சேப்பியன்ஸ் – மனித குல வரலாறு நூல் விமர்சனம்

சேப்பியன்ஸ் – மனித குல வரலாறு நூல் விமர்சனம்

நூலாசிரியர் : யுவால் நோவா ஹராரே

தமிழாக்கம் : நாகலட்சுமி சண்முகம்
****************************

வரலாறை படிக்கிறோம், வரலாற்றை நாம் நம்புவதில்லை.

இது ஒரு ஒரே பத(பிரபஞ்ச) வரலாறு விளக்க நூல்.

பருப்பொருள், ஆற்றலில் தான் இயற்பியல் தோன்றியது

என்று கூறுகிறது, வேதியியல் உருவாகிறது என்றும்

இயற்கையில் நடப்பதே நிதர்சனமான உண்மை என்றும்

இந்நூல் வலியுறுத்துகிறது.

‘ பூமி 450 கோடி முன்பு தான் உருவாகி இருக்கிறது ‘ .

என்றும், 380 ஆண்டுகளுக்கு முன்புதான் உயிரினம்,

உயிர் இயல்பாக தோன்றி இருக்கிறது.

அதன் அடிப்படையிலேயே, இன்று மருத்துவம் வரை பரவி

இருக்கிறது.

நமது உருவ அமைப்பிலே, கடவுளை உருவாக்கி

இருக்கிறோம்.

உயிர் செல் தோன்றுவது, செயல்படுவது, அழிவது என்று

உயிரியல் நாம் படிக்கிறோம். படிப்பு, பள்ளியின் தேர்வுடன்

மறந்து விடுகிறோம். நல்கருத்துக்களை விளக்கும்

இலக்குகளை நிர்ணயிக்கும் இலக்கிய செய்யுள்களை,

உரைநடைகளை படிக்கிறோம்.

ஆம், நம் வீட்டில், சமுதாயத்தில் நாம் எந்தெந்த சமயம்

காலந்தோறும் பின்பற்றப்படுகிறோமோ, அம்முறைகளை

அப்படியே பின்பற்றுகிறோம்.

நல் கருத்துக்கள், எல்லா சமயங்களிலும் மொழியிலும்

ஒன்றே.

மனித குலத்தின் அடிப்படை தேவையும் உணவு, உடை

இருப்பிடமும் எல்லோருக்கும் ஒன்றே.

அடிப்படை தேவைகளை பூர்த்தி அடைவதில் தான்

மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிலைப்பெறுகின்றன.

இவ்வாறாக, மற்ற உயிரின உறுப்புகளோடு தோன்றிய

மனித குலம், 70000 ஆண்டுகளுக்கு முன்புதான் அறிவு

பெறும் கலாச்சார அடிப்படைகளில் மனித இனமாக

உருவெடுத்து இருக்கிறது என்று இந்நூல் விவரிக்கிறது.

அனைவருக்கும் சம நிலையில் இருப்பதற்காக உதவும்

சமயக்கருத்துக்களை பரப்ப சமய நல்ல உறவாளர்கள்

தோன்றினார்கள்.

மனித சம நிலை அடையவேண்டும் என்ற கருத்துக்களை

தொடராமல், அவரவர்கள் பின்பற்றும் சமய

கருத்துரையாளர்களை விடாமல் பிடித்துக்கொண்டு

இருக்கிறார்கள்.

இந்நூலில், நவின மனிதர்களைப் போன்ற விலங்குகள் 25

லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றின என்றும்,

விலங்குகளோடு தான் ஒன்றோடு ஓன்றாக மனிதர்கள் வாழ்ந்ததாக

குறிப்பிடுகிறார்.

மனித குல வரலாற்றை, இந்நூலில் 4 பகுதிகளாக பிரித்து

உள்ளார். அந்த நான்கில் முதலில் அறிவு புரட்சி,

இரண்டாவதாக, வேளாண் புரட்சி, பின்பு நாடு, தேச என்ற

ஒருங்கிணைப்பு புரட்சி மூன்றாவதாகவும், நான்காவது

பிரிவில் அறிவியல் புரட்சி என விவரிக்கிறார்.

கிட்டத்தட்ட 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான்,

நெருப்பை பயன்படுத்தி இருக்கலாம் எனப் பதிகிறார்.

‘ நம் நினைவகத்திற்கான விலையை, நாம் செய்யும்

காரியங்களுக்கே நிர்ணயித்து பரிமாற்றம் செய்து,

மனித குல நிலைப்பை பெருக்கிக் கொள்கிறோம். ‘

மனித குல அறிவுப் புரட்சிக்கான வித்து என நாம் கருதலாம்.

என்கிறார்.

நாம் நிர்ணயம் செய்யும் காலம், நேரம், பொருட்கள்

அனைத்தும் நம் அறிவின் சிறப்பு என நம்

பல்லாயிரக் கணக்கான நரம்பின் மூளையில் உள்ள

அளவையும், சிறப்பையும் விவிரிக்கிறார்.

நமது பரிணாம வளர்ச்சியானது கால்பந்து விளையாடும்

திறனை வழங்கவில்லை. அதற்கு மாறாக கால்

விளையாட்டு பந்தில் கால்களை பயன்படுத்தாமல்

வேண்டுமென்றே தவறு செய்வதற்கு முழங்கைகளையும்,

எதிர் அணியினரை பற்றி அவதூறு பேசுவதற்கு

வாய்களையும் பரிணாம வளர்ச்சி உருவாக்கியது என்பது

தான் உண்மை என்கிறார்.

மற்ற விலங்குகள் முரட்டுத்தனமாக விளையாடினாலும்

அவை தன் உள்ளுணர்வின்படியே மற்ற விலங்குகளுடன்

நடந்து கொள்ளுகின்றன.

நாய்க்குட்டிகள் முரட்டுத்தனமாக விளையாடினாலும்,

அவற்றின் விதிமுறைகள் அவற்றின் மரபணுக்களில்

ஊறிப்போயுள்ளன.

அரசாட்சிமுறை, சமயக்கோட்பாடுகள், வர்த்தகத்

தொடர்புகள் போன்ற விஷயங்களுக்கும் முரட்டுத்தனமும்,

மற்றவர்களை வெல்லும் தன்மையான அணுகுமுறையும்

மனித குலத்திடையே நிலைக்கிறது என்கிறார்.

‘ கற்பனையான ஒழுங்குமுறையும், நம்முடைய

ஆழ்விருப்பங்களேச் செதுக்குகிறது ‘.

இன்றைய ஆழமான விருப்பஙகள் அனைத்தும் புனைவியம்,

தேசியவாதம், முதலாளித்துவம் மற்றும் தனிமனிதவாதம்

தொடர்பான கட்டுரைகளால் வடிவமைக்கப்படுகின்றன.

‘ கற்பனையான ஒழுங்குமுறை வேண்டும் என்றால், கோடிக்கணக்கான மக்களின் விழிப்புணர்வை நாம் மாற்றியாக வேண்டும் என்ற நம்பிக்கை கொள்ள
வேண்டும் ‘ என்கிறார்.

‘ கற்பனையான ஒழுங்குமுறையிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை. நாம் சிறைச்சாலைச் சுவர்களை உடைத்தெறிந்துவிட்டு சுதந்திரத்தை நோக்கி ஓடும்போது,
அதைவிடப் பெரிய சிறைச்சாலை ஒன்றின் உடற்பயிற்சி மைதானத்திற்குள்தான் நாம் தஞ்சம் புகுகிறோம்.

5000 ஆண்டுகளுக்கு முன்னர் நமது மூதாதையர்கள் ஏதேனும் ஞான முத்துக்களை உதிர்த்துச் சென்றுள்ளனரா
என்று நாம் தேடினால், நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

எழுத்து வடிவம் குறித்து கவலைப்படவில்லை. எழுத்து என்பது மனித விழிப்புணர்வின் சேவகனாகப் பிறந்து, அது
இன்று ஒரு பெரிய அளவில் எஜமானனாக ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்த எழுத்துத் தொடர் இத்தோடு முடிந்து விடவில்லை.
செயற்கை நுண்ணறிவுத்துறை, கணனிகளின் ஈரியல் எழுத்து வடிவத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்த ஓரு
புதிய வகையான அறிவை உருவாக்குவதை நோக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

வரலாற்று பதிவில் நீதி நியாயங்கள் கிடையாது, ஆனால்
பிரம்மாண்டமான கூட்டமைப்பு மனித குலத்தை வாழ வைக்கிறது.

‘ மனிதர்கள் தாங்கள் பதிந்த கற்பனையான ஒழுங்குமுறைகள் மற்றும் எழுத்து வடிவங்களைக் கொண்டே பிரம்மாண்டமான கூட்டமைப்புகளில் சாதித்தனர். ‘ என்று இந் நூலில் பதிந்தது நம் வரலாற்றுப் படைப்பில் வளர்ந்து வரும் நியதி.

‘ மேல் நிலை நிர்வாகிகள் சலுகைகளையும் அதிகாரத்தையும் அனுபவித்தனர். ஆனால், கீழ்நிலையில் உள்ளவர்கள் பாகுபாட்டினாலும் அடக்குமுறையிலும் துன்புறுத்துகின்றனர் ‘ என்று பதிகிறார்.

நச்சு சுழற்சி :

சமுதாய அடுக்கு முறைகள் அமைந்ததை எதனால் என
விவரிக்கிறார்.

‘ சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோ-ஆரிய மக்கள் இந்திய துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து இந்திய துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து உள்ளூர் மக்களை அடக்கி ஒடுக்கியபோது தான் இந்து மதத்தின் சாதி அமைப்புமுறை
வடிவம் பெற்றதாகப் பல அறிஞர்கள் ஊகிக்கினறனர் ‘ .

அந்த இந்தோ-ஆரியர்கள் உள்ளூர் சமூகத்தை எப்படி அடுக்கதிகார அமைப்பாகப் பிரிந்தனர். அதில் வந்தேறிகளான பூசாரிகளும் படைவீரர்களும் உயர்ந்த நிலையை அடைந்ததையும், உள்ளூர்காரர்கள் வேலைக்காரர்களாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்தனர் என்று நூலாசிரியர் விளக்கியதையும், தொடர்ந்து அதே சாதி முறைகளை கடைப்பிடிப்பதையும் இந்த நூல் ஆசிரியரும்
மேற்கோள் காட்டுகிறார்.

தங்கள் நிலை தெரிந்து விடும் என்ற காரணத்தினால் இந்த சாதி முறையை நிலைத்து நிற்பதற்கு பல சாதி முறைகளை
பிரிப்பதற்கு உண்டான சூழ்நிலையை ஏற்படுத்தி சட்ட ரீதியாக நிலைத்து நிற்க, மத ரீதியாக ஒற்றுமை ஏற்படுத்தி
சாதிய துவேசத்தை தொடர்ந்து நிலைக்கச் செய்கின்றனர்.

தூய்மை,தூய்மையின்மை ஆகியவைகளை பயன்படுத்தி,
தீண்டத்தகாதவர்கள் என அனைத்து நாட்டிலும் வெவ்வெறான முறைகளில் பயன்படுத்தியதையும்
சுட்டிக் காட்டுகிறார்.
‘ நவீன இந்தியாவிலும், திருமணம், வேலைகளில், சாதிப் பிரிவினையும், சமயமும் இன்றளவும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது ‘ என்பதை வலியுறுத்துகிறார்.

நச்சு சுழற்சி, நவீன அமெரிக்காவிலும் ஜரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் 16-18ம் நூற்றாண்டு வரை ஆப்பிரிக்கா அடிமைகளை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்தனர்.

இந்தியாவை ஆக்கிரமித்த ஆரியர்களைப்போலவே, அமெரிக்காவில் குடியேறிய ஜரோப்பியர்கள், மற்றவர்களின் பார்வைக்குத் தாங்கள் வெற்றியடைந்தவர்களாகத் தெரிவதோடு கூடவே சமயப் பற்றுக் கொண்டவர்களாகவும்
நியாயமானவர்களாகவும் பராபட்சமற்றவர்களாகவும் தெரிய வேண்டும் என்று விரும்பினார்கள்.

இந்த கட்டுக்கதைகளை அவர்கள் மக்களிடம் பரப்பினர்.

1865ம் ஆண்டுவாக்கில், கருப்பர்கள் வெள்ளையர்களைவிட அறிவில் குறைந்தவர்கள், அதிக சோம்பேறிகள், தனிப்பட்ட சுகாதாரம் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லாதவர்கள் என்று வெள்ளையர்கள் உண்மையிலேயே நம்பினர்.

இடைக்கால இந்தியாவில் சாதி ஒரு வாழ்வா-சாவா பிரச்னையாக இருந்தது, ஆனால், இடைக்கால இஸ்லாமியர்களுக்கு அது முக்கியமற்றதாகவே இருந்தது.
நவீன ஜரோப்பாவில் சாதி என்ற ஒன்று இல்லவே இல்லை
என்று பதிகிறார்.

மனித குல ஒருங்கிணைப்பு:

‘ நூற்றாண்டுகளை ஆய்வு செய்வதை விட, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை அலசினால், மனித வரலாறு தொடர்ந்து ஒற்றுமையை நோக்கித்தான் போய்க் கொண்டு இருக்கிறது என்பது நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். ‘ என்று அலசுகிறார்.

இன்று, ஒருங்கிணைந்த பூமியாக காண்கிறோம். மெய்யான கலாச்சாரம் என்ற ஒன்று தோன்றிய ஒன்று, கடந்த ஒரு சில நூற்றாண்டுகளின் ஊடாக, அளப்பரிய உலகளாவிய தாக்கங்களால் அனைத்து கலாச்சாரஙகளும் அடையாளம்
காணப்பட முடியாத அளவுக்கு மாறிவிட்டன.

நாம், என்று நமக்குரிய குழுவாகவும், அவர்கள் என்பது மற்றவர்களை குறித்தது.
சிங்கம் தான் அரசன் என்றும், தேனிக்கள் உலக தேனிக்களே ஒன்றுபடுங்கள் என்று தேன்கூட்டின் நுழைவாசலிலும் காணமுடியாது என்று விவரிக்கிறார்.
அந்நியர்களை, தினசரி அடிப்படையில் மக்கள் ஒத்துழைக்கத் தொடங்குவது காலந்தோறும் நடைபெறும்
என்று பகிர்கிறார்.

பணம், உலகளாவிய மாற்றத்தை கொண்டுவரவும், நம்பிக்கையும் உருவாக்குகிறது.

அவர்கள் என்ற கருத்தை நாம் என்ற ஒருங்கிணைப்புச் செயலுக்கு, அறிவியல், தொழில்நுட்பம் அன்றாட
ஒத்துழைப்பிற்கு உதவுகிறது.

‘ சமய கருத்துக்கள், சம ஒழுங்கிற்கான செயலை நம்பிக்கையுடன் நிலைப் படுத்த முயல்கிறது. ‘ என
பகிர்கிறார்.

புதிய உலகளாவிய பேரரசு

கி.மு 200ம் ஆண்டுவாக்கி்ல் தொடங்கி, பெரும்பாலான மக்கள் பேரரசுகளில் வாழ்ந்து வந்தள்ளனர். எதிர்காலத்திலும் அதற்குண்டான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது என்கிறார். மனித நலன்களை பாதுகாப்பதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும்.

ஸ்வீடன், இந்தோனீசியா, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான மனித உரிமைகளுக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதால் அவ்வுரிமையை பாதுகாக்க ஒரே ஓர் உலகளாவிய அரசாங்கம் இருப்பது எளிமையானதல்லவா? என்கிறார்.

2014ம் ஆண்டின்படி உலகம் இன்னும் அரசியல் ரீதியாகத் துண்டுதுண்டாகத்தான் இருக்கிறது.

பொருளாதார, சுற்றுச்சூழல் கொள்கைகள், நீதி ஆகியவை உலகளாவிய தரங்களுக்கு உட்பட வேண்டி உள்ளது.

‘ நவீன பொருளாதாரம் வளர்வதற்கு முதலாளிகளுடைய நம்பிக்கையும் பெருமுதலாளிகளின் லாபத்தை மீண்டும் உற்பத்தியில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதும்தான்.
அது மட்டும் அல்லாமல், பொருளாதார வளரச்சிக்கு ஆற்றலும் கச்சாப் பொருளும் தேவை.

இவை தீர்ந்து போகும் போது ஒட்டுமொத்த அமைப்புமுறையும் நிலைகுலைந்து சரிந்துவிடும் ‘
என்கிறார்.

முதலாளித்துவ நெறிமுறையும் நுகர்விய நெறிமுறையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கஙகளாகும்.
முதலாளித்துவ நெறிமுறை முதலீடு செய்யுங்கள் என்றும்
நுகர்விய நெறிமுறை வாங்கிக் குவியுங்கள் என்று கூக்குரலிடுகிறது.

உலக வெப்பமயமாதல், கடல்மட்டம் உயருதல், சுற்றுச்சூழல் மாசுபாடு மனித இனம் பிழைத்து இருப்பதற்கே
அச்சுறுத்தலாக அமையும்.

என்றென்றைக்கும் மகிழ்ச்சியாக
————————————

கடந்த 500 ஆண்டுகள் மனித இனம் பல தொடர்ச்சியான புரட்சிகளை சந்தித்து வந்துள்ளது.
இந்த பூமி ஒரே சூழலியலை கோளமாகவும் பின்னர்
வரலாற்றுக் கோளமாகவும் ஒருங்கிணைக்கபட்டுள்ளது.

என்றென்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ என்பது
கேள்விக்குறியே.
அறிவியல் புரட்சியும் தொழில் புரட்சியும் மனித குலத்திற்கு
அளப்பரிய சக்திகளையும் எல்லையற்ற ஆற்றலையும் கொடுத்துள்ளன.

பொருளாதார வளர்ச்சியும் தற்சார்பும் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வராது என்றால் முதலாளித்துவத்தால் என்ன பயன் ?

பரிமாண வளர்ச்சி நம்முடைய உடல்களையும் மனங்களையும் ‘ வேட்டையாடி வாழ்க்கைக்கு ‘ ஏற்றவாறு
செதுக்கி வடிவமைத்தது.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் நமக்கும் மகிழ்ச்சிக்கும் இடையேயான இடைவெளியை மேலும் ஒரு மைல் அதிகரிக்கிறது.

‘கடந்த 200 ஆண்டுகளில் நவீன மருத்துவம் குழந்தைகளின்
இறப்பு விகிதத்தை 33% இருந்து 5% ஆக்கியுள்ளது.
வன்முறை கணிசமாக குறைந்து இருப்பதும், மனித அறிவாற்றலும் இதற்கு முன்பு இல்லாத பிற சாதனைகளாகும் ‘என்கிறார்.

‘ மனிதர்களின் மகிழ்ச்சியை மட்டும் கணக்கில் எடுக்க வேண்டாம் ‘ என்று நாம் செய்யும் பல்வேறு தாவர, விலங்கினங்களை கொடுமைபடுத்தும் தவறையும் சுட்டிக்காட்டுகிறார்.

மகிழ்ச்சியைக் கணக்கிடுதல்

மக்களுக்கு உண்மையிலேயே எது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது – பணமா, குடும்பமா, மரபியலா, அல்லது நற்பண்புகளா ? எது என்று வரையறுப்பதுதான் முதல் வேலையாகும்.
அகவயமான நலனே சிறந்தது என்று கணக்கிடுகிறார். புறத்தோற்றம் அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வராது.

செரோட்னின், டோபோமீன், ஆக்சிடோசின் ஆகியவை மட்டுமே நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொண்டு வரும், என பதிகிறார்.

வாழ்வின் பொருளும், தன்னை அறிதலும்

மகிழ்ச்சி என்பதற்கு அளவீடு இல்லை. சுயமாக அறிவதே
மகிழ்ச்சிக்கு எல்லை. அறிவும் உணர்வும் ஆற்றலின் உள்ளீட்டை வெளிப்படுத்தும் எனக்கருதலாம்.

மக்கள் தங்கள் உணர்வுகளோடும் எண்ணங்களோடும் விருப்பு வெறுப்புகளோடும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் எனப் பதிகின்றார்.

நாம் எதிலும் ஊக நிலையில்தான் இருக்கிறோம்.

முடிந்தவரை பல்வேறு அணுகுமுறைகளைத் தெரிந்து கொள்ளுவதும் சரியான கேள்விகளுக்கு விடை புரிந்து கொள்ளுவதும் தான் முக்கியம்.

குறைபாடுகளைவதுதான் எந்நேரமும் செயலாக்கத்திற்கான
நமது பங்காக இருக்கட்டும்.

மனித இனத்தின் முடிவு.

வேறு எந்த உயிரினத்திற்கும் கிடைக்காத மிகப்பெரிய ஆடுகளத்தை மனிதனின் செயல்களின் மூலம் இயற்கை தன் ஆற்றலை வழங்குகிறது. என இந்த நூல் விளக்குகிறது
எனக்கூறலாம் .

பல 100 கோடி ஆண்டுகளாக நுண்ணறிவுசார் வடிவமைப்பு கோட்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. ஏனெனில், உயிரினங்களை வடிவமைக்கக்கூடிய எந்த நுண்ணறிவும் அங்கு இருக்கவில்லை.

நுண்ணறிவுகளுக்கு எந்த பிரக்ஞையும் இல்லை, எதிர்காலத்திட்டங்களை வகுப்பதற்கான எந்தத் திறனும் இல்லை.

‘ பழைமையான ஒரு மனிதக் கட்டத்திலிருந்து பார்ப்பதற்கு
பதிலாக, பல லட்சக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு பிரபஞ்சக் கண்ணோட்டத்திலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். ‘ என இந்த நூலின் எழுதியதன் நோக்கத்தை, சிறப்பை பதிகிறார்.