளித்தவர் தாகூர்.
தாகூர் சுதந்திர போராடத்தில் நேரடியாக பங்கு கொள்ளாததை காந்தியடிகள் விமர்சனம் செய்ததை குறித்து பதிகிறார்.

ஆனால் இ.ஜே. தாம்சன் என்ற ஆங்கிலேயர் தமது நூலில் தாகூர் செய்த வீராவேச பிரசாரங்களைப் பற்றி
எழுதி இருக்கிறார்.

1913-ல் தாகூருக்கு நோபல் வழங்கபட்டது, பின் 1915- ல் ‘ ஸர் ‘ பட்டம் வழங்கப் படடது.
1919ல் ஏப்ரல் 13-ம் தேதி ஜாலியன் வாலாபாக் தொடர் துப்பாக்கி நடத்தப்பட்தை கண்டித்து, ‘ ஸர் ‘ பட்டத்தை துறந்தார்.

இயற்கையோடு இணைந்த கற்பித்தல் முறையில் மாணவனது உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒழுக்க ஆன்மிக வளர்ச்சி ஆகிய மூன்றும் வளர்ச்சியடையும் என தாகூர் நம்பினார்.

இந்த புத்தகம் மறைக்கப் பட்ட இந்திய வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றை வெளிக் கொணர்ந்து உள்ளார்.

வரலாற்றை அறிய, படிக்க வேண்டிய புத்தகம் ஆகும்

உரத்த சிந்தனை 35ம் ஆண்டு மலரில் – கரந்துறை பா

‘ இல சில ‘ பயணம் – கரந்துறை பா

இ(ன்மையிலிருந்த) ல(ட்சியம்)
சி(று) ல(ட்சிய) பயணம்.

இன்மையிலிருந்து லட்சிய சிதறல்கள்
வெடித்து சிதறல்களாகி வெளிச்சங்களுக்கான பயணம்.

சிதறல்கள் உருண்டு திரண்டு கோளங்களாகின
கோளங்கள் பாதைகளாகிய வெளிச்சத்தை சுற்றுகின்றன.

வெளிச்சம் வெட்ட வெளிச்சமாகி
தமது வட்டத்தை சுற்றுகின்றன.

வெளிச்சத்தின் வட்ட எல்லைக்குள்
பல கோளங்கள் சுழல்கின்றன.

கோளங்களும் தனக்குள்ளும் வட்டமிடுகின்றன
வட்டங்களும் வடிவம் பெற்று நேர எல்லைக்குள்
கடக்கின்றன.

நேர எல்லைகள் காலத்தை நிர்ணயித்து யாருக்கும்
காத்திருக்காமல் காலத்திற்குள் சுற்றுகின்றன.

கோளங்களுக்குள் ஓர் கோளம் பூமி, புவியின் மிடுக்கு.
புவியின் ரிங்காரம் மலைகளும், கடல்களும், காடுகளும், தட்டு தடுமாறும் தரைகளும்.

பூமியின் மிடுக்கில், ஊற்று நீர் சுனைகளாகி,
நீர் தனைப் பெருக்கி, பள்ளத்தை நோக்கிய பயணம்.

பூமியின் வட்டத்தில் கரு மேகங்களும் தோன்றும்
கரு மேகங்கள் மழைத்துளியாகி பூமியை நோக்கி காற்றின் விசையோடும் பயணம்.

மழை நீர் துளி பட்டு பிரகாசமளிக்கும்
புல் பூண்டு, தளிர் செடி கொடிகள் வளர் பருவத்தை
நோக்கிய பயணம்.

வனங்களும், காடுகளும் மலைகளும் மடுவுகளும்
தம் இருக்கையில் தளர்வில்லா செருக்குடன் பயணம்.

ஓரினம், ஈரினம், மூவினம், நான்கு, ஐந்து இனமென
ஆயிரமாயிரம் உயிர்களும் பூமிதனில் லட்சியத்தை நோக்கி ஆர்ப்பரிக்காத பயணம்.

ஆறறிவு உள்ளவன் நாம், அடங்கமாட்டோம்
நம் எல்லைகளை விரிக்க.

இன்மையில் உள்ள நம் லட்சியம் நியாயமான
உயிரினமாக நம் பயணம் சிற்சில லட்சிய எல்லைக்குள் பயணிக்கட்டுமே.