செயல் மன்ற பதிவாளர்

அறிவின் ஆற்றல்

அறிவோம் ஆற்றலை

கடந்து உள்ளே செல் உண்மை நிலையை அறிவாய்.

அறிந்து ஆற்றலின் நிலை என்ன உணர்ந்து கொள்.

இதுவே நடுநிலையாளர்களின் கருத்து.

ஒரு செயலின் நன்மை என்ன தீமை என்ன என்று

உணர்வதே பகுத்து அறியும் நிலை.

ஒரு செயலையோ அல்லது ஓர் நிலையையோ

அறிந்து செயல்படுதலே அறிவின் ஆற்றல்.

அதற்கு தகுந்தவாறே உயிர்களின் நிலை செயல்படும்.


அறிந்து செயல்படுகிறார்கள் என்றால் அவர்களை

வானாளாவ புகழ்வதும், ஓர் நிலை சரி இல்லை

என்றால் வசை பாடுவதும் மனித குலத்தின்

செயல்களா என்பதை அவரவர்கள் தீர்மானித்து

அறிந்து உணரும் செயல்.

மக்கள் தேர்ந்து ,தெளிந்து செயல்படுவதற்கே

தேர்தல் என்றும் மக்களின் நாயகம் என

சனநாயகத்தை அழைக்கிறோம்.

ஆற்றலின் தன்மையை அறிந்து

செயல்படுவதாலேயே ஆற்றல் என்கிறோம்.

அறிவின் வேலையே அறிந்து செயல்படுதலாகும்.

‘வலது (RIGHT) எது ? இடது ( LEFT ) எது?

என்று அறிந்து செல்வதே வாழ்க்கை பயணத்தை

வழி நடத்திச் செல்ல முடியும்.

ஒரு செயல் சரி என்பதற்காக தொடர்ந்து

மனித குலம் என்றும் செய்வது கிடையாது.

அறத்துடன் பொருள் சேர்க்கை என்பது

அனைவருக்கும் பொருந்தும்.

உண்பது உயிர் வாழ்வதற்கே என்பதும், உடுத்தும்

உடையும் மனித குல குணங்களின்

செயல்பாடுகளைக் குறிக்கும்.

அச்செயல்களை பண்புடன் போற்றுவதாலேயே

‘ பண்பாடு ‘ என்கிறோம்.

மறுமொழி இடவும்