ஒளி

உம் ஒளி
எம்மில் வெளிச்சம் .
உம் வரவு ,
எம்மில் பரவும்புத்துணர்ச்சி.
உம் திசை
எமக்கு உவகை .
உம் பவனி,
எம் வழிகாட்டி.
பகலில் உம்மறைவு,
எம் வேதனை .
பக்குவமாய்,
ஒளிந்து மறைந்து
இரவில் வருகின்றாய் .
பகலில், பகலவன்
மிளிர்வதால் ,
நீ மறைக்கப்படுகிறாயோ !

நிலவே ,
நி ம்மதியின்
ல ட்சிய
வே ள்வியே .

செயல் மன்றம் -ஓர் ஒப்பீடு

செயல் மன்றம் – பல மன்றங்களுடன் ஓர் ஒப்பீடு .

பல செயல்கள் ஒருங்கிணைந்து மனித இன செயலால் உருவானவைகள்

தான் நாம் உபயோகப்படுத்துகின்ற அனைத்துப்பொருட்களும் .

நமக்கு தேவைப்படும் பொருட்களை மேலும் தேடிக்கண்டுபிடித்து

உற்பத்தி செய்கிறோம் .

தேவைப்படாதவைகளை விட்டு விடுகின்றோம் .

இவ்வாறாக சேர்க்கப்படும் பொருட்களும், அமைப்புகளுமே பல

மன்றங்களாக நம் உலக நடவடிக்கைகளில் பவனி வருகின்றன .

எனவே , மனித வாழ்விற்கு செயல் தான் முக்கியம் .

இவ்வாறான செயல்களுக்கான மன்றமே செயல்மன்றம் .

செயல் மன்றம் , சட்டமன்றமாக, பாராளுமன்றமாக, நீதி மன்றம் என பல

நடவடிக்கைகள், மனிதர்களை ஒழுங்கான செயல்களுக்காக

உருவாக்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன .

செயல் , மனிதர்களின் ஒழுங்கு .

பல்வேறு செயல்கள் மனிதர்களை ஒருங்கிணைக்கும் .

செயல்கள், தவறுகளை ஒழுங்குபடுத்தும் .

பொருட்கள் நிலைத்து நிற்பதற்கே பல செயல்களை ஒருங்கிணைப்பதில்

தான் நிலைத்து நிற்கும் .

மனிதர்கள் உருவாக்குகின்ற கண்டத்திற்கான , நாட்டிற்கான

மாநிலத்திற்கான, மாவட்டத்திற்கான என பலப்பிரிவுகளின்

எல்லைக்கோடுகளை , இப்பூமி அறிவதில்லை .

நாமே ஏற்படுத்திக்கொள்கின்ற ஒழுங்கு நடவடிக்கைகளே இந்த

அமைப்புக்களாகும் .

ஒழுங்கு நடவடிக்கைகளில் , இலக்கியமும் பங்கு

பெறும் ஓர் கலையாகும் .

இலக்குகள் இயல்பாக நடைபெறுவதை இலக்கியம் .

இலக்குகளை இயல்பாக விவரித்து கூறும் மனித பண்புகளில் கதை ,

கவிதை முக்கியத்துவம் பெறுகிறது .

கதை , கற்பனையை சிந்தையில் நூற்கும், தையல்முறையே

கதையாகும் .

கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையில் உருவகம் பெற்றாலும்

உண்மை வடிவமாக காவியக்கதைகள், நில அமைப்புகளில்

சித்தரிக்கப்படுகின்றன .

கவிதை , உருப்பெறுவதும் கற்பனையை உலாவ விடுவதேயாகும் .

இவை நம் உணர்வுகளை நிம்மதிப்படுத்துகின்றன .

உண்மையும், இதில் பெரும்பாலும் வெளியிடுகின்றோம் .

நம் தேவையான பொருட்கள் நிலைப்பெறுவது

நம்முடைய தொடர்செயல்களே .

நம் தேவைகள் ஆயிரம் . நம் ஆற்றல்கள் நிலைப்பெற தொடர் எரிபொருள்

சூரிய ஒளி ஆற்றலே.

நம் கண்டுப்பிடிப்பும் , சூரிய ஒளி ஆற்றல் நிலைப்பெறுதல் நம்

தற்பொழுதான முக்கியசெயல்களில் ஒன்று .

தகவல்களே, மனித சமுதாயத்தை மேம்படுத்துகின்றன.

நடுவிரலும்-பொருளும், மோதிர விரலும், யாப்பிலக்கணமும்

பொருள் அறிய, நடு விரல்
——————————

பொருள்கள் நம் அன்றாட தேவை .

ஒரு பொருளை அறிய ,

நாம் தொட்டு பார்ப்பது நம் இயல்பு .

தொடும்பொழுது , நடு விரல்

நீளமாக இருப்பதால் , நமக்கு

முதலில் அறிய கூடிய

வாய்ப்பு அதிகம் .

நடு விரலின் பண்பு ,

புத்திசாலித்தனம் .

எதையும் கேள்விகேட்பகும்

ஞானம் உடையவை .

முடிவுகளை பற்றி ,

அறிந்து ஆராய்ந்து முடிவெடுக்கும் .

தமிழில் , பொருள் இலக்கணமும் அப்படியே

அமையும் .

பொருட்கள், பலத்தோன்றியவுடன் ,

சொற்களை அமைப்பதே

முதல்நிலை , அதை உறுதிபடுத்த

என்றும் நாம் , ஒரு பொருளை

அறிவதற்கு துணை நிற்கும் .

நம் , கை நடு விரலும் , பொருள் அறிய

பயன்படும் .

யாப்பிலக்கணமும் மோதிர விரலும்

மோதிர விரல் , பேரார்வத்தைக்குறிக்கும் .

அதே போல , யாப்பிலக்கணமும் ,

நம் தமிழ் இலக்கணத்திற்கு பேரார்வத்தை

தோற்றுவிக்கும் .

யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை

தமிழை கற்பதற்கான யாப்பிலக்கண நூல்கள் .

எனவே, யாப்பிலக்கணத்தை ,

நமது மோதிர விரலோடு ஒப்பிடலாம் .

மனித குல வரலாறு

மனித குல வரலாறு –

தமிழில்

முன்பு கற்களையே கருவியாக கொண்டு எலும்பை கிழித்தினார் .

சில ஆராய்ச்சியாளர்கள் எலும்பையே முக்கிய ஆதாரமாக

நம்பி இருந்தனர் .

மரங்கொத்திப்பறவை, மரத்தில் உள்ள நடுப்பகுதியில் உள்ள பூச்சியை

பிரித்தெடுப்பததில் நிபுணத்துவம் பெற்றது போல , முதலில் மனிதர்கள்

எலும்பில் இருந்து மஜ்ஜையை எடு்ப்பதில் நிபுணத்துவம்

பெற்று இருந்தனர்.

கம்பீரமான ஒரு சிங்கம் ஒட்டகச்சிவிங்கி ஒன்றை அடித்து கீழே

சாய்க்கும் .

அக்கால மனிதர்கள் பொறுமையாக அவைகள் உண்டு

முடிக்கின்றவரை காத்திருப்பார்கள் .

பின், கழுதைப்புலிகள் நரிகளிடம் நடுவே குறிக்கிட தைரியம்

இல்லாமல் , அவைகள் சாப்பிட்டவுடன், மீதி உள்ளவைகளை தேடி எடுப்பர் .

அதற்கு பிறகு தான் உங்களுடைய குழு அழுகியவைகளை

அணுகி, மிகவும் கவனமாக வலது இடதுபுறம் பார்த்து, மீதி

உள்ளவைகளை கீழே தோண்டி உணவு சாப்பிடும்

திசுக்களாக மாற்றி வைத்துக்கொள்ளும்.

இது தான் நமது வரலாற்றிற்கும் உளவியலுக்கும் முக்கிய

திறவுகோலாகும் .

சமீப காலம் வரையிலும் கூட , அறிவார்ந்த மனித இனம்

உணவு நிலையில் தொடர்ந்து , இதே நடு நிலையில்முழுவதுமாக இருந்தனர்.

பல கோடி வருடங்களாக, மனிதர்கள் சிறிய

உயிரினங்களையே வேட்டையாடி, தம்மால் என்னமுடியுமோ

அதை சேர்த்தார்கள் , பெரிய உயிரினங்கள் மற்றவைகளை வேட்டையாடின .

4 லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்து தான் பல்வேறு

மனித இனங்கள் மிகப்பெரிய வேட்டை விளையாட்டை

தொடர்ந்தது , அதுவும் கடந்த 1 லட்ச வருடங்களில் தான்

– அறிவு உள்ள மனிதனாக உயர்ந்த பிறகு-

அந்த மனிதன் உணவு முறையில் மேலோங்கினான் .

இந்த ஆச்சர்யமான உயர்வு நடுநிலையிலிருந்து உயர்

நிலையை அடைந்தது மிகப்பெரிய விளைவுகளை

உண்டாக்கின . மற்ற விலங்கினங்களில் சிங்கங்களும், சார்க் மீன்களும் , பரிணாமத்தில் பல

வருடத்தில் அதே இடத்தை தக்க வைத்துக்கொண்டது .

இந்த மாதிரியான சுற்றுச்சூழல் சிங்கங்கள் கொன்றுகுவித்தும், கலைமான்கள் மிக வேகமாக

ஓடுவதிலும், கழுதைப்புலிகள் நன்றாக ஒற்றுமையாகவும், காண்டாமிருகம்

மிகவும் கொடூரமாகவும் ஆனது .

இதற்கு மாறாக. மனிதகுல வெகு சீக்கிரம் மிக உயர்ந்த நிலைக்கு சென்றது இந்த

சுற்றுச்சூழலுக்கு கூட சரியான நேரம் கொடுக்கவில்லை .

மேலும், மனிதர்கள் தங்களிடமே குழுக்களாக வாழும் பண்புகளை வளர்த்துக்கொண்டனர்.

மிகவும் கம்பீரமான உயிரினங்கள் வேட்டையாடும் விலங்கினங்களே .

கோடிக்கணக்கான ஆண்டுகள் மன்னராட்சியை இருந்தது.

மன்னர்களில் ஒரு சிலர் சர்வாதிகாரியாக இருந்தனர்.

சவான்னா காடுகளில் ஒரு விதமான இடர்பாடுகளில் , மனிதர்கள்

மிகவும் பயத்துடனும் கவலையுடனும் வாழும் சூழ்நிலை இருந்தததால்

இரு மடங்கு கொடுமையையும் ,ஆபத்தையும் எதிர் நோக்கியே இருந்தனர் .

பலவிதமான சரித்திர இடர்ப்பாடுகளால் , கொடிய போர்களில் இருந்து சுற்றுப்பபுற பேரழிவு

வரை , மிகவும் அவசர விளைவுகளையே ஏற்படுத்தி இருக்கிறது .

நிலை

நிலை
——

அன்பு நிலை

ஆற்றல் நிலை

இயற்கை நிலை

ஈர நிலை

உண்மை நிலை

ஊரின் நிலை

எண்ண நிலை

ஏற்றத்தின் நிலை

ஒற்றுமை நிலை

ஓர் முக நிலை

ஔதாரிய நிலை

அஃதே நம் நிலை .