சொலல்வல்லமை நீண்ட காலநேர பகுப்பு
நலமுடன் சுற்றும் புவி.
அண்டவெளி விரியும் பங்கின் விரிப்பு
நீண்டவெளி பரவிய ஆற்றல் விண்சுற்று
உண்டவெளி உணவு புரதச்சத்தில் நிறைவு
ஒண்டவெளி சுற்றும் குருதி மெய்பொருள்.
மெய்பொருள் தங்கும் அறை எங்கும்
வாய்ப்பு பருப்பொருள் சாரும் உயிரணு
தாய்மொழி வழிக் கல்விதனில் சேரும்
உய்யநிலைப் பொலிவு பெறும் முறை.
முறை ஒப்புமை வழிமுறை அறிவகம்
அறை கொள்ளும் தசைநார் நரம்பிழை
மறைபொருள் மேலுலக வடிவச்சுற்று
இறைபொருள் நிலம் நீர் மூலதளம்.
மூலதளம் நீள அகல பக்கம்
பலதளம் உள்ள எல்லை கோட்டை
சொலல்வல்லமை நீண்ட காலநேர பகுப்பு
நலமுடன் வாழச் சுற்றும் புவி.