2020 செயல் மன்றப் பதிவு-

2020-செயல் மன்றப் பதிவு

01-01-2020

1. காலம்
********

காலமே இந்த உலகம்.

‘ ஒரு பதம் ‘ எனும்
பிரபஞ்சத்தில்
‘ 2020 ‘ என்ற
கால கட்டத்தில்
நுழைகிறோம்.

‘ 2020
புதிய ஆண்டு மகிழ்வுடன்
வாழ்த்துக்களுடன் பகிர்கிறேன்,’

‘ 20ல் 20 ‘ என்ற இந்த இனிய கால பதிவில்.

காலம்,
நம்மை கால,
காலமாக கடத்துகிறது.

எண்ணத்தைக் கொண்ட
எண்ணிக்கையை
எண்ணில் வடிவு எடுத்து,
காலம், நேரம் என
கணித்து,
நம் ஒவ்வொருவரின்
காலத்தையும் கடத்துகிறோம்.

நம் கால நடைமுறைகள்
நம்மை வழி நடத்துகின்றன.

ஓவ்வொரு காலத்தில்
நடக்கும் செயல்கள்,
நம் எண்ணத்தில்
தோன்றியவை,
செயல்களாக,
பொருட்களாக
பரிமாண அளவை அடைகின்றன.

பொருட்களாக
பரிமாணம் பெற்றவை,
நிலைக்கின்ற பொருட்கள்
நிலைப்பெற்று,
பயன்பாட்டு அளவிற்கு
நம் செயல்பாட்டில்
நிலை பெறுகின்றன.

காலமென கணித்தவை,
கணக்கில் எடுத்துக்கொண்டு
கால, காலமாக
பயன்படும் அளவிற்கு,
எண்ணத்தில் தோன்றியவைகளை,
அந்தந்த வட்டார பழக்க,
குறிகளில், வடிவத்தில்,
எழுத்துருவில்,
மொழிகளில்
பதியப் பட்டு,
பொதுவாக
அனைவரும் அறியும்
வண்ணம்,
‘ கால கணிப்பு ‘
பொதுவாக
‘ உலக மனிதர்களின்
கணிப்பில் ‘
ஆண்டுகளில்
நிலைப் பெறுகின்றன.

காலம் பற்றிய கணிப்பு,
காலத்திற்கேற்ப
நம் அறிவின் ஆற்றலால்
நிலைப்படுகிறது.

ஒருமை படுத்துவதற்கு,
ஒரு பத சூழலில்
ஒருங்கே அறிய
ஒற்றுமையாக அனைவரும்
ஒரே கால சூழலை
ஒன்றென பகுத்துள்ள
நாம் ‘ 20ல் 20 ‘ இன்று நுழைகிறோம்.

20ம் வயது, கடந்த அனைவரும்,
20 வயதில் இருக்கும் அன்பர்களுக்கும்,
20வது வயது வர இருக்கும் இளையவர்களுக்கும்
‘ 2020ம் ‘ ஆண்டு ஒரு சிறப்பு ஆண்டு என்போம்.

சிந்தனையை சீர்படுத்தி,
ஏற்றமிகு செயல்களால்
எழில் தரும் பணியை
2020 ஆண்டினை,
நம் லட்சியத்தினை
பகுத்து,
உணர்ந்து,
நாம் வகுக்கும்
ஒவ்வொரு
கால கட்டத்தினையும்,
களிப்புடன் கணித்து,
காலத்தே செயல்படுவோம்.

கலாம் கணித்த காலம் 2020.
—————————

கலாம் கணித்த காலம் 2020.
கலாம் கனவு அடைய வேண்டிய
‘ கனா காணுங்கள் ‘
என அவர் வாழ்நாளில்
கணித்த கால
ஆண்டு எண் : ‘ 2020 ‘ .

விண்ணில் பறப்போம் !
விண்ணகத்தை நோக்கி
பறப்போம் என கணித்தார்.

எண் ‘ 2020 ‘ என்று
எண் அகத்தில் பதித்ததை
எண்ணத்தில் நிறைவேற்றிட
எண்ணில்லா கனவுகளை
நம்
ஒவ்வொருவர் உள்ளத்திலும்
விதைத்தார்.

விதைத்த விதைகள்
கனிவாக
கணினியில்,
எணினியில்,
எண்ணிக்கையில்
ஏற்றம் பெற்று,
விரைவாக செய்திகளை
அனைவரும் பகிர்கிறோம்.

ஆற்றல்மிகு,
கையடக்க
செல்லினிலே
சாமார்த்தியமாக,
சாதனைகள்
பல புரிய
காத்திருக்கும் யுக மனிதர்களே!

கண்ணியமாய்,
நம் உடலில் உள்ள
செல்களினில் நம் அகத்தை,
தரணியில்,
தரமான பணியினில்,
நம்பிக்கை சிறகோடு
நானிலம் போற்ற
நாவினிலே நல் சொற்கள்
நாளும் நவில
நற் செயல்களை நலமுடனே
பழகுவோம், பயில்வோம்,
பழகுகின்ற சொற்களில்
பாங்காக செயலமைத்து,
பயின்றது அனைத்தையும் பரப்பிடுவோம்.

காலம் காலாமாக
மாறும், மாற்றம் அடைகின்ற
காலக் கணக்கிலே கணிக்கின்ற
நம் செயல்கள்,
அடைந்த மாற்றத்தை
அசை போட்டு பாட,
கலாம் கனவு
கண்டதையும்
ஒருவாறு
அடைந்துவிட்டோம்
எனிலும்,
எண்ணிக்கையில்
குறைந்தோர் பலரே
உளமாற உணர்ந்ததால்
உவகையுடன் உரைக்கின்றனர்.

உண்மை தனை
பகிர்ந்தால்,
ஊரில் உள்ளோர் பலருக்கு
எட்டாக் கனியாகவே,
கணினியின், எணினியின் செயல்கள்
எப்படி
நமக்கு
சாத்தியப்படுத்திக் கொள்வோம்
எனவே உணர்கின்றனர்.

அறிவியல் செயல்கள் பல
அறிவினால் இயக்கப்படுவதால்
ஆங்காங்கே இயந்திரங்கள்
அங்குலம், அங்குலமாக
மனித செயல்களை
மாண்புறவே செய்கின்றன.

மனித இனம்
மகத்துவமாக
செய்த பல
செயல்கள்
பலவற்றை
பலமான ஆற்றலினால்
இயந்திரங்கள்
பல
ஒரு சில காலங்களில்
இது தான் உங்கள்
எல்லை,
உங்கள் செயல்களில்,
நீங்களே எங்களுக்கு
கட்டளைகளை தொகுத்தீர்.

கட்டளைகளை, கனிவுடன்
ஆற்றலாக மாற்றினோம்.

பல கோடி மக்கள் பரிதவித்து
இருக்கையிலே,
பலரையும்
பலம் அடையச் செய்ய இந்த
கால கட்டத்தில்
‘ 20ல் 20 ‘ நேரத்தை கணிப்போம்.

பதிவர்,
செயல்மன்றம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: