2020 செயல் மன்றப் பதிவு

2020-செயல் மன்றப் பதிவு

01-01-2020

1. காலம்
********

காலமே இந்த உலகம்.

‘ ஒரு பதம் ‘ எனும்
பிரபஞ்சத்தில்
‘ 2020 ‘ என்ற
கால கட்டத்தில்
நுழைகிறோம்.

‘ 2020
புதிய ஆண்டு மகிழ்வுடன்
வாழ்த்துக்களுடன் பகிர்கிறேன்,’

‘ 20ல் 20 ‘ என்ற இந்த இனிய கால பதிவில்.

காலம்,
நம்மை கால,
காலமாக கடத்துகிறது.

எண்ணத்தைக் கொண்ட
எண்ணிக்கையை
எண்ணில் வடிவு எடுத்து,
காலம்,
நேரம் என
கணித்து,
நம் ஒவ்வொருவரின்
காலத்தையும் கடத்துகிறோம்.

நம் கால நடைமுறைகள்
நம்மை வழி நடத்துகின்றன.

ஒவ்வொரு காலத்தில்
நடக்கும் செயல்கள்,
நம் எண்ணத்தில்
தோன்றியவை,
செயல்களாக,
பொருட்களாக
பரிமாண அளவை அடைகின்றன.

பொருட்களாக
பரிமாணம் பெற்றவை,
நிலைக்கின்ற பொருட்கள்
நிலைப்பெற்று,
பயன்பாட்டு அளவிற்கு
நம் செயல்பாட்டில்
நிலை பெறுகின்றன.

காலமென கணித்தவை,
கணக்கில் எடுத்துக்கொண்டு
கால, காலமாக
பயன்படும் அளவிற்கு,
எண்ணத்தில் தோன்றியவைகளை,
அந்தந்த வட்டார பழக்க,
குறிகளில், வடிவத்தில்,
எழுத்துருவில்,
மொழிகளில்
பதியப் பட்டு,
பொதுவாக
அனைவரும் அறியும்
வண்ணம்,
‘ கால கணிப்பு ‘
பொதுவாக
‘ உலக மனிதர்களின்
கணிப்பில் ‘
ஆண்டுகளில்
நிலைப் பெறுகின்றன.

காலம் பற்றிய கணிப்பு,
காலத்திற்கேற்ப
நம் அறிவின் ஆற்றலால்
நிலைப்படுகிறது.

ஒருமை படுத்துவதற்கு,
ஒரு பத சூழலில்
ஒருங்கே அறிய
ஒற்றுமையாக அனைவரும்
ஒரே கால சூழலை
ஒன்றென பகுத்துள்ள
நாம் ‘ 20ல் 20 ‘ இன்று நுழைகிறோம்.

20ம் வயது, கடந்த அனைவரும்,
20 வயதில் இருக்கும் அன்பர்களுக்கும்,
20வது வயது வர இருக்கும் இளையவர்களுக்கும்
‘ 2020ம் ‘ ஆண்டு ஒரு சிறப்பு ஆண்டு என்போம்.

சிந்தனையை சீர்படுத்தி,
ஏற்றமிகு செயல்களால்
எழில் தரும் பணியை
2020 ஆண்டினை,
நம் லட்சியத்தினை
பகுத்து,
உணர்ந்து,
நாம் வகுக்கும்
ஒவ்வொரு
கால கட்டத்தினையும்,
களிப்புடன் கணித்து,
காலத்தே செயல்படுவோம்.

கலாம் கணித்த காலம் 2020.
—————————

கலாம் கணித்த காலம் 2020.
கலாம் கனவு அடைய வேண்டிய
‘ கனா காணுங்கள் ‘
என அவர் வாழ்நாளில்
கணித்த கால
ஆண்டு எண் : ‘ 2020 ‘ .

விண்ணில் பறப்போம் !
விண்ணகத்தை நோக்கி
பறப்போம் என கணித்தார்.

எண் ‘ 2020 ‘ என்று
எண் அகத்தில் பதித்ததை
எண்ணத்தில் நிறைவேற்றிட
எண்ணில்லா கனவுகளை
நம்
ஒவ்வொருவர் உள்ளத்திலும்
விதைத்தார்.

விதைத்த விதைகள்
கனிவாக
கணினியில்,
எணினியில்,
எண்ணிக்கையில்
ஏற்றம் பெற்று,
விரைவாக செய்திகளை
அனைவரும் பகிர்கிறோம்.

ஆற்றல்மிகு,
கையடக்க
செல்லினிலே
சாமர்த்தியமாக,
சாதனைகள்
பல புரிய
காத்திருக்கும் யுக மனிதர்களே!

கண்ணியமாய்,
நம் உடலில் உள்ள
செல்களினில் நம் அகத்தை,
தரணியில்,
தரமான பணியினில்,
நம்பிக்கை சிறகோடு
நானிலம் போற்ற
நாவினிலே நல் சொற்கள்
நாளும் நவில
நற் செயல்களை நலமுடனே
பழகுவோம், பயில்வோம்,
பழகுகின்ற சொற்களில்
பாங்காக செயலமைத்து,
பயின்றது அனைத்தையும் பரப்பிடுவோம்.

காலம் காலாமாக
மாறும், மாற்றம் அடைகின்ற
காலக் கணக்கிலே கணிக்கின்ற
நம் செயல்கள்,
அடைந்த மாற்றத்தை
அசை போட்டு பாட,
கலாம் கனவு
கண்டதையும்
ஒருவாறு
அடைந்துவிட்டோம்
எனிலும்,
எண்ணிக்கையில்
குறைந்தோர் பலரே
உளமாற உணர்ந்ததால்
உவகையுடன் உரைக்கின்றனர்.

உண்மை தனை
பகிர்ந்தால்,
ஊரில் உள்ளோர் பலருக்கு
எட்டாக் கனியாகவே,
கணினியின், எணினியின் செயல்கள்
எப்படி
நமக்கு
சாத்தியப்படுத்திக் கொள்வோம்
எனவே உணர்கின்றனர்.

அறிவியல் செயல்கள் பல
அறிவினால் இயக்கப்படுவதால்
ஆங்காங்கே இயந்திரங்கள்
அங்குலம், அங்குலமாக
மனித செயல்களை
மாண்புறவே செய்கின்றன.

மனித இனம்
மகத்துவமாக
செய்த பல
செயல்கள்
பலவற்றை
பலமான ஆற்றலினால்
இயந்திரங்கள்
பல
ஒரு சில காலங்களில்
இது தான் உங்கள்
எல்லை,
உங்கள் செயல்களில்,
நீங்களே எங்களுக்கு
கட்டளைகளை தொகுத்தீர்.

கட்டளைகளை, கனிவுடன்
ஆற்றலாக மாற்றினோம்.

பல கோடி மக்கள் பரிதவித்து
இருக்கையிலே,
பலரையும்
பலம் அடையச் செய்ய இந்த
கால கட்டத்தில்
‘ 20ல் 20 ‘ நேரத்தை கணிப்போம்.

பதிவர்,
செயல்மன்றம்.

2020 செயல் மன்றப் பதிவு:

02-01-2020

நேரம் :
——

‘ காலம் ‘
வகுத்ததை ‘ நேரம் ‘
நிலைத்து காட்டும்.

நேரம்,
வரலாற்று
அடிப்படையில்
மனித இனத்தால்
நிர்ணயிக்கப்பட்டவை.

அண்டத்தின் நிலைத்த
தொடரான பரிமாண கூறு.

நேரம்,
அறிவுசார் அமைப்பிலும்,
நிகழ்வுகளாக,
இயக்கமான
கால அளவு இயலாகும்.

நேரம்,
நேர்த்தியுடன்
ரகவாரியாக பிரித்து
நம் செயலை
மேன்மையடையச் செய்வதற்கு
உரியதே ஆகும்.

ஆம் நண்பர்களே!
‘ நேரமே,’
எனும் சொல்லை
“கரந்து உறையில் நிலை
பெறச் செய்வோம்.”

நே-நேர்மையுடன்
ர-ரக வாரியாக பிரித்து
மே-மேன்மை

அடையச் செய்வதே ஆகும்.

நேர்த்தியுடன்,
நேரத்தை பிரித்து
நற் செயல்களுக்காக
செயல்படும்
எக்காலமும்
மேம்பாடு அடைவதற்கே
வகுக்கப்படும்.

நேரத்தை
நேர்த்தியுடன்
பயன்படுத்தினால்,
மகிழ்வுடன் வாழலாம்.

அதிகாலை எழுவதால்,
அதிக நேரம்
தமது விருப்பம்
சார்ந்த
செயல்களுக்கு
ஈடுபடுத்த முடியும்.

நேர சேமிப்பு,
சேமிப்பில் முக்கிய பங்கு
வகிக்கும்.

காலமும்,
நேரமும்
பகுத்துக் கொண்டவர்களுக்கு
எந்த ஒரு செயலுக்கும்
உகந்ததாக அமையும்.

‘ முடியும் ‘ எனும்
பாங்கு உடையோர்,
செயல்களை
முடித்துக் காட்டுவார்கள்.

நேரத்தை முறையாக
பயன்படுத்துபவர்களுக்கு
வாய்ப்புகள் என்றும் நிலைக்கும்.

நேரத்தை, தமிழில்
நாழிகையில் பிரித்தனர்.

நேரம்,
பூமி தன் அச்சில்
சூழல்வதை
அடிப்படையாக கொண்டு
அளக்கப் பட்டவை ஆகும்.

நம் நாட்டின் பழைய
கால அளவையை
அறிவோம்.

சூரியன் உதிக்கும் நேரம்
ஓவ்வொரு இடத்திற்கும்
மாறுபடுவதால்,
குழி, என்றும்,
கண் இமைக்கும் நேரம்,
கைந்நொடி,
மாத்திரை,
குரு,
உயிர்நாடி,
சணிகம்,
தற்பரை,
விநாடி
என பகுத்து
60 விநாடியை -1 நாழிகை
என பிரித்தார்கள்.

60 நொடிகள் 1 நிமிடம் என
ஏற்கனவே
நம் அனைவருக்கும்
தெரிந்த ஒன்றே.

நேரத்தை, பொழுதாக
பிரித்தார்கள்.

பொழுது:

காலை- 6-10( 1 -4 ஓரை)
நண்பகல்- 10-12(5-8 ஓரை)
ஏற்பாடு – 2-6(9-12 ஓரை)
மாலை – 6-10(13-16 ஓரை)
இடையாமம்-10-2(17-20 ஓரை)
வைகறை-2-6(21-24 ஓரை)

நேரம்,
சூரியனின் இயக்கத்தை
மையமாக வைத்து,
நேரம்,
நாட்கள்,
வாரங்கள்,
மாதங்கள்
என முற்காலத்தில்
கணிக்கப்பட்டன.

நேரம் ஒரு மிகப் பெரிய
மர்மம் நிறைந்தது.

ஒன்றுமே செய்யாமல்
இருந்தாலும்
நேரம் கடந்து விடும்.

நாம் நேரத்தை வகுத்து
வாழ்வில்
நிலை பெறுகிறோம்.

இந்து சமய நம்பிக்கையில்,
‘ சிவா ‘ வின் நடனம்
ஒரே பதமாகிய
பிரபஞ்ச இயக்கம்
என கணக்கிடப் படுகிறது.

ஒவ்வொருவருக்கும்
நேரத்தே கடந்து
உள்ளே
சென்று,
இறைமையை/
இயற்கை முறைமையை
தொடர்ந்து
கடைபிடிப்பதன் மூலம்
அவரவர்கள்
வெளிச் செயல்களுக்கும்
பயன்படுத்துவது
ஒவ்வொருவரின்
பழக்க வழக்கமாகிறது.

காலம், நேரம்
ஆகியவற்றின் வழி,
பால்வெளி மண்டலத்தின்,
படுகையில்
சுற்று வட்ட பாதையில்
நிர்ணியிக்கப்படுகிறது.

நம் காலம்,
நேரம்,
நாம் கருவாக
உருவாகிய பின்
தோன்றும்
பல்லாயிரக் கணக்கான
செல்கள்,
பல்லாயிரக் கணக்கான
மரங்களின் விதைகளில்
இருந்து
ஆங்காங்கே
மரங்களாக
உருவாவது போல,

நம் உடலில் உள்ள
பல்லாயிரகணக்கான செல்கள்
பெருக்கம்
அடைந்து
ஒவ்வொரு
உறுப்புகளாக
விரிவடைந்து,
நிலை பெறுகிறது.

நமது கால, நேர வளர்ச்சியை
நாம் பிறந்து வளரும்,
செல்களின்
உருவாக்கத்தில் உள்ள
உடலின் பாகங்களின்
சூழ்நிலைக்கு ஏற்ப
நல்நிலை படுத்தி,
நம் உடல் உறுப்புகளின்
செல் நிலைக்கு ஏற்ப,
நாம் பிறந்து,
வளர்ந்து,
இறக்கும்
வரை உள்ள
கால, நேர
எல்லைகள்
அவரவர்களுக்கு
நிலைக்கப்படுகின்றன.

நேர்த்தியாக,
நேரம் கடைபிடிக்க
உதவும்
நம்
செல்களை
நம்மால் முடியும் வரை,
‘ முடியும் ‘
என்ற நம்பிக்கையோடு
செயல் படுவோம்.

நேரம், காலம்
நம் செல்களில்
ஏற்படும்
நல்ல ‘ காற்று ‘
பதிவினை
அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

2020 செயல் மன்றப் பதிவு

03-01-2020

காற்று:

ஒளியில்
இருள் மறையும்
ஓங்கார
ஒலி பெருகும்.

ஓசையின்
வடிவினிலே
காற்று வரும்
எனும்
காலம் ஒன்றை
அறிந்திட்டோமோ!

கேள்வி தனை
தொடுத்திட்டதனால்
கற்க
முனைந்து
காற்றினை
உணர தலைப்பட்டோம்.

‘ க ‘
எனும்
மெய்யுறு
எழுத்துருவில்,
‘ஆறு ‘தலுடனே
‘ ஆற்று ‘
எனும்
சொல்லில்
கலந்து
“( க+ஆ=கா+ஆற்று)=
” காற்று ” என்ற சொல்
ஆகி
வளி மண்டலத்தில்
உலவிட
உயிர் பெற்று
உள்ளோம்.

வெளிதனில்
வளி மண்டலத்தில்
உலவிடும்
” காற்று ”
நம் உயிர்
அக
காற்றாகிய
” உயிரக காற்று “.
என்பது
என அறிவோம்.

அணுவினிலும்
அணுவாய்,
அணுக்கள்
ஒன்றுக்கு
ஒன்று
இணைப்பில்
நிலை பெறாமல்
அலைந்து
திரியும் பொருளின்
கண்டும் காணாத
புற வடிவ
நிலைக் கொண்டதனில்
வளிம நிலையில்
உள்ள ‘ கலவை ‘
ஒன்றின் பெயர்
உமது என
அறிந்தோம்.

கலவையில்
இருப்பதை
கற்க
முற்பட்டதில்
உள்ள
வளிம நிலையில்
78 சதவிதமாக உள்ள
” நைதரசன் ” என்ற
பொதுவான தனிமம்
என்றும்,
இரண்டு நைதரச அணுக்கள்
புணர்ந்து,
நமது சூரிய மண்டலத்தில்
7வது
அணு எண்
” காற்று ” என
அறிந்தோம்.

ரூதர்போர்டு,
1772 ” நைதரசனை ”
கண்டுபிடித்த
வளிமத்தில்
இருப்பதை அறிந்தார்.

நில
உலகில்
ஆக்ஸிசன்
என்ற தனிம
” உயிரக காற்று, ” (O-2)
அணு எண் 8ல் உள்ளது.

வளி மண்டலத்தில்
நைதரசனுக்கு
அடுத்த படியாக
” உயிரக காற்று ‘
21 சதவிதமாகவும்,
மீதி உள்ள 1 சதவிதம்
ரசயான
கலவையுடன் கலந்து
மற்ற காற்று என்றும்,

உயிரக காற்று,

நீர் மண்டலத்தில்
86 விழுக்காடு,
மனித உடலில்
உள்ள
ஒவ்வொரு செல்களின்
அமைப்பிலும்
3ல் 2 பங்கும்,

நீரில் பத்தில் 9 என்று
அறிந்தோம்.

அனைத்து
உயிரணு ஆற்றல்
பரிமாற்றங்களில்
இந்த
” உயிரக காற்று ”
பயன்படுத்தப்படுகிறது.

உயிரணுக்கள்
செல்லினுள்
உயிர்ப்பு பெற்று
ஆற்றலை பெருக்குகிறது.

நம்
உயிரணுக்கள்
உயிர் பெற
” உயிரக காற்று ”
பல்லாயிர கணக்கான
செல்களில்
உயிர்ப்பு நிலையை
தோற்றுவிப்பது
உயிரக காற்று
செயல் நிலை
என்று அறிவோம்.

உயிரக காற்று
நம்மில் புகுந்து
நுரையீரல்
செல்
அணுக்களில்
உள்ள
சிகப்பு இரத்த செல்
அணுக்களில் புகுந்து
நமது
உடம்பு அணு
செல்களில்
பயன் பெறும்
என்பதனையும்,

நுரையீரல் இருந்து,
கரியமிலவளி
வெளிவளியில்
செல்வது
என்பதனையும் அறிந்தோம்.

இன்று சூரிய ஒளி
எங்கும்
பரவிட,
வளி மண்டலக் காற்று
நான்கு திக்கில் சைகையாக வரும்
காற்றின் பெயரை அறிவோம்.

தெற்கில் இருந்து வருவது ” தென்றல் ”
கிழக்கில் இருந்து வருவது ” கொண்டல் ”
மேற்கில் இருந்து வருவது ” மேலை ”
வடக்கில் இருந்து வருவது ” வாடை ”

காற்றின் ஆற்றல்
நம்மை பெயர்த்து
வைப்பதால்
காற்றின் ஆற்றலை
பெயரிலும்
அறிவோம்.

6 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
” மென்காற்று “.

6-11 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
” இளந்தென்றல் “.

12-19 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
” தென்றல் “.

20-29 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
” புழுதிக்காற்று “.

30-39 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
“ஆடிக்காற்று “.

100கி.மீ வேகத்தில
வீசும் காற்று
” கடுங்காற்று “.

101 -120 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று
” புயற்காற்று “.

120 கி.மீ மேல்
வேகமாக
வீசும் காற்று
” சூறாவளிக் காற்று “.

என்பது என்றும் அறிவோம்.

காற்றின் வேகம்
மிதமென
இருந்தால்,
தினமும் உயிர்கள்
பல நிலைக்கும்
அன்றோ!

காலம்,
நேரம்,
காற்று
என்று அறிந்த
ஒரு சிலவற்றோடு
” ஆற்றல் ” என்பதனையும்
தொடர்ந்து அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

04-01-2020

2020 செயல் மன்றப் பதிவு

ஆற்றல்:

ஆற்றலின் அமைதி
அகிலத்தின் செயல்பாடு.

ஆற்றல்,
மாற்றத்தில் மட்டுமே
செயல்படும்.

அண்டத்தின் செயல்கள்
ஆற்றலில் வெளிப்படும்.

அகிலத்தின் அச்சு
ஆற்றலின் நிலைச் சுற்று.

அனைத்தின்
ஆதாரத்தோன்றல்,
பெருக்கம்,
சுருக்கம்
விரிவாக்கம்,
இயங்கும்,
இயங்காத
பொருட்களின்
நிலைப் பாட்டு சக்தி.

சூரியினின் உள்ள
அணுக்கரு இணைவின்
செயல்,

வெப்ப ஆற்றலாக
இந்த சூரிய கதிரியக்கத்தின்
ஆற்றலில்,

ஒரு சில துணுக்களின்
ஆற்றல் புவியின்
வெளி அடுக்குக்கு
வெப்ப ஆற்றலாக
தெளிக்கப்படுகிறது.

வெப்ப ஆற்றலின்
செயல்பாடு
புவி இயக்கத்தின்
செயல்பாடுகளை
நிலைக்கச் செய்கிறது.

உணவில் இருந்து
கிடைக்கும் ஆற்றலால்
மனித இனம்
உயிர் வாழ்வது போல,
மற்ற உயிர்
இனங்களுக்கும் கிடைக்கிறது.

சூரியனின் கதிர்
இயக்க ஆற்றல்,
புவியின்
கதிர் இயக்க ஆற்றலை
நிலைக்கச் செய்கிறது.

இயங்கும் திறமையே
ஆற்றல் எனப்படும்.

ஆற்றலின்
மாற்றச் செயல்பாடுகளே
பொருட்களின் நிலைப்பாடு.

அகிலம்
ஆற்றலில் அடங்கும்.

” ஆ ” என்ற சொல்லில் உயிர் எழுத்தில் எழுந்து
” ஆறு ” என்ற சொல்லில் நிலைப்பட்டு
” ஆற்று ” என்ற சொல்லாகி
” ஆற்ற + (அ)ல் ” = ” ஆற்றல் ”

என்ற
சொல்லில் உருவாக்கம்
அடைகிறது.

ஆற்றல் வகை
பல செயல்படுகின்ற போதிலும்
நிலைக்க வேண்டிய ஆற்றலை மட்டும்
இப்பதிவில் பதிவாகிறது.

புவிவெப்பச் சக்தி

புவிவெப்ப ஆற்றல்
என்பது புவியில்
சேமிக்கப்பட்டுள்ள
வெப்பத்தில்
இருந்து
பெறப்படும்
ஆற்றல் ஆகும்.

கோள் உருவாகும் போதும்,
தாதுக்களின்
கதிரியக்கச் சிதைவில்
இருந்தும்,
புறப்பரப்பில்
இருந்து உறிஞ்சப்படும்
சூரிய ஆற்றலில் இருந்தும்
இந்த
புவிவெப்பச் சக்தி
தோன்றுகிறது.

சூரிய ஆற்றல்

சூரிய ஓளி மற்றும்
வெப்பத்திலிருந்து
நேரடியாக பெறப்படும்
ஆற்றல் சூரிய ஆற்றல்
எனப்படுகிறது.

சூரிய ஆற்றல்
நேரடியாக
மட்டுமின்றி
மறைமுகமாகவும்
மற்ற மீள
உருவாக்கக்கூடிய
ஆற்றல்களான,
காற்றாற்றல்,
நீர்மின்னியல்,
மற்றும் உயிரியல் தொகுதி
ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு
பெருமளவில்
துணை புரிகிறது.

பூமியில் விழும்
சூரிய ஆற்றலில்
மிகவும் சிறிய
பகுதியே
ஆக்கப்பூர்வமாக
பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஆற்றலில்
இருந்து மின்சாரம்
இரண்டு
வகைகளில்
தயாரிக்கப்படுகிறது.

சூரிய ஓளியில், வெப்பத்தில்
இருந்து
மின்சாரம் தயாரிப்பு

அலை ஆற்றல்

அலை ஆற்றல்,
நீர்ப்பெருக்கு ஆற்றல்
சிலநேரங்களில்
நீர்ப்பெருக்குத் திறன்
என்பது
நீராற்றல் வகைகளில்
கடல் நீர் வரத்தில் ஏற்படும்
ஏற்ற இறக்கங்களை
பயன்படுத்தி மின்னாற்றல்
அல்லது வேறு
ஆற்றல்வகையாக
மாற்றிக் கிடைத்திடும்
ஆற்றலாகும்.

ஆற்றல் என்பது,
மகிழ்வு, ஆனந்த இயக்கம்.

ஆற்றலிலைக் கொண்ட
அண்டத்தை அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

05-01-2020

2020 செயல் மன்றப் பதிவு

அண்டம்:
———

ஒவ்வொரு
எழுத்தும்,
எழுத்துருவும்
அந்தந்த வட்டார
சைகைகளில்,
வரி வடிவத்தில்
பழக்கமாக
நிலைப் பெற்ற

“உம், அம் ” என்ற
நாம் ஒலிக்கும் ஒலி

ஓர் எழுத்து,
இரு எழுத்துக்களாக
உணர்ந்து,

உணரும் தன்மை
நிலைமைப் பெற்று,

சொற்களின்
வடிவம்,
அந்தந்த
மொழிகளில்
எழுத்து உருவத்தை
குறிக்கின்றன.

‘ ஒருமை ‘
ஒன்றில்
உருப் பெற்று
மைய பொருளாகி
அந்த (அ)ம்,
” அண்டம் ”
என்ற அந்த

” ஒருமை இல ”

” ஓரு ‘ – ஒரு
” மை ” -மையப் புள்ளியில்
நிலைப் பெற்று,

” இல” –

இ-இன்மையின்
ல-லட்சியமாக

ஆற்றலின் திசை
பெற்று,
ஒவ்வோரு
அணுவிலும்,
அண்ட,
அண்ட
அந்த
“அ”ம்,
“உ”ம்”
அண்டமாகிறது.

ஆம்,
ஓம், எனும்
ஓங்காரத்தில்
உருவெடுத்து,
அந்த ஆதி

ஆ-ஆற்றலின்
தி-திசையாகி,

அந்த
அம்
” அண்டம் ”
என்று
ஒரு நிலைப் பொருள்
பல ஆற்றல் பொருளாக
நிலை பெற்று உள்ளது
என்று அறிவோம்.

” அண்டம் ” என்பது
” அணு ”
பக்கத்தில்
உள்ளவற்றில்
அண்ட, அண்ட
குறிக்கின்ற
அணுக்கள் ஒன்றி
இணைந்து
” அண்டம் ”
ஆகிறது.

பூமி,
நிலவு,
வானம்,
சூரியன்,
சூரியனைச் சுற்றி வரும்
கோள்கள்,
விண்மீன்கள்,
விண்மீன்களுக்கு
இடையுள்ள
விண் துகள்கள்,
அவற்றின் இயக்கம்,
இவை எல்லாம் சூழ்ந்துள்ள
வையகமாகி,

வெட்ட வெளியில்
நிலைப் பொருளாகி
இயங்குகிறது.

கண்ணுக்குத் தெரியாத
தொலைவில் உள்ள
விண்மீன்களுக்கும்
அப்பால்
உள்ள
விண்மீன் குழுக்கள்
ஆகிய அனைத்தும்

” அண்டம் ” என்ற
சொல்லில் அடங்கும்.

இத்துடன்
காலம் என்ற
கருத்தும் அது
தொடர்பான முறைமைகளும்
இதில் அடங்கும்.

ஒரு புதிய ஆய்வு,
அண்டம் வாழ்க்கைக்கு
ஏற்ற நிலையைப்பெற
தேவையான
அளவு வேகமாக
விரிவடைந்து
வருவதை
உறுதிசெய்கிறது.

தொலை தூரத்தில்
இருந்து
வரும்
ஒளிக்கதிர்கள்
கதிர் வீச்சுகள்
இவற்றை
வைத்துக் கொண்டு
நம்மால்
அறிந்து கொள்ள முடிந்த
அண்டத்தின் பகுதியை
அறியப்பட்ட அண்டம்
என்று சொல்லப்படுகின்றது.

இந்த அறியப்பட்ட அண்டம்
ஒரு கோள வடிவில்
இருப்பது இயல்பு.

இக் கோளத்தின்
விட்டம் 92 பில்லியன்
ஒளி ஆண்டுகள்
அல்லது
அதற்கு மேலும்
இருக்கலாம்
எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஓர் ஒளி
ஆண்டு என்பது,
ஒளி,
ஓர்
ஆண்டில்
போகின்ற
தூரத்தைக் குறிக்கும்.

ஒளி ஒரு நொடியில்
299,792,458 மீட்டர்
தூரம் போகின்றது;

ஓர் ஆண்டில்,
9,460,730,472,580,800
மீட்டர் போகும்.

எனவே, ஒரு ஒளி ஆண்டு என்பது 9,460,730,472,580,800 மீட்டர் ஆகும்.

92 பில்லியன்
ஒளி ஆண்டுகள்
என்பது ஏறத்தாழ
8.80 ×1026 மீட்டர்
என்றாகும்.

ஏன் ஒரு பதம் என்கிறோம் ?
————————–

” யுனிவெர்ஸ் ” என்ற
ஆங்கிலச் சொல்லானது
பழைய ஃப்ரெஞ்சு
சொல்லான
யுனிவெர்ஸ்
என்பதிலிருந்து
வருகிறது,

மேலும்
இந்த ஃப்ரெஞ்சு
சொல்லானது
இலத்தீன் சொல்லான
” யுனிவெர்ஸம் ”
என்ற
சொல்லிலிருந்து
உருவாகியுள்ளது.

இலத்தீன் சொல்லான,
” யுனிவெர்ஸம் ”

சைசுரோ
மற்றும்
பல ஆசிரியர்களால்
தற்கால
ஆங்கிலச் சொல்லோடு
பயன்படுத்தப்படுகிறது.

அதே பொருளில்
பல முறை
பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த
இலத்தீன் சொல்லானது,
‘ செய்யுள் ‘
சேர்ப்பான
” யுன்வோர்ஸம் ”
என்பதிலிருந்து
உருவாகியுள்ளது. —

‘ யுனிவர்ஸம் ‘ என்ற
இச்சொல்
லுக்ரிடியஸ்
என்பவரின்
” பொருட்களின் இயல்பு பற்றி ”
என்ற புத்தகத்தின் தொகுதி
IV வரி 262 இல்
பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது
யுன்,
யூனி,
யூனுஸ்
அல்லது
” ஒன் ”

ஆகிய
சொற்களின்
சேர்ப்பு வடிவம்,
வோர்ஸம், வெர்ஸம்
“சுழலும், உருளும், மாறும் ஒன்று ”
எனப் பொருள்படும்

லுக்ரீஷஸ் என்பவர்,
இந்தச் சொல்லை

“ஒன்றாகச் சுழலும்
அனைத்தும்,
ஒன்றாகச் சேர்ந்த
அனைத்தும்”

என்ற பொருளில்
பயன்படுத்தினார்.

யுன்வோர்ஸம்
என்ற சொல்லுக்கு
மாற்றுப் பொருள் புரிதல்,
“ஒன்றாக சுழலும் அனைத்தும்”
அல்லது
“ஒன்றால் சுழற்றப்படும்
அனைத்தும்” என்பதாகும்.

இவ்வாறு ஓன்றாக
சுழற்றப்படும்
அனைத்தும்,

தமிழ் சொல்லிலும்

ஒரு சொல்லாகி
” ஒரு பதம் ” என்று
நிலைப் படுகிறது.

06-01-2020

செயல் மன்றப் பதிவு

அறி :

அறி,
அறிய வேண்டியதை
அறிந்து கொள்வோம்.

அறிந்து கொள்வதை
அறிவித்து செயல்படுவோம்.

அறிந்து
செயல்படுவதை
அறிவின்,
இயல்பில் உணர்வோம்.

அறிந்து உணர்வதால்
அறியாமை அகலும்.

அறிகுறிகளில் நல்லதை
அறிக்கைகளில் வெளியிடுவோம்.

அறிந்து கொள்ளுதல்
பருவ வளர்ச்சியில் நிலைப்படும்.

நமது
நரம்பு செல்
தூண்டல்கள்,
தோல்,
புலன் உணர்ச்சி செல்
இயக்கச் செல்லுடன்
இயங்கி,
இணைப்பு செல் மூலம்
ஜவகை புலன்களில்
அறிந்து
நம் உடலில்
செயல்படுகிறது.

குறியீட்டு அறிவு,
தர்க்க முறையில்
சிந்தித்து,
காரண காரியங்களை
அறிந்து கொள்கிறது.

அறிதல் திறன்,
ஆக்கப் பூர்வ வளர்ச்சியாக
உடல் ஊக்கமாக,
புரத உணவு மேம்பட
அறிதல் உணர்வில்
மிளிர்கிறது.

மொழி வளர்ச்சி,
குடும்ப பின்னணியில்
பெரிதும்
நினைவு,
பேச்சாற்றலை வளர்க்கும்.

எண்ணங்களில்
ஏற்றம் பெற,
செயல் வடிவம்
நிறைவாக்கத்தை
பெருக்கும்.

சமூக உணர்வே
சுமூக அறிவு.

உள்ளத்தின்
அறிவு
உலக செயல்பாடுகளுக்கு
பங்கேற்கும் ஊக்கத்தில்
நிலைக்கிறது.

விளைவின் செயலை
விளையாட்டில் அறிவோம்.

தன்னை அறிந்து
தரணியை தளிர்க்கச் செய்வோம்.

பலம் பெறுதல்
புலன்களின் ஊக்கமாகும்.

கலந்து உறவாடி
மக்களின்
நற்செயல்களை பாராட்டுவோம்.

நம் உடல் பாகம்
அனைத்தும்
நம் மக்களை
பாசப் பிணைப்பில்
பகிர்ந்து உறவாடுவோம்.

அறிந்ததில்
வளர்வது
உலகில் நிலைப்படும்.

அறிவது
குறிப்பு அது,
வளர்வது
உணர்வது
‘ அறிவு ‘ என்ற
சொல்லில் நிலவுகிறது.

அறிகுறிகள்:

அனுபவம்
மூலம்
பெறப்பட்ட
உண்மைகள்,
தகவல்களில்
விளக்கியதை,
நம் திறமைகளை
அறிந்து,
கண்டு பிடிப்பத்திருப்பதை
கற்று,
அந்தந்த
கருத்தை
நடைமுறையில்
புரிந்து செயல்படுவோம்.

ஒரு அறிந்த,
நியாயமான
கருத்தை
நம்பிக்கையுடன்
செயல்படுத்துவோம்.

ஒரு குறிப்பிட்ட
சூழல்,
தருணம்,
நிலைமையைப் பற்றி
நல் அறிவு
சூழ்நிலையில் அறிவோம்

அறிய வேண்டியது
பல வகை
அறிவது நம் நிலை.

இயற்கை அறிவை
உணர்வுடன் அறிந்து
படிப் படியாக
படிப்பிலும் அறிந்து
பட்டறிவை
பகுத்து அறிந்து,
கல்வி அறிவை
நிலைப்பட தெரிந்து,
தொழில் சார்ந்த
கல்வியிலும்
முறையுடன் அறிந்து
துறைச்சார்பு
விரிவினையும்
துடிப்புடன் அறிந்து,

அனுபவ அறிவும்,
பொது அறிவும்
பல்வேறு
மனங்களிலும்
செயல்பட
செயலக அறிவை
செழிப்பாக செய்வோம்.

அறிதலை
செயலகத்தில்
நிலை பெறச் செய்வோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

07-01-2020

2020 செயல் மன்றப் பதிவு :

மொழி:

மனித இனத்தின்
ஐவகை
ஐம்புலன்களில்
உருவாகி,
முழுமை பெற்று
உடல் உறுப்புகளின்
துணையோடு,

நாக்கின்
மொக்கினிலே
மொழிந்து,
வழி,
வழியாக
மனிதர்களின்
மரபில்
உருவாக்கும்,

உருவாகிய
எழுத்துக்களில்
நிலை பெறுகிறது.

ஒவ்வொரு காலத்தில்
எழுத்துருக்கள்
நிலைப் பெற்றாலும்
எக்காலம் என அந்தந்த
மொழிகள்
பயனுற,

வலியுறுத்திய
இடங்களில்
மட்டும் தான்,

மக்களின் போராட்ட நிலைகளிலும்,
சமய ஒருமைபாட்டிலும்
நிலைத்து நிற்கிறது.

அண்டம்
தோன்றியது
13.5 பில்லியன் ஆண்டுகள்
எனவும்,

தற்கால மனித இனம்
2,50,000
ஆண்டுகளுக்கு
முன்னர் அறிவு
இயல்பாளர்கள்
எனவும் கருதுகின்றர்.

நடைமுறை பதிவில்,
1,00,000-50000 ஆண்டுகளுக்கு
முன்
மனித இனம்
மத்திய ஆசியா ஊடாக,
ஐரோப்பா,
ஆசியா,
அமெரிக்கா
ஆகிய
இடங்களில்
பரவியதாக
பதிவாகி உள்ளது.

சுமார் 40,000
ஆண்டுகளுக்கு
முன்பு
‘ பேச்சு மொழி ‘
தோன்றியிருக்கலாம்
எனக் கருதப்படுகிறது.

மொழிகள்,
ஓலியின்
கூறுகளாகவே
பல காலங்கள்
நிலைப் பெற்றன.

மொழிகள்
அந்தந்த
வட்டார மனிதர்களின்
நடைமுறை
பயன்பாட்டில்
மொழி நிலை பெற்றது.

பசியி்ல் உணவைத்தேடி,
உயிரில்
நிலைப் பெற்றது
மனித இனமும்.

கால் போன போக்கில்,
காட்டுவாசி
ஆகிய மனித
இன
உயிரணுக்களாக,
மரபில் தோன்றி
இருந்த
மனித இனம்,

கிமு 10 000
ஆண்டுகள்
அளவில்
ஆற்று ஒரப்பகுதியிலும்,
காட்டில்
விலங்குகள் வேட்டையாடியும்,

விவசாயத்திலும்
பல நிலைப்படுகின்ற
தொழிலில்களின் நிலையில் இருந்தும்,

தத்தமது பகுதிகளில்,
பல இடங்களுக்கு
மாற்றலாகியும்,

மனித இன உயிரின்
தரத்தினை
மேம்படுத்தினர்.

5000 ஆண்டுகளுக்கு
முன்னரே
பதிவால்
நிலைப்பெற்று,
பதிந்த
பொருட்களுக்கு
ஏற்ப
எழுத்துருக்கள்
நிலைப் பெற்றன.

தமிழ் மொழியில்
எழுத்துருக்கள்
நிலை பெற
சமீபத்தில்
ஆயிரக் கணக்கான
கல்வெட்டு,
தொல்லெழுத்துப் பதிவுகளில்
கிடைத்துள்ளன.

கண்டு பிடிக்கப்பட்டவைகளில்,
ஏறத்தாழ
95 விழுக்காடு
தமிழில் உள்ளன;

மற்ற மொழிகள்
அனைத்திலும்
ஐந்து விழுக்காட்டுக்கும்
குறைவானவே
கல்வெட்டுகளில் உள்ளன.

பனையோலைகளில்
எழுதப்பட்டு,
பலரும்
வாய்மொழி
மூலம்
வழி,
வழியாகப் பாதுகாக்கப்பட்டு
வந்ததால்,
மிகப் பழைய தமிழ்
மொழிஆக்கங்களின்
காலங்களைக் கணித்தே
கருத்துக்கள்
பதிவாக உள்ளது.

மொழி இயல்பின்
உட்சான்றுகள்,
மிகப் பழைய
ஆக்கங்கள்
கி. மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும்
கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும்
இடைப்பட்ட
காலத்தில்
கணிக்கப்படுகின்றன.

தமிழில் இன்று மொழிகளில்
ஆதாரமாக
கிடைக்கக்கூடிய
மிகப் பழைய
ஆக்கம்
தொல்காப்பியம் ஆகும்.

தொன்மையான
பண்டைக்காலத் தமிழ்
மொழியின்
இலக்குகளை
அக்கணமே
எழுத்துருவில்,
சொற்களின் அடிப்படையில்,
முதலில்
பொருட்கள்(எழுத்தின் மூலமும்)
உருவாக்குவதற்கும்
தமிழிலும்
விளக்கும்
ஒரு நூலாகும்.

கதை வடிவில்
கற்பனையில்
தோன்றிய
காப்பியமாகிய
சிலப்பதிகாரமும் போன்ற
இதிகாசங்கள்,
கி. மு 200 முதல் கி.பி 200
பதிவுகளின் பிரதியில்,
பல்வேறு முறைகளில்
தொடர்ச்சியாக
பதியபட்டதை
பாதுகாக்கின்றனர்.

சமய கோட்பாடுகள்,
நிலை
பெறுவதற்கு,
மொழிகளின் மூலம்
பல நூற்றாண்டுகளாக
அந்தந்த நாட்டு மக்களின்
பழக்க வழக்கத்திற்கேற்ப
வாழும் முறைமையில்
மொழிகள் நிலைப்படுத்தப்படுகிறது.

சமயமும், கலையும்
பகுத்து உணர்வது,
நாட்டு மக்களின்
மொழி பிரவாகத்திலும்
ஒவ்வொரு கால எல்லைக்குள்
நடைமுறைமைக்கு
ஏற்ப பரவுகிறது.

பரவிடும் காற்று,
மொழிக்கும்,
வாழ்க்கைக்கும்,
மனித இனத்துக்கும்
உதவட்டும்.

பதிவர்,
செயல் மன்றம்.

08-01-2020

செயல் மன்றப் பதிவு:

இயற்கை:

இயல்பினில்
இயங்குவது
இங்கிதமான
‘ இயற்கை ‘
நிகழ்வே.

நிகழ்வதில்
நிற்கும்
நிலைப்பாடு
நித்தம் இயங்கும்
இயற்கை செயலே.

‘ அ’மைதி,
‘ஆ’ற்றலில்
‘இ’யங்கும்
‘ஈ’ர்ப்பு,

‘உ’லக மக்களில்
‘ஊ’ற்றெடுத்து
‘எ’ண்ணத்திலும்
‘ஏ’ற்றமாகி
ஒளியிலும்
ஓசையிலும்
‘ஔ’தசியத்திலும்,

‘ இயற்கை ‘
அ’ஃ’தே
வடிவில்
‘ பரிணாமக் கொள்கை ‘
ஆகிறது.

இயல்பினில்
இயங்கும் இயக்கம்
இயற்கையின்
வெளிப்பாடு.

கைம்மாறு கருதாது
படைப்பினில்
இயங்கும் இயல்புகள்
அனைத்தும்
இயற்கையின் விந்தையே
ஆகும்.

இயல்பினில்
இயங்கும்
பொருட்கள்
முற்றிலும்
இணைந்து
இயக்கமாக
செயல்படுவது
இயற்கை
தன்மையின்
முக்கியத்துவம்
ஆகும்.

மனிதமும்
இயற்கையில்
ஒரு சிறு
துளியே.

மனிதனின்
செயல்கள்
அனைத்தும்
‘ இயற்கை ‘
பரிமாணங்களின்
பரிமாற்றம்.

முழு
முதல்
பொருட்களாகிய,
கல், மண், மலை,
என புவியில்
இயங்கும் சிறப்பினால்,
பொருட்களை கொண்டு
இயங்கும்
இயற்கையின்
தன்மைகள்
அனைத்தும்
இயற்கையின் கோட்பாடுகளே.

மறையும் பொருட்கள்,
அவற்றின் இயக்கம்,
அவை இயங்கும்
இடம்,
இயங்கும் காலம்
ஆகியவை
அனைத்தையும்
இணைத்து
இயற்கை
என்கின்றோம்.

உயிரினம்,
உயிரின அறிவு
போன்றவையும்
இயற்கையில் அடங்கும்.

இயற்கை
ஆய்வினில்
அறிவியலும்
மிகப்பெரிய
ஒரு பகுதியே
ஆகும்.

இயற்கை
என்ற சொல்லுக்கு
ஆங்கிலத்தில்
” நேச்சர் ”
என்ற சொல்
பயன்படுத்தப்படுகிறது.

‘ நேட்சுரா ‘
என்ற இலத்தீன்
சொல்லின்
‘ வேர் ‘ தான்
நேச்சர் என்ற
ஆங்கில சொல்லாகும்.

பொருள்களின்
தோன்றும்
விந்தையை
பிறவி,
பிறப்பு
என பொருள்படும்.

கிரேக்க சொல்
‘ பிசிசு ‘
என்பதும்
‘ நேச்சுரா ‘
என்ற லத்தின்
மொழி பெயர்ப்பு ஆகும்.

தாவரங்கள்,
விலங்குகள்,
மற்றும் உலகிலுள்ள
பிற உயிரினங்கள்
அனைத்தும்
தங்கள் சொந்த
இணக்கத்தில்
உருவாக்கிக் கொள்ளும்
உள்ளார்ந்த பண்புகளுடன்
இணைவது
அனைத்தும்
‘ இயற்கை ‘
என்ற
சொல்லின்
பொருளே ஆகும் .

‘ இயற்கை ‘
என அழைப்பது
அண்டத்தின்
இயல்பு இயலே.

அண்டத்தின்
இயற்பியல்
என்ற சொல்
பல்வேறு வகைகளில்
விரிவான
பொருள்களைக் கொண்டது
ஆகும்.

இவையாவும்
படிப்படியாக
வளர்ந்து
நன்மதிப்பையும்
நம்பகத்தன்மையையும்
பெற்று அழியாமல்
நிலைத்து இருக்கின்றன.

கடந்த பல
நூற்றாண்டுகளில்
நவீன அறிவியல்
முறைகளிலும்
அண்டத்தின் இயற்பியல்
என்ற பொருள்களின் பயன்பாடு
அதிகரித்தவண்ணம் உள்ளது.

‘ இயற்கை ‘
என்ற சொல்லின்
பெரும்பாலும்
நிலைக்கின்ற
நிலவியல்
மற்றும்
வனவியல்
என்ற பொருள்களையும்
குறிப்பதே ஆகும்.

தாவரங்கள்,
விலங்குகள்
வாழும் பொது
உலகத்தை
‘ இயற்கை ‘
என்ற சொல்லே
பொருள்படும்.

பல்வேறு
சந்தர்ப்பங்களில்
உயிரற்ற பொருட்களுடன்
தொடர்புடைய
செயல்முறைகளுக்கும்
புவியில் தோன்றும்
மாற்று செயல்முறைகளும்
‘ இயற்கை ‘
என்ற சொல்லில்
அடங்கும்.

மனிதர்களின்
செயலில்
தோற்றுவிக்கப்படும்
இயற்கை பொருட்களுக்கு
தமது கட்டுபாட்டில்
உள்ள செயல்பாடுகளின்
முயற்சியில்
தோன்றுகின்ற
அனைத்து செயல்பாடுகளும்,
தம் அறிவின்
செயல்பாடு,
‘ செயற்கை ‘
என புரிந்து
நிலைப்படுத்த
எத்தனிப்பதே
ஆகும்.

இயற்கைச் சூழலில்
காட்டு விலங்குகள்,
பாறைகள்,
காடு என்ற பொருளைக் குறிக்கும்.

இயந்திரங்கள்
மூலம்
இயற்கை சிதைவு
மனித செயல்பாடுகளுக்கே
உண்டான
தமக்கு அந்த பொருட்களை
எந்த அளவுக்கு
பயன்படுத்தி கொள்ளலாம்
என்ற சுயநலமே.

இயற்கையை
உணர்ந்தால்
சமயக் கருத்துக்களும்
ஒன்றுபடுமே.

பதிவர்,
செயல் மன்றம்.

09-01-2020

செயல் மன்றப் பதிவு :

புவி :

புதுமையின்
வியப்பு,
புதிராக
விளங்கும்
புவியின்
சிறப்பு.

உயிரின்
விந்தையை
தமது சூழற்சியிலும்
நிலைக்கச் செய்யும்
புதிய,
புதிய படைப்பை
தன்னகத்தே
தோற்றுவிக்கும்.

உயிரற்ற பொருட்களும்
உழன்று சுழலும்.

சுழலும்
ரிங்கார
யதார்த்தத்தில்
இயங்கும்
சூரிய
மண்டலத்தில்,
புவியும்
தமது சுழற்சி
பாதையை
நிர்ணயித்து
சுழல்கிறது.

சராசரியாக
கணக்கிட்டோம் எனில்,
4.1 – 3.8 பில்லியன் ஆண்டிற்கு இடையை
பலத்த தாக்குதலின் போது
விண்கற்களின் தாக்கம்
புவியின் சுற்றும் சூழலையும்
குறிப்பிடத்தக்க மாற்றத்தை
ஏற்படுத்தி இருக்கிறது.

கால வரிசையில்
புவியின் தோற்றம்
பதிவில்
நிலைப்பட்டு இருப்பது
4.5 பில்லியன் ஆண்டிற்கு
தோராயமாக
கணிக்கப்படுகிறது.

இயற்கையின்
சேர்மானத்தில்,
10-20 மில்லியன்
வருடத்திற்கு
முன் புவியின்
பெரும்பான்மை பகுதி
‘ பரிதி ‘ எனப்படும்
பகலிரவு தோற்றுவிக்கும்,

‘ ஆதி ‘ என்றழைக்கும்
ஆற்றலின்
திசையாகிய
கதிரவனில்
இருந்து
உருவாகி,
மிஞ்சிய வாயு,
தூசுப் பொருள்களில்
புவியும்
மற்ற கோள்களும்
தோன்றுகிறது.

வளி(காற்று)
மண்டலத்தில்
நீர் சேர,
சேர
உருகிய நிலை
புவி மேற்பரப்பு
இறுக தொடங்கியது.

புதுப்புது விரிப்பு
புவியின் நிலைப்பு.

புவியில்
மோதிய
வால்
வெள்ளிகள்
மற்றும்
சிறுகோள்கள்
மூலமாக
மேகங்கள்
உருவாகி
பெருங்கடல்கள்
உருவாகின.

அதன்
பின்னரே
உயிர்கள்
வாழ தகுந்த சூழல்
உருவானது.

அடுத்து ” உயிரக காற்றும் ”
அதிகரிக்கத் தொடங்கியது.

வெறும்
நுண்ணுயிர்கள்
மற்றும்
மிகச்சிறிய உயிர்கள் மட்டும்
ஒரு பில்லியன்
ஆண்டுகள் வரை புவியில் இருந்துள்ளன.

580 மில்லியன்
ஆண்டுகளுக்கு
முன்
பலசெல்
உயிரினங்கள் தோன்றி
முக்கிய
பெருந்தொகுதிகள் பரிணமித்தது.

6 மில்லியன்
ஆண்டுகளுக்கு
முன்தான்
மனித இனத்தின்
நெருங்கிய
சிம்பன்சிகள் தோன்றின.

அதில் இருந்து
மனித
உறுப்புகளாக
பிரிந்து,
தற்கால
நவீன மனிதர்கள்
உருவானார்கள்.

தோன்றிய காலம்
தொட்டே
நமது புது புது உயிர்கள்,
உயிரியல்
வடிவில்,
நிலத்தில்
பல மாற்றங்கள்
நடந்தவண்ணமே உள்ளது.

உயிரினங்கள் படி
வளர்ச்சிக் கொள்கைப்படி
புதிது
புதிதாக
உருவாகிக்கொண்டே
மாற்றத்தை நிகழ்த்துகின்றன.

புவியின்
தற்போதைய
கண்டங்கள்
மற்றும்
பெருங்கடல்களின்
வடிவத்திற்கு
முக்கிய காரணம்
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு ஆகும்.

கமழிப் படலத் தோற்றமும்,
உயிரக வாயுப் பெருக்கமும்,
மண் உருவாக்கமும்
செய்து
உயிரற்ற நிலையையும்,
காற்றுவெளியின்
கணிசமான
மாற்றத்தையும்
கொண்டுவந்தது
உயிர்க்கோளம்
ஆகும்.

காலத்தில் நிலைப் பெற்று,
ஒலியின் ஓசையிலே,
காற்றின் உயிரகத்தில்,
உயிரிலும்,
அன்பினிலும்
தொடர்செயல்.

10-01-2020

செயல் மன்றப் பதிவு :

உயிர் :

அன்பில் உள்ள அணு
ஆய்ந்து
இன்புற்று
ஈர்க்கப் பட்டு
உய்ய, உயர, உயிராகி
ஊறுகின்ற நிலையில்
எட்டி
ஏற்புடையவைகளில்
ஒன்றி
ஓராயிர நுண்ணியத்தில்
ஒளதாரியமாக மனிதமாக நிலைக்கப் பட்டு
அஃதே உயிராகிறது.

ஆம் நண்பர்களே!

அன் என்ற அன்பில்
அரும்பி, அரும்பி
அணுகி,
அணுக்களிலும்
அன்பு பெருகி,
அண்ட அண்ட
அணைத்து, பிரிந்து
அணைவாக
அருவாகி, உருவாகி
அன்பான அணுக்களாகி ‘ உயிர் ‘ நிலைக்கிறது.

ஆயிராமாயிரம் உன்னத உயிர்கள்
ஆராவார இல்லாமலும்,
ஆராவாரத்துடன்
ஆண்டுக்கு ஆண்டு,
ஆர்ப்பரித்து

இன்மையில்
இல்லாத பல

ஈர்ப்புடன்
ஈர்க்கப் பட்டு,

உன்னத
உயிராக
உயிரக காற்றிலும் நிலைத்து
உலகினில் தோன்றும் பல,

உயிர்த்து பன் மடங்காகி,

ஊர்ந்து உவப்பினில்
பெருகி,
மெய்யினில்
கலந்து
கடந்து,

நீவீர்,
நீரிலும் கலந்து
உறவாடி,
நீர்க்கப்பட்டு
நீடித்து இருக்கும்

உயிரே,
உய்ய, உய்ய
உவப்பினில் பெருகி
மகிழ்ந்து,

மண்ணிலும் நிலை பிரியா
உன்னத உயிரே,
உண்மையில்
ஊருக்கு அணியாகு,
உயிரற்றவைகளில்
இருந்து,
உயிராகு,
உயிராகிக் கொண்டே இரு.

ஓய்வு எடுக்கும் வரை
உயிராகு உயிரே.

உயிர் பற்றி,
பற்றி
வரையறை ஏதும் இன்றி,

உயிர்
இயல்பில் இயங்கும்
நடப்பு வரையறைகளே,

அனைத்து உயிரும்
விரிவாகும்
விவரிப்புகளே.

உயிர் அனைத்தும் பண்புகளில்

தன்நிலைப்பட்டு
மாறாத நிலையில்
அகச் சூழலில்
பேணி
ஒழுங்குமுறை ஆகிறது.

வெப்பநிலையைக் கட்டுபடுத்த
வியர்த்தலைக் கூறுவோம்.

உயிரின் ஒருங்கு அமைவு
அடிப்படை அலகுகளாகி,
உயிர்க்கலன்களின் ஒன்றி
மேலும் அலகுகள் இணைந்து
ஒரே கட்டமைப்பாக
ஒருங்கே அமைகிறது.

இயங்கி,
வளர்ந்து
சிதைகளில்
மாற்றம் பெற்று
வேதி இயல் மையங்களில்
ஆற்றலாக உருமாற்றி,
ஆற்றலை
உயிரக உறுப்புகளாக மாற்றுகிறது.

வளரும்
மாற்றம்

கரிமப் பொருள்களில்
இணைந்து,
சிதைத்து இயல்பில்
சிதைமாற்றம் அடைந்து
உயிரியல் செயலாக
நிலைக்கப் படுகிறது.

அக ஒருங்கு
அமைந்துப் பேணி
தன்நிலைப்பாட்டைக் காத்தும்
உயிர்,
சார்ந்த
பிற உயிர் சார்ந்த
நிகழ்வுகளையும்
பேணி,
உயிரிகளுக்கு
ஆற்றல் தேவைப்பட்டு,
உயிரிகள் வளர்கிறது.

வளர்கின்ற
மாற்றம்
சிதைகின்ற
மாற்றத்தை விட
ஓங்கியிருப்பதால்
வளர்ச்சியைத் தருகிறது.

வளரும் உயிரி,
தேவையான
பொருண்மத்தோடு திரட்டி,
அதன்
அனைத்துப் பகுதிகளிலும்
தன் உருவ
அளவைக் கூட்டுகிறது.

நமது உயிரக
இயக்கத்திற்கு
தேவை
மூச்சு,
ஆன்மா,
உயிரினம்,
வாழ்க்கை,
ஆர்வம்

என்று உயிர் அறிவோம்.

11-01-2020

செயல் மன்றப் பதிவு

நீர் :

நீர்,
நீராக
நீர் ஆவியாகி
நீராலும் நிலைக்கப்பட்ட

பூமி,
பூவில் மணம் கமழும்
பூத்து இருக்கும் செடி, கொடி, காய் பழங்கள்
பூமியில் மிஞ்சும் உயிரினமும் உயிரற்றவையும்

புதுப்புது
புதுமை மலர
புவியில் வியப்பூட்டும்
புதுப்புது ஆண்டுகள் நீரிலும் நிலைக்கிறது.

வேதிய பொருள்களாலே
வேற்றுமையை
தரமாக்கும்
ஓர் கனிமம்
நீரும் நிரம்பிய புவி இது.

ஓர் நீர் மூலக்கூற்றில்
ஓர் உயிரக காற்றுடன்
இரண்டு ஐதரச அணுக்களுடனே
இரண்டும் ஒன்றாகி,
நம் உயிரைக் காக்கிறது.

திட்ட வெப்ப அழுத்தத்திலே
ஒரு நீர்மமாக இருப்பினும்
திட நிலையில் பனிக்கட்டியாகவும்,
வாயு நிலையில்
நீராவியும் காணும்
நீராகிறது.

நீர், மழை வடிவில்
மனங்குளிர
பூமியில் வீழ்படிவமாகவும்,
மூடும் பனியாகிறது.

நீர்ம நிலைக்கும்,
திடநிலைக்கும்
இடை நிலையில்
நீர்த்துளிகள்
மேகங்களாக மாறுகிறது.

இறுதி நிலையிலே
பிரிந்து
படிகநிலைப் பனிக்கட்டி,
வெண்பனியாக
வீழ்ந்து படிவாகிறதே.

நீராகும்
செயலாக
தொடர்ந்து
நீராவிபோக்கு,
ஆவி ஒடுக்கம்,
வீழ்படிவு
போன்ற செயல்களுடன்
நீர்ச்சுழற்சிக்கு
இயங்கிக்கொண்டே
கடலைச் சென்றடைகிறதே.

நீரால்
71 சதவிதம்
பூவியில் சூழப்படுகிறது.

புவியில்
பெரும்பகுதி
சமுத்திரங்கள்,
பரந்த
நீர்நிலைகளிலும்,
கிட்டதட்ட
1.6% பகுதி
நிலத்தடி
நீர்கொள்
படுகைகளிலும் காணப்படுகிறது.

வளி மண்டல
நீரிலும் சற்று
ஏறக்குறைய
0.001
பகுதி சதவிதம்
வாயு வடிவிலும்,
காற்றில் மிதக்கும்
திட,
திரவ துகள்களால்
உருவாகும்
மேகங்களிலும்,
காற்றின் நீராவி குளிர்ந்து
சுருங்குவதால் ஏற்படும்
நீர்க்கோர்வைகளிலும்
காணப்படுகிறது.

நில மேலோட்ட
நீரின் 97
சதவிதமாக
பகுதி
உவர் நீர்ச் சமுத்திரங்களிலும்,
2.4% பனி ஆறுகள்
மற்றும் துருவ
பனிக்கவிகைகளிலும்,
௦0.6%பகுதி ஏனைய
நில மேலோட்ட
நீர் நிலைகளான
ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகளிலும் காணப்படுகிறது.

புவியில்
நீரில் ஒரு சிறிய அளவு
உயிர்களின்
உடல்களிலும்,
உற்பத்தி செய்யப்படும்
பொருட்களிலும் காணப்படுகிறது.

மற்ற
நீர் துருவ பகுதியிலும்,
பனிக்கவிகைகளிலும்,
பனி ஆறுகளிலும்,
நீர் கொள் படுகைகளிலும்,
ஏரிகளிலும்
சிறிது அளவு இருக்கலாம்
என நம்ப படுகிறது.

புவியின்
உயிரினங்களுக்கான
நல்ல நீர் தான்
நமக்கு
ஆதாரம்.

நீரில் பெருமளவு
விண்மீன்கள்
உருவாதலின்
துணைப் பொருளோகுமோ
என
வியப்பு மேலும் பெருகுகிறது.

விண்மீன்களின்
தோற்றம்,
வலிமையான
வெளிநோக்கு
வளிக்காற்று
மற்றும்
புழுதிப் புயலால்
சூழப்பட்ட
வெளியேற்றம்
நாளடைவில் சூழ்ந்துள்ள
வாயுக்களைத் தாக்குவதில்
உருவாகி
அதிர்வலைகள்
வாயுக்களை அழுத்தி,

வெப்பம் ஏறச் செய்யும் சமயம்
தென்படுகிற
நீரானது
வெப்பச் செறிவின்
தன்மை உடைய
வாயுக்களால்
அதிவேகமாக
உற்பத்தி செய்யப்பட்டது
என்போம்.

பால்வெளி
எனும்
நமது விண்மீன்
மண்டலத்தினுள்
காணப்படும்
நட்சத்திரங்களுக்கு
இடையேயான
மேகங்களில்
தண்ணீர்
கண்டறியப்பட்டுள்ளது.

நீரின் கூறுகளான
ஐதரசன் மற்றும்
உயிரக காற்று ஆகியவை
பிரபஞ்சமாகிய
ஒரு பதத்தில்
மிகுதியாகக் காணப்படும்
என்ற நம்பிக்கை பிறக்கிறது.

தனிமங்கள் மற்ற
ஏனைய
விண்மீன் மண்டலங்களிலும்
தண்ணீர் மலிந்திருக்கும்
என நம்பிக்கை கொள்ளலாம்.

நட்சத்திரங்களுக்கு இடையேயான
மேகங்கள் நாளடைவில்
சூரிய ஒளிமுகிலாகவும்,
சூரிய மண்டலமாகவும்
சுருங்குகின்றன.

வளி மண்டலத்தில் உள்ள நீர்
புதன் கிரகத்தில் 3.4 சதவிதமாக
வெள்ளி கிரகத்தில் 0.002 சதவிதமாக
செவ்வாய் கிரகத்தில் 0.03 சதவிதமாக
வியாழன் கிரகத்தில் 0.0004 சதவிதமாக
சனி-சந்திரன் நீர் வெளிக்கோள்களில்
நிறைய
நீரின் அளவு இருக்கலாம்
என பதிவுகளில்
புலப்படுத்துகிறார்கள்.

புவி தள ஓட்டத்தில்
நீர்
சிறிதளவு
காலங்காலமாக
சேர்த்துக் கொள்கிறது.

ஏரிகளின் நீரில்,
குளிர் காலங்களில்
உயரமான இடங்களிலும்
மற்றும் பூமியின்
வட மற்றும்
தென் கோடியின்,
துருவ முகடுகள்,
பனிப்பாதைகள்
மற்றும்
பனியாறுகளில்
பனி மண்டுகிறது.

நீரானது நிலத்தினுள்
ஊடுருவி நிலத்தடி
நீர்கொள்
படுகைகளுக்குள் செல்லக் கூடியது.

இந்நிலத்தடி
நீர்,
பின்னர்
நீர் ஊற்றுக்கள்,
வெந்நீர் ஊற்றுக்கள்
மற்றும்
உஷ்ண ஊற்றுக்கள்
வாயிலாக மீண்டும்
கிளர்ந்தெழுந்து,
மேற்பரப்பிற்கு வரலாம்.

நிலத்தடி
நீரை
கிணறுகள்
மூலம் செயற்கையாகவும்
இறைத்துக் கொள்ளலாம்.

மனிதர்களுக்கும்,
நிலத்தில் வாழும் ஏனைய
உயிர்களுக்கும் நல்ல நீர்
இன்றியமையாதது.

எனவே
இவ்விதமான
நீர் சேகரிப்பு
மிக முக்கியமான ஒன்று.

ஆனால்,
உலகத்தின் பல பகுதிகளில்
தண்ணீர்ப் பற்றாக்குறையே நிலவுகிறது.

பதிவர்,
செயல் மன்றம்.
12-01-2020

செயல் மன்றப் பதிவு :

நிலம்:

நில, என
நிலவி
‘ நில (அ)ம் ‘
என்றாகிறது.

‘ நில் ‘ என நம்மை
நிற்க வைத்து,
நிலைத்து
நின்று

‘ நிலம் ‘
என்ற
பெயரை,

ஏந்துவது, நிலம்.

நிலைக்கின்ற
பெருமையை
யதார்த்தமாக,
ரிதமாக
நலமாகவும்,
வளமாகவும்
வடிவமைக்கும்
நிலப் பகுதி
இது.

நிலமே,

நிதமும் எம்
(இ)லக்கை
மேம்படுத்தும்
உம் சிறப்பே
எங்களது பிறப்பு.

நித்தம் எங்களை
நிலைக்க
உமது பரப்பே
எங்களது இருப்பு.

நீடித்த மலை,
நின்று காக்கும் மரம்,
காத்து நிற்கும்,
காடுகளின்
துணையோடு,

நீண்ட காலமாக
வாழும் உயிர்களின்
தொடர்ச்சிக்கு
நீங்கா வளமாக,

நிரந்தரமாக
நீரில்
மூழ்கியிராத
புவியின்
திண்ம மேற்பரப்பே
உமது பரந்த விரிப்பு.

நிலத்துக்கும்,
நீருக்கும்
இடையிலான
பிரிவினை
மனிதனுடைய
அன்றாட செயல்களாகிறது.

நிலம்,
நீர்
என்பவற்றின்
எல்லை இடையில்
உள்ள ஆட்சி
அதிகாரங்கள்,
வேறு பல
காரணிகளையும்
பொறுத்தே மாறுபடுகிறது.

கடல்சார் எல்லை,
அரசியல் எல்லை,
மனிதர்கள் வகுக்கும்
எல்லையிலும் இருந்தும்,
பரந்தும் இருக்கிறாய்.

நீரும், நீலமும்
சந்திக்கும் இடம்
அலைகளின் நிலைகளில்
வரையறுப்பதற்கான பல
இயற்கையான
எல்லைகளும் அடங்கும்.

பாறை நில
எல்லை வரையறுப்பது,
சதுப்பு நில எல்லையை
விட இலகுவாக
அமைகிறது.

சதுப்பு நில
பகுதிகளில்
பல நேரங்களில்
நிலம் எங்கே முடியும்,
நீர் எங்கே தொடங்கும்
என அறிவது
கடினம்.

நீர் வற்றப்பெருக்கத்தினாலும்,
காலநிலை பொறுத்தும் கூட
எல்லைக் கோடுகள்
வேறுபடக்கூடும்.

நிலம் மனித
இனம் இருக்கும்
வரை
பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிலம்
மனித இனமும்
நீண்டு வாழ
நிலையை ஏற்படுத்தும்.

‘ நுல் ‘
எனும் இரண்டு எழுத்து
வேர்ச் சொல்லில் தொக்கி,
நில் எனும் அடியில் இருந்து
நிலம் எனும் சொல்லில் இங்கு நிலைப்பட்டது.

பிற மொழிகளில் நிலம் எனும் சொல்:

மலையாளத்தில்-நிலம்
கன்னடம், துளு – நெல
தெலுங்கு – நேல

என வட்டார மொழிகளில் நிலைப்படுகிறது.

நுல் > நெல் >
நெள் > நெரு >
நெகிழ் {நெகிள்) >
நீள் > நிள் >
நில் = நிலம்
என
பலவாறு வெவ்வேறு
மொழிகளில்
‘ நிலம் ‘ என்ற
ஆதாரச் சொல்
நிலைப்படுகிறது
என அறிவோம்.

இயற்கையின் கொடையை
மனிதனால் உருவாக்க முடியாது.

நிலம் செயலற்றவை
மனிதமுயற்சியின்
இணைப்பினாலே
ஒரு சில,
சில
சிறிய செயல்களில்
நிலம்
செயல் உள்ளதாகும்.

பதிவர்,
செயல் மன்றம்.
13-01-2020

செயல் மன்றப் பதிவு

கல்வி

‘ கல ‘
என்ற
இரு மெய் எழுத்துக்களில்
உருவான
ஒரு சொல்லில் இருந்து,
‘ அ ‘ என்ற
இரு ‘அ ‘கரத்தில்
கலந்து,

எ.கா:
க(க்+அ),
ல(ல்+அ)

‘ கல ‘
என்ற
சொல்லாகி
ஓன்றாகி
‘கல’ ந்து
நிலையாகி,

மனித இனம்
தழைத்து அறிய
செயல்பட,

பலரும்
பின்பற்றிட
இணக்கமாக,

‘ கல ‘
என்ற
சொல்லுடன்
‘வி’ ழைந்த
சொல்
‘ கலவி, ‘

ஆகி

‘ கல்வி ‘
என்று
நிலைப்பட்டது.

இந்த
சொற்களின்
பதிவினை
‘கல்’ லில்
‘வி’ ளக்கமாக
பதிந்ததாலும்
‘ கல்வி ‘
என பெயரில்
அழைக்கப்படுகிறது.

‘கல்வி
மனிதனின் கலம்,
அடைக்கும் கலம்.’

‘ கல(அ)ம் ‘
மனித இன
உயிர்,
உடலையும்
பாதுகாக்கும்
‘ கலம்(பாத்திரம்) ‘ ஆகும்.

மனித இன
‘ கலம் ‘
உயிரில் கலந்து,

வினைகள்(செயல்கள்)
பல புரிந்து,

உடலில்
பல தகுதி பெற,

கலந்து
உறவாடும்
‘ கல்வி ‘ என்றும்
முக்கியமானது
ஆகிறது.

செவ்வனே
யதார்த்தமாக
லாவகமாக
கற்கும்

‘ செயலாக ‘
அமைவதே,
கல்வியின்
அடிப்படை நோக்கம் ஆகும்.

‘ கல்வி ‘ என்ற
சொல்
‘ எது ‘
என்று கேள்வி
கேட்கும் நிலைக்கு
உயர்த்தக்ககூடியது.

கல்வி,
மனித
இனத்தை சீராக்கி
நல் நிலைப்படுத்தும்.

‘ எது சீர், ‘
‘எது சீரகாகும் ‘ எனும்
சொல்,

கிரேக்க,
லத்தீன் மொழியில்
அடிப்படையில் இருக்கிறது.

‘ எதுசீர்,
எதுக்கு இது’

என
பல கேள்வி
கேட்கும்
சொல்களால்
அடிப்படையிலே
பழங்காலத்தில்
மனித
இனத்தால்
பழக்கப்பட்ட
மொழிகளால்
பலரால்
அறியப் படும்
சொல்லாகும்.

மனித
இனத்தை,

எது உள்ளத்தையும்,
உடலையும்
சீர்படுத்துமோ,
அது கல்விக்கு உரிய
சொல்லாக
பயன்படுத்தப்படுகிறது.

‘ எது ‘ என்றும்
‘ எழு ‘ என்றும்
தமிழ்
சொல்லிலும் நிலவுகிறது.

‘எது, கேள், செயாலாக்கு’ எனும் தமிழ்
கல்விக்கு உரிய சொல்,

‘ அறிவால், செயலால் ‘

ஆங்கில மொழி
நிலைப்பட்டவுடன்

‘ எதுக்கு வேண்டும், கவனம், செயல்
என்ற ஆங்கில சொல்லாகி,

‘எதுக்கு செயல்’

என்ற சொல்லால்
நிலைக்கப்பட்டு
‘எதுகேசன் ‘ (Education)
என்று
ஆகி இருக்கிறது.

‘ எடு ‘
என்று தமிழ்
சொல்லோடு
‘ எது (edu)’
என்று ஆங்கில
சொல்லோடு இணைப்போம்.

உனது-(உ)னது
என்பதுடன்,
உமது- (உ)மது யு(you)

என்ற
ஆங்கில ஒலியை இணைப்போம்.

சீர், சீராதல்,
எனும்
தமிழ் சொல்,
‘ கேர் ‘ எனும்
ஆங்கில
சொல் வளர்ப்பது,
எழுப்புவது,
கல்வி
அளிப்பது
எனப் பொருள்படும்.

எந்த நேரத்தில்
பெறும் நல்ல
பேறுகளையும்,

நாடி வரும்
மனிதர்களுக்கு,

உதவியாக
உண்மையான
தரமாக,

விவரமாக
யாவருக்கும்
கற்பதற்காக
அமைக்கப்படும்
உதவியாகவும்,

நாட்டின்
‘ பொருள் ஆதாரம் ‘
சீர் படுத்தவும்
கல்வி
என்றும் சிறந்து விளங்கும்.

தன்னை உணர்ந்து,
பரிபூரண கட்டுபாட்டுடன்
பெறும் கல்வி
பயனுள்ளதாக
அமைவதே கல்வி.

குழந்தை
பருவத்தில் இருந்து
உடல்,
மனம்,
நல் சிந்தனையுடன்
வளர்ப்பது கல்வியின்
சிறப்பு.

அவ்வாறு
கட்டுபாட்டுடன்
வளரும் குழந்தை
தன்னை சரியான
முறையில்
மனப்பூர்வமாக
லட்சியத்தை
பொருத்திக் கொள்ள வகை
செய்வது கல்வி.

இளமையில் கற்பது
ஆற்றலை பெருக்கும்.

சிந்தனை,
சீராக வளர்க்க, வளர,
ஆளும் வளர, வளர
முதுமை நிலை வரை
கற்பது
அந்தந்த கால வளர்ச்சிக்கு
ஏற்ப அமையும்.

முதுமை நிலை,

‘ முற்றிலும் துணையான மையமாக்க ‘
உதவும்

‘ கல்வி, கற்றலில் நிலையாக்கும் ‘

ஓர் தொடர் நிகழ்ச்சி ஆகும்.

கல்வி,
கற்கிறவர்களுக்கும்,
கற்பிப்பவர்களுக்கும் சிறந்த
ஆளுமை உடையதாக்கும்.

சகல மனித
இன ஆளுமைக்கும்,
உள்ளத்தின் நல்ல உணர்வுகளை
மேம்படுத்தவும்,

சமுதாயமாக

‘சகல மனித இன
முன்னேற்றத்திற்கும்
தாரளமாக,
யதார்த்தமான சூழ்நிலை அறிந்து,
மானிடர்களும்
கற்று, கடந்து’

நல்முறையில்,
ஆற்றலை ஏற்படுத்த
உதவுவதும்,
தேவைகளை நிறைவேற்றுவதும்
கல்வியே.

கல்வி
எக்காலத்திலும் முடிவற்றது.

குழந்தை வளர்ச்சி
முதல்,
முதுமை வரை
உண்மையான
உலக நிலைகளை
அறிந்து,
தன்னாலும்,
தரணியில் இருக்கும் வரை
‘ வளர்ச்சி பெறும் செயல்களுக்கு ‘
உதவுவது
கல்வியே.

கல்வியால்
மனிதனது
உள்ளார்ந்த அறிவு,
அனுபவம், நம்பிக்கை
என்றும் சிறக்கும்.

கல்வியால்,
மனித இனம்
பல்வேறு
ஏற்றத் தாழ்வுகளிலும்
நிலை பெறுகிறது.

கல்வி
அவரவர்களுக்கு
உரிய
எல்லையை
நிலைக்கச் செய்யும்.

பதிவர்,
செயல் மன்றம்.

14-01-2020

செயல் மன்றப் பதிவு :

‘ இயல் ‘

‘ அ ‘ என்ற வாய் திறந்து
ஒலிக்கும் நிலை
அனைத்து மொழியும்
அதே ஒலியில் ஓலிக்கும் இயல்பு.

‘ ஆ ‘ என ஒலி நீட்டலும்
ஆரவாரமின்றி இயங்கும்
ஆற்றலும்
ஆடிபாடி திறன் உடையோரின் இயல்பு.

‘இயங்கும் யாவும்
இயலே.’

இயற்கை எழிலும்,
இறைமை உணர்விலும்,
இயலும் தன்மை
இயங்குவதின் நிலைப்பாடு.

இருள் என
இருக்கும் கருமை
இயற்கையின் சுழற்சியிலே
இயல்பாய் சூரிய ஒளி.

இருப்பது
இயற்கை,

இறை மடி
என்போர்க்கும்,

இயங்கும்
யாவும் இயலே.

இலக்குகள் நோக்கி
இயங்கும்
இலக்கியமும்,
‘ இயல் ‘ என்போம்.

ஈர்ப்பு விசை
ஈர்க்கப்படும் பூமியிலே

உன்னதம் என
உணர்ந்தோர்க்கும் இயல்பே.

இலக்கியம்
ஒரு கலை என
சொல்வோர்க்கும்
இயல், இயல்பே.

இலக்கிய
இயல்பை
சொல்வதை
காண்போர்,
கேட்போர்,
படிப்போர்,
என்பதும்
மனித இன
இலக்கின்
இயல்.

‘ இயற்பியல் ‘
எனும் இயக்கம்
கைகளில் இயங்கி
‘ இயற்கை ‘
என்று ஆகிறது.

இயலும் நிலைகளில்
உன்னதமாக
இயங்கும் இயல்பு.

இயல்பில் பண் அமைத்து
இயல்பான மனித பண்பாட்டை காத்து
இயலான அறநெறி காத்து
இயல்பினில் தொகுத்துடுவோம்.

வேற்றுமையின்
இயல்பை
இணைக்கும்
வேதிஇயல்.

இயல்பை
இயலாக்கும்
இயல்பியல்.

உயிரிகளை
இயல்பாக்கும்
உயிரியல்.

மிக நுண்ணிய
மயிரிழையில்
இயங்கும்
நுண் இயல்பான
நிலைப்பகுதி.

15-01-2020

2020

” ஒலி ”

செயல் மன்றப் பதிவு :

” ஓலி ”
கேட்கும்
நிலை
அறிவோம்.

” ஒலி ”
என்ற சொல்
‘ ஒ ‘
என்ற
‘ உயிர் ‘ எழுத்தில்
‘ ஒ ‘ ன்றி இணையும்
நம்
உணர்வு
ஓருமைபட்டு
வளி
வரிசையில்
காற்று
ஏற்படுத்தி
‘ உயிரக காற்று ‘
அளவாக
நமது உட்பொருள்
எது
என அறிய
உள்
‘ ஒலி ‘ நிலை பெற

‘ ல ‘ என்ற ‘ மெய் ‘ எழுத்தில்
‘ ல ‘ யமாகி
‘ இ ‘ எனும்
‘ உயிர் ‘
எழுத்தோடு
இணைந்து
இயற்கையாக
இனிமை
பெற

‘ லி(ல+இ)

எனும் சொல்லில்
உருவாகி

ஒருமை
பெற்று

‘ ஒலி ‘

காற்றில் கேட்கிறது,
கலக்கிறது.

‘ஒலி’
ஓசையாகி
நமது
உள்
‘ ஒலிப்பில் ‘
சொற்களாக
ஓசை ஓலியாக
வெளிப் படுகிறது.

‘ ஒலி ‘
ஏற்படும் போது
நம்
நுனிநாக்கு
முன்
பல் வரிசைக்கு
உள்ள

‘ மேல் ‘

அண்ணத்தைத் தொட்டு
‘ ஒலி ‘ ஏற்படும்.

‘ ஒலி ‘

ஒருமையில்
ஒருங்கிணைந்து

அழுத்த
மாற்றத்தின்
அதிர்வுகளுடன்

வளிமத்தில்
நீர் ஊடகத்திலும்
காதுகளில்
பயணித்து,

‘ செயல்படக்கூடிய
எண்ணில்லா
நுண்ணிய நரம்பு ‘ (செ.எ.நு)

செல்கள் மூலம்,

ஒவ்வொரு
கணமும்
ஏற்படும்
தாக்கங்களை
மூளைக்கு
அனுப்ப பட்டு,

அதிர்வு
‘ ஒலி ‘
ஆக
உணரப்படுகிறது.

‘ செயல்படக்கூடிய
எண்ணில்லா
நுண்ணிய’ (செ.எ.நு)

நரம்பு
செல்கள் மூலம்
ஏற்படும்

‘ ஒலி ‘
காதுகளில்
கேட்டு உணரும்
அதிர்வுகளைக் குறிக்கும்.

உடல் இயங்கும்
இயலில்,

உள்ளத்து
இயல்பையும்,

காதுகளால்
கேட்டு,

உணரக் கூடிய
பொறிமுறை
அலைகளை,

உருவாக்கும்
அதிர்வுகளை
பெறுதலும்,

அவற்றை
மூளையினால்
உணர்தலுமே,

காதில்
‘ ஒலி ‘ என
கேட்கப்படுகிறது.

‘ ஒலி ‘

இயல்பும்,
திண்மம்,
நீர்மம்,
வளிமம்

ஆகியவற்றினுள்
கடத்தப்படும்
பொறிமுறை
அலை ‘ ஒலிகள் ‘
பற்றி
ஆய்வுசெய்யும்
பலதுறை
அறிவு
இயல்புகள் ஆகும்.

இது
இயல்பு
இயலின்
ஒரு துணைப்பிரிவு.

‘ ஒலி ‘
இயல்பின் வேகத்தை
ஒலி அலையாக
ஒரு இலக்கத்திற்கு
துல்லியமாக
பயணிக்கும்.

ஓலி பதத்தை காற்றில்
வெப்பத்தில் கடப்பதை
ஒலி வேகத்தை
துல்லியமாகவும்
அறியலாம்.

அகத்தில்
ஒலிப்பதை
‘ அக ஒலி ‘
என்போம்.

இயல்பில்,
இசையில்,
நாட்டின்
அகமாகிய
நல் மனம் நாடும்,
நாட்டினர்
அகங்களிலும்
‘ ஒலி ‘
சீர் அமையும்.

கேட்கும்
சீர் ‘ அக ஒலி ‘
சீராக
உடலிலும்,
உள்ளத்திலும்
பயன்படும்.

விலங்குகளும்
கேட்கும்
‘ ஒலி ‘ யில்
சீராக
அகத்தை
நிலைப் படுத்துமே.

பேச்சு
‘ ஓலி ‘
மனிதகுல வளர்ச்சி,
மனிதப் பண்பாட்டில்
குணங்கள் ஆக
சிறப்பு
இயல்புகளாக ஆகிறது.

‘ ஒலி ‘ வேக
இயலானது
‘ இசை ‘,

மருத்துவம்,
கட்டிடக்கலை,

கைத்தொழில்
உற்பத்தி,

போர்
போன்ற பல
துறைகளிலும்
பரவலாக
ஊடுருவியுள்ளது.

பேச்சு
‘ ஓலி ‘
ஆராயும்
ஒலி
இயல்பு
முறையில்
முக்கியமாக
‘ 3 ‘ கிளைகளாக
பிரிக்கப்படுகிறது.

ஒலிப் பிறப்பு :

இயல்,
‘பேச்சு ஒலி ‘
உருவாக்குவதில்
உதடுகள்,
நாக்கு,
மற்றம்
பேச்சு உறுப்புகளின்
அசைவுகளின்
நிலைகளிலும்
என்பன பற்றி
‘செ’யல் படக்கூடிய பல
‘எ’ண்ணில்லா
‘நு’ண் நரம்புகளின்(செ.எ.நு)
ஆய்வுகளும்
தொடர்கிறது.

‘ அலை ஒலி இயல் ‘
இயல்புகள் பற்றி
ஆராய்வதும்,

இயல்பு
இயல்
‘ அக ஒலி ‘
இயல்பினிலும்
நிலைப்படும்,

ஒலிகளை
ஆராய
அறிவியல்
கருவிகள்,
கணிதம்,
இயல்பு இயல்,
ஆகியன பயன்படுகிறது.

கேட்கும்
ஒலி இயல்:

பேச்சைக் கேட்டு
உணர்தலை
அடிப்படையாகக் கொண்டு
மொழி
இயல்பினை
ஆய்வு செய்வதும் நிலைப்படும்.

‘ ஒலி ‘
குறிப்பினால்
ஏற்படும்
அறிகுறிகள் யாவும்,
குறி
முறைமைகளில்
ஏற்படும்
கூட்டாக
ஆய்வு செய்யும்
ஒரு துறையாகும்.

குறி ஒலி:

ஓலி குறிகளில்
பொருள்
கடத்தப்படும்
உயிரினங்களும்
தமக்கே
உரிய குறியீடுகள்
தொடர்பினை
முன்னரே
அறிந்து
அதன்
ஒலி இசைவு
ஆக்க பூர்வ செயல்களின்
முறைமைகளையும்
ஒலி குறியீடுகளிலும்
தம் நிலையை
ஒலி ஓசையாக எழுப்புகிறது.

குறிகளின்
பொருள்
ஒலிக்கப்படும்
வழிமுறையும்,
சத்தங்கள்,
சொற்கள்
உருவாக்கும்
எழுத்துக்கள்,
உணர்வுகள், மனப்போக்கும்,
உடல் அசைவுகள்,
சில சமயங்களிலும்
உடுக்கும் உடை
போன்றவைகளிலும்
நல் ‘ ஒலி ‘
குறியீடுகளில்
நிலைக்கட்டுமே.

‘ ஒலி ‘
என்ற ஒரு
சொல்லை
உருவாக
சமூகம்,
சுமூகமாக
அமைய
சமமான
முன்னேற்ற தாக்கத்தை
யதார்த்த பொருள்களையும்,
சரியான
பொருள்
விளக்கத்துடன்
ஒலிக்கட்டுமே.

சொல்
ஒலி
உருவ மொழி
இலக்குகளும்
அக்கணமே
அமைய
குறியீட்டு
வரம்புகளும்
உள்ள பொருள்
விளக்க ஒலியிலும்
ஒலிக்கட்டுமே.

ஒலி
குறியீடுகளும்,
பண்பாட்டினை
குணமாக
ஒலிப்பதிவிலும்
அடங்கட்டுமே.

பதிவர்,
செயல் மன்றம்.

16-01-2020

2020

செயல் மன்றப் பதிவு

” நேரம் ” :

காலம்
கணிக்கப்படுகிறது,
நேரம்
நிர்ணயத்தில்
இயக்கப்படுகிறது.

நேரம்
மனித இனத்தின்
ஊகங்களால்
கணிக்கப்படுகிறது.

நேரம்,
நேர்த்தியாக
ரக வாரியாக
கடைபிடிக்கப்படும்
ஓர் அளவுகோல்.

காலமும்,
நேரமும்
எண்ணில்லா
அளவுகோலாக
இருந்தது,
எண்ணத்தில்
நிலைக்கப்படுகிறது.

நேரத்தை
அளப்பதால்
அனைத்தையும்
துல்லியமாக
மனித
இனம்
நிர்ணயம் செய்கிறது.

நேரத்தின்
அளவுகோல்,
நமது
எண்ணத்தில்
நிர்ணயிக்கும்
வாழும் உயிர்களுக்கான
சக பயணிகளின் செயல் இயல்பு.

காலத்தின்
வேக
அடிப்படையில்
‘ நேரம் ‘
வரையறை
செய்கிறது.

இருள் மறைந்து
சூரிய ஒளியில்
வெளிச்சம்
நேரத்தி்ன்
கணக்கீடாக இருந்தது.

சந்திரனின் தேய்மானம்,
ஊசல்களின் இயக்கம்
பல இடங்களில்
நிர்மாண
அளவீடாக இருந்தது.

சூரியனின் இயக்கத்தை
வைத்து நேரத்தை
கணக்கிடுவது
ஓர் குறியீடு.

உலக மக்கள்
நாட்கள்
நிர்ணயமாக
ஆறாயிரம்
ஆண்டுகளுக்கு
முன்னர்
தொடங்கப்பட்டது
என
பதிவில் நிலை
பெறுகிறது.

நேரடிப் பார்வையில்
சூரிய
ஒளி தோன்றி
மறைவதை
‘ நேரம் ‘
என
தொகுத்து உள்ளோம்.

பூமி
தன்னுடைய
அச்சில் தானே
சுழல்கிறது.

நம் உடலின்
உயிர்ப்பு
செல்கள்
இயங்கும் காலமே
நமது
நேரம்.

உயிர் செல்கள்,
உயிர்ப்பு நிலை வரை
நமது
காலத்தையும்
நேரத்தையும்
பயன் பெற செய்வோம்.

நமது தோற்றம்,
விரிவாக்கம்,
நிலைப் பெற்ற
செல்கள்
செயல்பட்டு
மறைந்து,
மறைந்த செல்கள்
நிலை
பெறும் வரை
உயிர்ப்பு செல்களும்
நீடிக்கும்.

சூரிய ஓளி
குறிப்பிட்ட
பகுதியில்
ஒளிரும்
காலத்தை
‘ பகல் ‘
என்றும்
சூரிய ஒளி படாத பகுதி,
‘ இரவு ‘ என நாம்
நிர்ணயம் செய்கிறோம்.

நமது
உயிர்ப்பு செல்கள்
நிலை பெறும் வரை,
அவரவர்களின்
நேரத்தை
சரியாக கணித்து
நல் நிலைப்படுத்தி
நிலைக்கச் செய்வோம்.

தற்பொழுதைய
நொடி கோட்பாடு,
ஐன்ஸ்டின் சார்பின்
இயல்பு
கோட்பாடு.

ஒரு நொடி
133 அணு ஆரம் இயல்
நிலை கொண்ட
சீசீயம் அணு என்கிறோம்.

அணு இயல்பு
இரு நிலைக்கு மாறும்
கதிர்வீச்சுக்கு
9,192,631,770 அணு
கதிர் வீச்சுக்கு இடையே
சுற்றுகின்ற
ஆரம்
இயக்கத்தில்
உரிய
‘ கால நேர ‘
அளவுகள்
ஆகும்.

தற்பொழுதைய
நேர
அளவாக
ஒரு நொடிக்கு
சூரிய
ஓளி ஆண்டுகள்
299,792 கி.மீ/ நொடி
கடக்கிறது.

ஒரு நொடிக்கு
பூமியை
ஒளி ஆண்டு
7.5
முறை கடக்கிறது
என்பது பதிவில் நிலைப்படுகிறது.

ஒரு ஒளி
ஆண்டு
9.4 நூறு
ஆயிரம்
கோடி(ஒன்றிற்கு பிறகு 12 சுழி வட்டஅளவு )

அலகு
என்பது ஒன்றன்
அளவைக் குறிக்கப் பயன்படும்
முறை ஆகும்.

நேரத்திற்கு
நிறைய அலகுகள்
உள்ளன.

நிமிடம்,
மாதம்,
நாள்,
வாரம்,
நூற்றாண்டு
என்பவை
நாம் நிர்ணயித்த
சில அலகுகள் ஆகும்.

அனைவர்க்கும்
24 மணி நேரம் தான்,
எந்த செயலில்
ஈடுபடுகிறோமோ,

அந்த செயல்
நம் வாழ்க்கையை
நிர்ணயிக்கும்.

நேரமே சுவாசமாகு

‘நே’ர்த்தியாக
‘ர’க வாரியாக
‘மே’ன்மைபடுத்த

‘சு’ற்றுச் சூழல்களும்
‘வா’ழ்க்கையின் தரத்தை
‘ச’கலமும்
‘மா’னிட
‘கு’ணங்களாக்குவோம்.

ஆம், நண்பர்களே !

இயற்கை முறையில்
நாம் கணித்த
பொது
முறைமைகளை
நேர்த்தியாக,
நேரத்தை
கடைபிடித்து
ரக வாரியாக,
நாம் வாழும்,
இடம், நாடு ஆகியவற்றை
மேன்மை படுத்த

நமது சுற்றுச் சூழல்களின்
செயல் முறைகளை அறிந்து,
வாழ்க்கையின் தரத்தை
சகல மனிதர்களுக்கும்
குணங்கள்,
நற் பண்புகளை
உருவாக்க
நமது நேரத்தை
பயனுறச் செய்வோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

17-01-2020

செயல் மன்றப் பதிவு:

ஒளி:

கண் மூலம்,
‘ ஒ’ ரு
பொருள்
‘எது’
என
வ ‘ ளி ‘
மண்டலத்தில்
அறியும்
ஆக்கம்
” ஒளி ”
ஆகும்.

‘சூரிய
வெளிச்சம்,’

வெப்பத்தின்
மூலம்
” ஒளி ”
வெளி வருவது
” கதிரக ஒளி ”
என்போம்.

நம் கண்
ஒளியை
உணர்வதற்கு
உதவும்
ஒரு உறுப்பு
ஆகும்.

வெளிப்புறத்தில்
உள்ள
பொருள்களின்
அமைப்பு,
நிறம்,
ஒளித்தன்மை
மற்றும் இயக்கம்
பார்வையில்
நம்
உறுப்புத் தொகுதியின்
மூலம் கண்கள்
உணர்த்துகின்றன.

வெவ்வேறு
விதமான
ஒளியை
உணரும்
உறுப்புகள்
பல
விலங்குகளிடையே
காணப்படுகின்றன.

பாலூட்டிகள்,
பறவைகள்,
ஊர்வன,
மீன்கள்
உட்பட்ட
பல மேல்நிலை
உயிரினங்களும்
இரு
கண்களைக் கொண்டுள்ளன.

இரண்டு
கண்களும்
ஒரே தளத்தில்
அமைந்து
ஒரு மனிதர்களின்
பார்வை
முப்பரிமாணப் படிமத்தை
காண உதவுகின்றன.

விலங்குகளும்
இரு கண்கள்
மூலம்,
வெவ்வேறு தளங்களில்
அமைந்து
இரு வேறு
படிமங்களை
காண உதவுகின்றன.

கண்ணின்
வழியே
ஒளி செல்லும்போது
ஒளிச் சிதறலும்
ஒளித்திசை மாறுதலும்
ஏற்படுகின்றன.

ஒளியானது,
விழித்திரையை
அடையும்
முன்
கார்னியா,
லென்சின்
முன்பகுதி,
லென்சின்
பின்பகுதி
ஆகிய
மூன்று
பரப்புகளில்
ஒளிச்சிதறல்
அடைகிறது.

கார்னியா
மற்றும்
லென்சுக்கு
இடையில்
‘ நீரக மைய ஊடக நீர் ‘
என்ற
‘ திரவ விழையம் ‘
உள்ளது
லென்சுக்கும்
விழித்திரைக்கும்
இடையில்
‘ விழிப் படக மைய நீர் ‘
என்ற திரவம் உள்ளது.

இது கூழ்
மயமான
சளி போன்ற
புரதத்தினாலானது.

இந்த திரவங்கள்
இரண்டும்
ஒளி ஊடுருவும்
தன்மை கொண்டதினால்
ஒளி கண்ணின்
விழித்திரையை
தடையில்லாமல்
அடைகிறது.

மனிதனின்
கண்ணில்
உள்ள
லென்சின்
குவிந்த பகுதி
பார்க்கும்
பொருளின்
தூரத்திற்கு
ஏற்ப
தானே
குவித்தன்மையை
மாற்றிக் கொள்ளும்
தன்மையை
கொண்டிருக்கிறது.

இத்தன்மையை
கண்
தக அமைதல்
அல்லது
‘ விழியின் ஏற்ப அமைவு ‘
என்பர்.

இந்த ஏற்ப அமைவு,
சிலியரி தசைகள்,
சிலியரி உறுப்புகள்,
மற்றும் தாங்கும்
இழைகளால்
நடைபெறுகிறது.

கண் தூரத்திலுள்ள
பொருளைப் பார்க்கும்போது
சிலியரித்தசைகள்
தளர்ந்து விடுகின்றன.

பொருளிகளில்
இருந்து
வரும்
இணையான
ஒளிக்கதிர்கள்
விழித்திரையின் மேல்
குவிக்கப்படுகின்றன.

எனவே
தெளிவான
பிம்பம் தெரிகின்றது.

பொருளை விழியின்
அருகில் கொண்டு
வரும்போது
விழியின் ஏற்ப
அமைவுத் தன்மை
அதிகரிப்பதில்லை.

ஒளியின் வேகத்தை
முதன்
முதலில் கண்டுபிடித்தவர்
கலீலியோ ஆவார்.

கி. பி. 1630
சோதனைகளில் ஈடுபட்டார்.

கையில்
ஒரு லாந்தர் விளக்கை
ஏந்திக்கொண்டு
ஒரு மலைக் குன்றை
அடைந்தார்.

கூட
வந்த
தன்னுடைய
உதவியாளரிடம்
ஒரு விளக்கைத் தந்து,
குன்றின் எதிர்
உச்சியில்
போய் நிற்குமாறு
பணித்தார்.

அந்த உதவியாளர்
விளக்கில் இருந்து
வெளிப்படும்
ஒளியைத் தூண்டிவிடும்
போது
கலீலியோவும்
விளக்கின்
ஒளியைத் தூண்டிவிடுவார்.

கலீலியோ
இந்த இரு செயல்களுக்கான
இடைவெளியைக் குறிப்பெடுத்தார்.

பரிசோதனையில்
சோதித்துப் பார்த்தார்.

அந்தக்காலத்தில்
ஒளியின் வேகத்தை
அளவிடும் துல்லியமான
கடிகாரங்களும் இல்லை.

எனினும் மனம்
தளரவில்லை.

பின்,
கலீலியோ ஒளி,
ஒலியைவிட அதிக
வேகத்தில் பயணிக்கும்
என்கிற முடிவை
உலகிற்கு அறிவித்தார்.

பூமிக்கு வரும்
ஒளி 44
சதவிதம் கண்களின்
புலனுக்கு
அறியும் ஒளி
என அறிவோம்.

கண்களுக்கு
புலப்படும்
அலைநீளம்
உடையவற்றை
மின் காந்த
அலைகள் என்போம்.

அகச்சிவப்புக் கதிர்களும்
புற ஊதா கதிர்களுக்கும்
இடைப்பட்ட
அலை நீளம்
மின் காந்தக் கதிர்
வீச்சுக்களின்
ஒளி என்போம்.

அலை-துகள்
இருமை
தன்மையின்
காரணமாக
ஒளி
அலை மற்றும்
துகள் இரண்டின்
பண்புகளையும்
ஒரே நேரத்தில்
வெளிப்படுத்துகிறது.

380 நானோமீட்டர்கள்
முதல்
740 நானோமீட்டர்கள்
வரையில்
அலைநீளத்தையுடைய
மின்காந்த
அலைகளாகும்.

பொதுவாக
மின்காந்த
கதிர்வீச்சு
அதன் அலைநீளத்திற்கு
ஏற்ப
வானொலி,
நுண்ணலை,
அகச்சிவப்பு,
புற ஊதா,
கண்ணினால் உணரக்ககூடிய ஒளி,
எக்ஸ் கதிர் வீச்சு
மற்றும்
காம்மா கதிர் வீச்சு
என வகைப்படுத்தப்படுகிறது.

மின்காந்த
கதிர்வீச்சின்
நடத்தை
அதன்
அலைநீளத்தை
சார்ந்து அமையும்.

உயர்
அதிர்வு
எண்களில்
குறுகிய அலைநீளத்தையும்,

தாழ்
அதிர்வு
எண்ணில்
நீண்ட அலை நீளத்தையும்
கொண்டிருக்கின்றன.

ஒளி
அணு,
ஒளிமம்,
என்று எடை
இல்லாதது
ஆகவும்,
ஆற்றலின்
திரட்சியாக கருதப் படும்.

கதிரின்
வீச்சினிலே
ஒளி அளவு
சிறு நானோ
துளி அளவே வெளிச்சம்
பாய்ந்து,
ஒளிக் கதிர்கள் நிலைப் பெற்று
அண்டம்,
குவாண்டம்
ஆக
ஓளி அளவு
நிலை பெறுவதை
மேலும்
அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.
18-01-2020

வாய்மை :

2020 செயல் மன்றப் பதிவு :

‘வ ‘
எனும்
‘மெய்’ எழுத்து
துணையுடன்
‘ஆ’
எனும் உயிர் எழுத்தில்
நிலைப் பெற்று
‘ வா ‘
என்ற
‘ உயிர்மெய் ‘ எழுத்தாக
முழுமை பெறுகிறது.

‘ வா ‘ என்ற
எழுத்தும்
சொல்லாக
நம் ‘வாய்’
எனும்
வாயினில்
வருகின்ற
அனைவரையும்,
பொருளையும்
வரவேற்று,
‘ வருக ‘
சொல்லாகவும்
நிலை பெறுகிறது.

‘ வா ‘
எனும் சொல்
நம்
வரவை
குறிக்கும்
சொல்லாகவும்
நிலை பெறுகிறது.

நம்
உணர்வில்
பொருளாக
அறிகின்ற,
உணர்கின்ற
சொற்கள்
முழு வடிவம் பெறுகிறது.

நம்
முன்னோர்கள்
அறிந்து,
ஆய்ந்து
பொருள்
ஆக
அறிந்ததை,
உணர்ந்ததை
பல
சொற்களை
மகிழ்ந்து
தாங்கள்
உணர்ந்து ,
மற்றவர்களிடமும்
நம்
மையப்பகுதியாக
‘ வாய் ‘
எனும்
நம்
உடல் உறுப்பில்
பகிர்ந்தனர்.

வருக
வாயில்
இருந்து
அறிவாக,
வருக.

‘ வாய் ‘
எனும்
நமது
மெய்யில்,
உடம்பில்
அறிகிறோம்,
உணர்கிறோம்.

உணர்வாக
அறிந்ததை,
ஆய்ந்து
அறிவில்
மலர்ந்து
சொல்லாக
வாயில்
இருந்து
மலர்கிறது.

ஆய்ந்து அறிந்ததை
நாம்
வாழும்
உலகத்தை
நம் மெய்யால்
உணரப்படுகிறோம்.

நம் ‘ வாய் ‘
‘ உயிர் மெய் ‘ எழுத்தாக
நிலைப்பெற்று
நம் வாய்
எனும் மெய்
ஆகிய
உடம்பில்
அறிக்கையாக,
ஒலியில்,
வெளியில்
பரப்பபடுகிறது.

அந்த ஒலிக்குறிப்பு
வாயின்
மையப்பகுதியில்
‘ வாய்மை ‘
ஆக நிலை
பெறுகிறது

ஒலி பரப்பில்
சொற்களாக
முழு வடிவம்
பெறுகிறது.

நம்
உடம்பில்,
மெய்யில்
உணர்வதை
‘வாய்’
எனும்
‘மை’யப்பகுதியில்
ஒலிபரப்பு
பகுதியாக
அனைவருக்கும்
அறிவில்,
தெரிவிக்கப்படுகிறது.

நாம்
மெய்யால்
உணர்வதை
வாய் எனும்
மையப்பகுதி
மூலம்
பகிர்ந்து
கொள்வது
‘வாய்மை.’
என்று நிலைப்படுகிறது.

வாய்மையில்
நன்கு
அறிந்து
நிலைத்தது
‘ நன்று ‘ என
நிலைப்படுவது
‘உண்மை.’

நம் உணர்வின்
மையப்பகுதியாக
உணர்ந்ததை
‘உண்மை’
என பகிரப்படுகிறோம்.

மெய்யால்
உணரப்படுவது,
‘ மெய்மை.’

வாயால்
பகிர்ந்து கொள்வது,
‘ வாய்மை. ‘

உள்ளத்தில்
உண்டாகும்
நிலைப்பாட்டை
சொல்வது,
‘ உண்மை. ‘

நாளும்
மெய் ஆகிய
‘ மெய்மை ‘
என்றும்
நிலைப்பெறுகிறது.

மெய்
எனும்
உடம்பு,
நல்லதை நாடும்.

நம் மெய்யால்
உணர்வது,
ஒரு சில
நிலைப்பாட்டினை
நன்கு அறிந்து
நன்மை
உண்டாக்குவதை
உண்மையில் பகிர்வோம்.

சிறந்து
விளங்குவதை
மெய்யால்
உணரப்படுவோம்,
செயல்படுவோம்.

நம்
வாயில்
பேசும் பொருட்கள் அனைத்தும்
வாய்மை
எனும்
மெய்யான பொருட்களில்
நிலைபடட்டும்.

பதிவர்,
செயல் மன்றம்.

19-01-2020

2020

சமயம் :

செயல் மன்றப் பதிவு :

‘ ச ‘
எனும்
‘ மெய் ‘ எழுத்தில்
‘ ச ‘கல ‘ ச ‘ம அளவு
அறிவினை
நிலை நிறுத்தும்
பொருள் குறிக்கும்.

‘ ம ‘ எனும்
மெய் எழுத்து
‘ம’னித மனங்களைக் குறிக்கும்
சொல் என அறிவோம்.

‘ ய ‘ என்ற
மெய் எழுத்து
‘ ய ‘ தார்த்த ,
‘ ய ‘வன
நடைமுறை இயல்புகளை
விவரிப்பது
என அறிவோம்.

‘ ம ‘
எனும்
மெய்
எழுத்து
ம் (ம+்) எனும்
எழுத்தாகி
மக்களி்ன் மனத்தில்,

செயலில்,

அன்றாட
நடைமுறையில்,

குணங்களில்
தினமும்,

‘ பண்பு ‘

என நிலைக்கப்பட்டு
மனித மனங்களில்
பண்பாடு,
கலைகள்
என
பல
வடிவில்
நிலையில்

‘ அறம் ‘

சார்ந்த நெறிமுறைகளை
பெறுகிறது
என அறிவோம்.

‘ சமயம் ‘
என்பது
சம கால
மனிதர்களின்
மனங்களில்,

நடைமுறை
இயல்பினை,

அறம் சார்ந்த
நெறிமுறைகளை,

கலைகளின்
வடிவிலும்,

கடைபிடித்து வாழ்வது
சமய நெறிமுறைகள்
என்போம்.

புத்தம் புதியவராக
‘புத்தர்’
எனும்
மனிதர்
சுமார் ‘ 2483 ‘ ஆண்டுகளுக்கு
பல சமய
கருத்து
ஆள்வோர்களின்
மனங்களில்
விதைக்கப்பட்டு
புத்த வடிவில்
‘ சமயம் ‘ ஆக
வணங்கும்
மனிதராக,

ஒரு
இடத்தில்
இருந்து,
பல இடங்களுக்கும்
சென்று,
ஒரு
காலத்தில்,

வாழ்ந்து
மனிதரின்
மனித
அறநெறிகளை
மக்களுக்கு
போதித்து,

புத்த சமய
அறநெறிகளாக
புத்த சமய
கலை,
கலாச்சாரங்களை
காலந்தோறும்
சமய சடங்குகளாக
கடைபிடித்து

‘ புத்த சமயம் ‘

என உருவெடுத்து
உள்ளது
என
அறிவோம்.

மகேசன் :

மக்களில்
மனித
வடிவத்தினில்,

‘ அறநெறி ‘
சார்ந்த
மனிதர்களை,

காலந்தோறும்
பேச்சில்,

கதைகளில்
உருவ வடிவமாக,

சித்தரித்து,

நிலையாக,

‘ அனைத்தும் அதுவே ‘

என
வடிவமைத்து,

மனிதர்களின் மனங்களிலும்
தொடர்ந்து
நிலைப்படுத்தி,

நல்ல செயல்கள்,
நன்மை உண்டாகும்
என்று,

தங்களது பகுதிகளில்,

உலகை
ஆளும்
ஆள்வோர்களாகவும்,

காலந்தோறும்
பாக்களிலும்,

அறம் சார்ந்த
நெறிமுறைகளை
தொடர்ந்து
பரப்பி ஒரு இடத்தில்,

அனைவரும் இணைந்து
கும்பிட்டு
வழிபடும் மகேசனாக,

பல பல பெயர்களில்
கற்பனையில்
பதிந்ததை,

ஒரு பிரமிக்க தக்க
வகையில்
வழிபட
மக்கள்,
கேட்டு
சகல நன்மை
வழங்கும்
‘ கடவுள் ‘ ஆக,
‘ தெய்வம் ‘ ஆக
வழிபடுகிறது
எனும்
‘ அனைத்தும் ஒன்றே ‘
எனும் ஒரு
சமய நெறி
முறை என்போம்.

எல்லா
மக்களின்
ஏற்புடைய
சுக வாழ்வு
அமைக்கும்
‘ ஏசு ‘ என
பரவலாக,
பல மொழிகள்,
நாடுகள் தோறும்
பல்வேறு
இடங்களில்
அந்தந்த
கலை,
கலாச்சாரத்திற்கு ஏற்ப,

ஒவ்வோருவரின்
சிரமத்தையும்,
பாவத்தையும்
தாமே
ஏற்றுக் கொண்டு
எல்லாம்
அவன்
செயல் என ‘ ஏசு ‘
என்பவரே
ஏற்றுக் கொண்டார்,

என பல உருவ
வடிவமைப்புகளை,
அவரது
தாய்,
தந்தை,
சீடர்கள் வழிபடும்
கடவுளர்களாக
உருவத்திலும்,
உருவமின்றியும்
கடைபிடித்து
தொடர் நடைமுறையாக,

நிலை
நிறுத்தி
வேத
ஆகம
கருத்துக்களை
நல் முறையில்
‘ திருச்சபை ‘
என
மக்களை
கூட்டமாக
குறிப்பிட்ட
நேரத்தில் வரச்செய்து,
குருமார்களின்
போதனையுடன்
‘ அறநெறிகள் ‘
கடைபிடிக்கப் படுகிறது
என
அறிவோம்.

நம்பிக்கை
பின்புலமாக விளங்கும்
‘ நபி ‘,
நாயகமாக
உலகெங்கும்
நல் முறையில்
நடைமுறைபடுத்துவதற்கு
தரமான தரவுகள்,
குர் ஆன் அறிவின் இயல்புகளை
நிலை நிறுத்த,
தொழுவதை
ஒவ்வொரு நாளும்
உண்மையை நிலைநாட்டும்,

‘ நபி ‘
எனும்,
மனித தூதராக,

நம்பிக்கையின்
பின்புலத்தில்,

நாயகமாக
அவர் வகுத்த
அறநெறிகளை,

நம்பிக்கையாக
பின்பற்றுவோம்

என
நிலைப்படுத்தும்
பண்புகளாக பின்பற்றுவது
தொடர்ந்து
எங்கும் வலியுறுத்தும்
‘ சமய நெறிகள் ‘
என
அறிவோம்.

ஆகம
சமய கருத்துக்கள்,
ஆங்காங்கு
கடவுளாக
மனிதர்களிடையே,

ஒரு சிலர் கடைபிடிப்பதை,

பலரது
கருவாக

‘ அறம் ‘
ஆக பல
‘ சமயம் ‘
ஆக

என நிலைப்படுகிறது.

‘ சமயம் ‘
காலத்தோடு
தொடர்பும் உடையது
என்பதையும்
அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

20-01-2020

2020

குறி- செயல் மன்றப் பதிவு :

‘ க ‘ எனும் மெய் எழுத்து
‘ உ ‘ எனும் உயிர் எழுத்தில்
புணரும் பொழுது கு(க+உ)
‘ கு ‘
எனும்
எழுத்து உருவாகி,

குணங்களின்
குன்றாகிறது.

‘ ற ‘ எனும் மெய் எழுத்து
‘ இ ‘ எனும் உயிர் எழுத்தில்
புணரும் பொழுது றி=(ற+இ)
‘ றி ‘ என்ற எழுத்து உருவாகி
அறி, குறி,
எனும்
போன்ற
சொற்கள் உருவாகிறது.

‘ குறி
பல குறிகளாக உருவெடுக்கிறது.

‘ குறி ‘
எனும் சொல்
பல நம்
அடிப்படைச் சொற்களுக்கு
முன்னோட்ட சொல்
விரிவாக்கத்திற்கு அமையும்.

குறிப்பு,
குறியீடு,
குறிப்பான்,
குறிக்கோள்,
குறிப்புரை,
குறிப்பாக

என விரிவாக்கம்
ஆகி
நம் மொழி
பழக்கத்தில் உள்ளன.

‘குறிக்கோள்
உள்ள பாதை
குறிப்பிட்ட
இடத்திற்கு
போய் சேரும்.’

நம் வாழ்வின்
இலக்கு
பாதை
குறிப்பு
குறியீடு,
நம் வாழ்வின்
லட்சியத்தை
அடையும்.

நம் வாழ்வில்
பயன்படும்
பொருட்கள்
அனைத்தும்
குறியீடுகளில்
முழு வடிவம்
பெறுகின்றன.

குறிகளில்,
ஒவ்வொரு பொருட்களின்
உண்மையின்
உணர்வினை
வெளிப்படுத்தினர்.

குறிகள்
அனைத்திலும்
உள்ள வேறுபாட்டு
நிலைகளை
எது
என அறிவோம்.

‘ குறி ‘
என்ற சொல்லும்
குறிப்பில்
ஒவ்வொரு
பொருளின் உள்ள
உண்மையை உணர்த்தும்
சொல்லாகும்.

ஒரு எழுத்து மற்றும்
ஒரு எழுத்துடன்
சேர,
மெய்
பொருட்களின்
இணைப்புக்கு
எழுத்து
குறியீடுகளில்
நிலை பெறும்.

குறியீடுகள்
பொருட்களில்
நிலை பெற்று
அந்தக்குறியீடுகள்
பெயரில்
நிலைத்து நிற்கிறது.

முதலில்
மனித இனம் இயல்பான
குறிகளில் சரியான நிலையை
தெரிவிக்கும்.

குறியீடுகளில்,
பொருட்களின்
உண்மை நிலையை
புலப்படுத்துவது ஆகும்.

குறியீடுகள்
இயல்பின்
அடிப்படை
லட்சியத்தை
குறிப்புகளால்
உணர்த்தும்
சொல்
என்போம்.

குறி,
மனித இன
தேவைகளை
அறியும்
அலகுகளினால்
தெரிவிக்கிறோம்.

குறிகள்
ஆரம்ப காலத்தில்
இருந்தே
புதுப்புது
பொருள்களின்
நிலையை கண்டு
ஆய்ந்து,
அறிந்து
அப்பொருளின்
நிலைத்த தன்மையை
குறிப்பிடுவது ஆகும்.

ஒரு பொருளின்
உண்மை
தன்மையை
விளக்குவது
உருவக் குறிகள்
என்போம்.

உ.ம்: ‘ மல்லிகை என்ற பூ, ‘
குறிப்பால் அறிந்து,
ஒரு வகையான
‘ பூ ‘ என குறிப்பீட்டால்
அறிகிறோம்.

ஒரு பொருளை
சுட்டி,
இந்த பொருள்
எது என
அறிந்து சுட்டி
நிலைக்கச் செய்யும்
பொருள் ஆகும்.

மேல் வளைவு _ வளைவுடன்
சுழி குறிகள் :

‘இ’ கர ,
‘ஈ’ கார வரிசையிலுள்ள
உயிர்மெய் எழுத்துக்களுடன்
(ி) (ீ)
என்ற குறிகள்
சேர்ந்துவரும் .

‘ க ‘ முதல் ‘ னா ‘
வரையுள்ள
மெய்
எழுத்துக்களின்
மேல்வளைவாக
( ி) என்ற குறி சேர்ந்து
‘ கி ‘ முதல் ‘ னி ‘ வரையுள்ள
‘ 18 குறில் உயிர்மெய் ‘
எழுத்துக்கள் உருவாகின்றன.

இதே போல ,
‘ க ‘ முதல் ‘ ன ‘
வரையுள்ள எழுத்துகளின்
மேல் வலைவுடன்
சுழி ( ீ )
சேர்ந்து
‘ கீ ‘ முதல்
‘ னீ ‘
வரையிலான
‘ 18 நெடில் உயிர்மெய் ‘
எழுத்துக்கள் உருவாகின்றன.

ஒவ்வொரு நாடும்
அதனதன் பொருட்களின்
மதிப்பை
குறியீடுகளில்
மதிப்பீடு
செய்யப் படுகின்றன.

நம் நாட்டின்
நாணய குறியீடு
ரூபாய் ஆகும்.

தற்போது ரிசர்வ் வங்கியால்
₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500
மற்றும் ₹2000
வரையிலான
ரூபாய் தாள்கள்
அச்சடிக்கப்படுகின்றன.

பொருட்களின் மதிப்பை,
ரூபாய் தாள்களில்
உள்ள
குறியீடுகளாக
மாற்றி
ஒவ்வொரு பொருட்களின்
குறியீடுகள் நாணய
எண்ணிக்கையில்
நிர்ணயிக்கப்படுகின்றன.

இயற்கை குகையில்
வாழ்ந்த
இனக் குழு மக்கள்,
நாகரிக வாழ்க்கையை
நோக்கி வரலாற்றுக் காலத்தில்
குடியிருப்புகளை
அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர்.

அப்போது
அவர்கள்
சுடு
மண்கலையைக் கண்டறிந்து,
மண்பாண்டங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

எழுத்து தோன்றுவதற்கு முன்பு,
தங்கள் குழுக்களின்
அடையாளங்களாக
சில குறியீடுகளை
அவற்றில்
அமைத்துக்கொண்டனர்.

இனக் குழு மனிதர்களின்
குழுக் குறியீடுகள்
கிடைத்திருப்பதால்,
நம் நாட்டுபகுதியிலும்
2,500 ஆண்டுகளுக்கு
முன்பே,
ஒரே ரத்த
உறவு கொண்ட
மனிதர்கள்
வாழ்ந்ததற்கு
உரிய
முக்கியத் தரவாக
இக்குழு குறியீடு
கிடைத்திருப்பது
சிறப்புக்குரியது.

குறியீடு,
புதுப்புது
கண்டுபிடிப்புகளில்
உறுதியாக பயன்
அடையும்
நிலை பெற்று,
பொருட்களின்
பெயர்களில்
நிலைப் பெறுகின்றன.

பதிவர்,
செயல் மன்றம்
21-01-2020

2020 – செயல் மன்றப் பதிவு

‘ தீ ‘

த்=’ (த+அ)’= எனும் மெய் எழுத்து
‘த ‘ எனும் மனித இன உயிரில் மெய் எழுத்து
ஆக
உருவெடுத்து,
தமது,
தமது பிரபஞ்சம்
தத்தமது என அனைவர்களின்
ஒரு பதம் ஆக
என நிலைப் பெற்று

‘ ஈ ‘
எனும் உயிர் எழுத்தில்
ஈடுபாட்டுடன்
ஈர்க்கப்பட்டு
‘ தீ ‘ =(த+ஈ)
என
ஒரு பதம் ஆக
நிலைப்பட்டு
‘ தீ ‘ எனும்
பொருள்படுகிறது.

‘ தீவு, ‘
‘ தீர் ‘
எனும் இரு சொற்களில்
முன் ஓட்ட சொல்
ஆக நிலைப்படுத்தபடுகிறது.

‘ தீ ‘
திரியில்
ஒளிர் விடுவது
வெப்பத்தின் நிலையை
சம அளவில்
சீராக (ச+ஈ=சீ)
ஈர்க்கப்பட்டு
இருட்டில் இருந்த
வெளிச்சம்
நம் வளர் நிலையை
என்றும் நிலைப்படுத்தும்.

‘ தீ ‘ அல்லது ‘ நெருப்பு ‘
எனும் சொல்
கால மாற்றத்திற்கு
ஏற்ப
நெருப்பு எனும் சொல்லில்
‘ எரி பொருள் ‘ ஆகும்
திறன் ஆக்கம் ஆக
ஆற்றலை மனித இன
பயன் ஈட்டும் பொருள்
ஆக நிலைப்பெற்று உள்ளது.

தீ,
வெப்பத்தை நிலைப்பட,
வெளியிட
‘ உயிரக காற்று ‘
தேவைப் படுகிறது.

அனைத்து
உயிரினமும்
கட்டுப்பாட்டுடன்
இயங்க
கட்டுப்பாட்டு
உடைய
‘ தீ ‘
என்றும்
பயன் பெறும்.

கட்டுப்பாடு
அற்ற ‘ தீ ‘
பெரு சேதம்
விளைவிக்கும்
என
உயிர் இனங்கள்
தமது
நிலைப்பாட்டில் தெரியும்.

சூரியன்
ஒளிக் கதிர்கள்,
காட்டில்
மரங்களின்
உராய்வினால்
ஏற்படுவது
இயற்கை
‘ தீ. ‘
கட்டுபாட்டு
ஆற்றல்
பெற உதவும்
‘ தீ ‘
ஆகும்.

செயற்கை
‘ தீ ‘
நமது
முறையான
பயன்பாட்டிற்கு
என
பயன்படுத்துவோம்.

‘ தீ ‘
கண்டுபிடித்திதனால்,

மனித குலம் பல
கருவிகள்
உருவாக்க முடிந்தது.

‘ தீ ‘
கண்டு பிடித்ததால்
சுமார்
3,00,000 முதல்
4,00,000 ஆண்டுகளுக்கு
முன் தான்
உலோகத்தை
பயன்படுத்தி இருக்கின்றனர்.

அறிவியல்
வரையறைப்படி
ஒரு பொருள்
வேகமாக
ஆக்சிஜனேற்றம்
அடைவதே தீ
என உருவெடுக்கும்.

தீ,
வெப்பத்தை
வெளி ஏற்றும்
போது
வேதிய இயல்பு
செயல்பாடு ஆகி,
ஒரு சில பொருளிட்களில்
சேமிக்கப்பட்ட
பொருள்
கரியாகி
மீண்டும் சுருங்கும் நிலை
அடைகிறது.

இன்றைக்கு
ஒரு தீக்குச்சி போதும்,
அறிவார்ந்த செயலுக்கு
உரிய பொருள்
ஆக உருவாகும்.

அன்று
தீக்குச்சி
கண்டுபிடிப்பதற்கு
எவ்வுளவு
ஆண்டுகள் எடுத்துக்
கொண்டனர் எனும்
நிலையை
அறிவோம்.

மனித இனம்
தோன்றியதில்
இருந்து
இன்று வரை
பயன்படுத்தப்படும்
ஆற்றல் வரை,
சூரிய ஒளி ஆற்றலை
ஒரு நொடியில் உற்பத்தி செய்கிறது.

ஆழ்ந்த தீ எனக் கருதப்படுவது
600-800 டிகிரி
செல்சியஸ் வெப்பமானி
ஆக உள்ளது என
அறிவோம்.

‘ தீ ‘
எனும்
பொருள்
அளவுகளில்,
நம் ஐந்து பொறிகளின்
இயல்பு அறிந்து
பழக்கப்படுத்துவோம்.

நீர்,
நிலம்,
தீ,
காற்று,
விண் எனும்
ஐந்து பொருட்களும்
நம் மெய்ப் பொருளை
அறிவினில்,
செயல்படுத்தும்
கருவி ஆகும்.

‘ தீ ‘
முதன்மைப்படுத்தி,
வழிபட்டு,
வாழ்த்திப் பயன்படுத்தும்
மெய் இயல்
பேரறிவு கொண்ட
மனித
இன மட்டுமே.

‘ தீ ‘
மனிதனின்
பதிவுகளில்
பல கற்பனைக் கதைகளில்,
பல அறிவார்ந்த கதைகளாக
உயர் சிந்தனைத் தளத்தில்
நிறுத்தி செயல்படுத்தி இருப்பது
மனித இனத்தின் வரலாறு ஆகும்.

‘ தீ ‘

‘ தீ ‘ ஒரு தீமை !

தீமையா ?

தீ-தீர்ப்பின்
மை-மையமாக
யா-யாவருக்குமிருக்கட்டும்.

தீ -ஆற்றல் உள்ள எரிபொருளாக
மை-மையமாக
யா-யாவருக்கும் அமைப்போம்.

தீ,
உலகமெல்லாம்
உணர்ந்து
சொல்வதற்கு
அரிதான
அறிவுள்ள,
மையமான
பயன் உள்ள
பொருளாக
அமைப்போம்.

“சோதி”
எனும்
பொருளாக
சோதனைச் சாலைகளிலும்
திறம்படும்
எரி பொருளாக
அமைப்போம்.

பதிவர்,
செயல் மன்றம்.

22-01-2020

2020-செயல் மன்றப் பதிவு.

இசை :

‘ இ ‘ எனும் உயிர் எழுத்தில்
‘ இ’ னிமையில்
‘இ’ ன்னிசை பாடி

‘ ச ‘ எனும் மெய் எழுத்தில்
‘ ஐ ‘ எனும் உயிர் எழுத்தைக்கூட்டி
‘ சை ‘ (ச+ஐ) எனும்
உயிர் மெய்எழுத்தாக
நிலைக்கப்பட்டு

‘ இ ‘ எனும் எழுத்தோடு
இணைந்து
‘ இசை’ யில்
இயல்பாகி
இணைகிறது.

உயிர்கள் அனைத்தும்
இன்பத்தின்
ஓசை, ஆகி
‘ இசை ‘
என
அறிவோம்.

மனித இனம்
ஒருங்கிணைக்க,
இசை
‘ இ ‘யற்கையின்
‘ சை ‘கையே.

தினமும்,
நம்மை
தரமாக்கும்,
‘ இசை ‘
அடிப்படை
‘ ஓசை ‘ என்போம்.

படித்தவரோ,
பாமரரோ
இன்னிசை போல்
ஒருங்கிணைப்புக்கு
பூமிதனில்
வேறு ஏது ஒலி?

இயல்பின்
மொழி அறிந்து
இருக்கின்ற
ஒலியில்

இயற்கையின்
சைகையை
இன்ப நாத
‘ இசை ‘
என்போம்.

‘ இன்ப நாதம்,’
‘ தேன் மொழி,’
‘ அழகின் சிரிப்பு, ‘
‘ உடலின் ஆட்டம் ‘
எது,

என அறிந்து
இன்ப
இசையில்
பாடுவோம்.

தொன்மை காலம்
தொட்டு
ஆய்வு பல
செய்து
இணைந்து
இணைக்கின்ற
சைகையாக,

ஏழு துளையினில்,
‘ புல்லாங்குழல் ‘
என்றும்,

துளையினிலை
ஓசை கேட்கும்
விந்தையினையும்
அறிந்து,

க-கனி மொழியில்
ரு-ருதுவாகி

‘ கரு ‘ கொண்ட

அவரவர்
மொழிதனிலே,
இன்னிசை ராகம்
பாடி,

இயங்கும் ஏற்பு உடைய
மனித இனமும்,

இசையில்
‘ ஒருமையை பாடு ‘
என

கண்
உறங்கும்
தளத்திலும்
ஒன்றி இணைக்கும்
இமையாக,
ஒற்றுமையாக
குரல் கொடுக்கும்.

ஏழிசை
இது என
பிஞ்சு மனத்திலும்,
ஓலியின் ‘ உரத்த சத்தம் ‘
இது என
ஆரோசையாக,
‘ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ‘
உயிர் நீட்ட வேண்டும் என்று
உயிர் எழுத்திலும்,
இசைபாடி
இசை ஒலியை ஏற்றிச் சொல்லி,

‘ உறங்க வேண்டும் ‘ என

‘ அமரோசை ‘ ஆக
அதே உயிர் நீட்டு
எழுத்துக்களை இசைதனில்
‘ ஔ, ஓ, ஏ, ஐ, ஊ, ஈ, ஆ ‘
என்று நிலைக்கு திரும்ப
ஒலிக்கும்
ஓசையினை
‘ அமரோசை ‘ என்போம்.

அமர்த்து என்று சொல்லி
ஆரோசையில் தொடங்கி,
ஈர்க்கின்ற முறைதனில்
உலகம் இது என்று
ஊறுகின்ற பிள்ளைக்கும்
என்னென்ன என்று
ஏட்டுதனில் அறிந்திட
ஐயமின்றி வாழ
ஒற்றுமையில்
ஓயாமல் இன்பம் பெற
ஔவை மூதுரை பாடலினையும்

பண்ணிசையாக
இனிய இசை தரும்
என பாடம் சொல்லி
புகட்டிடுவோம்.

‘ இசை ‘ யில்
வியப்பினை
அறிந்திடுவோம்,
பழகிடுவோம்,
பயிற்றிடுவோம்.

‘குரல்’
‘துத்தம்’
‘கைக்கிளை’
‘உழை’
‘இளி’
‘விளரி’
‘தாரம்’

எனும்

இசையை
‘ ஆரோசை ‘ என்போம்.

‘தாரம்,’
‘விளரி,’
‘இளி’
‘உழை’,
‘கைக்கிளை,’
‘துத்தம்,’
‘குரல் ‘

என்று அதே சொல்
திரும்பும் நிலை பெறுவதற்கு

‘ அமரோசை ‘ என அறிவோம்.

உயிர் எழுத்து
ஓசையிலும்
ஒன்றி
ஏழு
இசையிலும் பாடுவோம்.

‘ பண் பாடு ‘
என
பண்
இசைத்து
ஏழு இரண்டு
இசையினை
அழகான ஒலியுடன்
ஒவ்வொரு
உயிரையும்
தனியே
இசைய வைத்து,
நமது ‘ பண்பாடு ‘
நிலைத்து நிற்கிறது.

தொல்காப்பிய காலத்திலும்,

மிடற்றிசை(குரல்)
நரம்புக்கருவி இசை(யாழ்)
காற்றுக் கருவி இசை(குழல்)

ஆகிய கருவிகளின்
மூலமும்
பண் வகைகளில்
திறமைகளை
ஆராய்ந்து
பாடி மகிழ்ந்தனர்.

பறை
எனும்
இசை தாளக் கருவிகளின்
முறைகளின்
மூலமும்
மக்களின் மரபு
இசையை
பறை
சாற்றுவது ஆகும்.

மரபு இசை,
‘ம’க்களின்
‘ர’சனையை
‘பு’ரிய வைக்கும்

‘மரபு’ இசையாக
ஏறத்தாழ
3,000 ஆண்டுகளுக்கு
முன்பு இருந்தே
கலை நுட்பங்களையும்
மகிழ்ச்சியுடன்
‘ பண் பாடு ‘ என பாடி
இருக்கின்றனர்.

பாடல்களை
கருத்தில்
இசைத்தன்மையை
பகுத்து
பண் இசைப்பாடல்களையும்,
இசையிலும்,
கூத்திலும்
இலக்கிய குறிப்புகளிலும்
அறியலாம்.

ஓலிகள்
இலகுவாகி
பலரும்
மெய்தனில்
பண் இசைத்து
ச,ரி,க,ம,ப,த,நி
என தினமும்
‘ இசை ‘
பயிற்றுவிப்போர்
பழக்கமாக ஆகி
பண்பாட்டு
இசை,
கர்நாடக
இசை
மக்களின் ரசனை என
புரிதலாகி நின்று,
இன்று
இசை
இனிய
இசைவான
இசையாக
திகழ்கிறது.

கிராமங்களின்
பண் இசை
கிராமிய இசை என,

பயின்ற இசை
பழக்கமாகி இருக்கும்
இந்நிலையில்
இனிய
இசை எங்கும்
தமிழ் இசையோடும்
ஒலிக்கட்டும்.

தரணி எங்கும்
பயில
தரமான இசையினையும்
தாரளமாக
கற்போம்,
இசைப்போம்.

பதிவர்,
செயல் மன்றம்.

23-01-2020

2020 – செயல் மன்றப் பதிவு:

மனிதம் :

‘ம’=என்ற எழுத்து
‘ ம ‘ கத்துவம் பெற்று
‘ ம ‘ ண்ணில் நல் வண்ணமாக
‘ ம ‘ மலரும் பூமியில்

‘ னி ‘=(ன்+இ)
‘ த ‘ =(த்+அ)

எனும் எழுத்துடன் கூடி

ம(ம+்) ‘ ம் ‘)
என்ற புள்ளியில்
‘ மனிதம் ‘ என ஆகி
மண்ணிலேயே
நல் எண்ணத்தை
எந்த நிலையிலும்
நிலைத்திருக்கத்
தொடர்வோம்.

உயிரக இணைப்பில்
அன்பில் பிணைப்பில்

க-கனியில்
ரு-ருதுவாகி

‘ கரு ‘
பகுதியில்
உருவாகும்
மனித இனம்
தழைக்க
பல் வேறு
உயி்ர் அணுக்கள்
ஓரே
வகையில்
உருவாகும்
இழையங்கள்,

இழையப் பகுதியில்
பெருகுகின்ற
மண்டலங்களின்
தொகுதியாக
இணைந்து
செயல்படுவதன்
மனித உயிர்
சீராக
ஒவ்வொரு
உடல் உறுப்புகளாக
நிலை பெறும் என்பதை
அறிவோம்.

மனித
அக அமைப்பு
ஒத்துழைப்புடன்
வெளிப்புற அமைப்பில்
பெருகும்
உயிர் அணுக்கள்
தலை,
கழுத்து,
மார்பு, வயிறு
என
முழு
பகுதிகளை
மனித குல
வளர்ச்சி
என்போம்.

கைகள்,
கால்கள் போன்ற
அங்க
அசைவுகளும்
இணைந்த
செயல்கள்
மனித உடலை
ஒருங்கி
இணைத்து
உருவாக்கும்
மிக முக்கிய
உயிர் அணுக்களின்
தொகுப்பு என்போம்.

இப்பகுதிகளுடன்
உட்புறமாகக் காணப்படும்
பல்வேறுபட்ட
இழையங்களிலும்
உள்ளுறுப்புக்களிலும்
இணைந்து
உடல் இயங்கச் செய்கிறது
என அறிவோம்.

மனித இன வளர்ச்சி
உயிர் அணுக்களின்
நிலைப்பாடு
என
மகிழ்வுடனே
மனித உயிர் நிலை
தொடர்வோம்.

இயற்கையில்
நிலைத்த
மனித உயிர்
மனிதம் எனும்
சொல்லினிலே
ஒருவரோடு ஒருவர்
இணைக்கப்பட்டு
உலக அளவில்
அனைவருக்கும்
இயற்கை வழங்கும்
நீர், நிலம், காற்று,
நெருப்பு வெளி
சமம்
எனும்
உண்மையில்
ரிங்காரமிடும்
மையமே,
உரிமை பெறும்
இந்த மனிதமும்
என்போம்.

சமம் என
நிலைத்து
இருக்கும்
சமயமும்,
சாதனை புரியும்
திசை நோக்கும்
சாதியும்,
அங்கு அங்கு
என தோன்றிடும்
ஓர் அங்கம்
என்போம்.

அங்கங்கே என்று
ஒவ்வொரு பிரிவும்
கூடி,
ஒழுங்கு
கூட்டாண்மையை
உரிமை இது என
பல
சமயங்களில்
நிலைபெறுகிறது.

ஊகத்தில் உதிக்கின்ற
யுகங்களும்,
கால நேர கணக்கிடும்
மனிதம் குறிக்கப்பட்ட
குறி என்போம்.

மனிதம்

மனிதம்,
உலகில்,
உயிர்களின்
தொகுப்பில்
ஓர் அடையாளம்.

ஒவ்வொரு கால கட்டத்திலும்,
மனிதர்களின்
சிந்தனையின் மூலம்,
அறிவைக் கொண்டு
மேன்மை படுத்தி,
சொல்லால்,
செயலால்
பூமியில் வாழ்கிறோம்.

மனிதர்கள்,
ஒவ்வொரு தோல்வியிலும்
தமது நிலையை
உணர்ந்து, நாகரிகம்,
கலாச்சாரம்,
பண்பாட்டை
வளர்த்துக் கொள்கிறோம்.

அந்தந்த
உயிர்களின்
இனப் பெருக்கம்,
உணர்வின் அடிப்படையில்
தமது பெருக்கத்தை தம்மால்
அறியாமலே விரிவாக்கமாகிறது.

மனித இனம் மட்டுமே
அறிவும்,
உணர்வும்
சேர்ந்தே செயல்படும்
உருவாகுகின்ற
ஓர் இனம்.

மனித சிந்தையின்
மூலம் ஒரு சில
அறிவின்
துணை கொண்டும்,
செயலின் நிலை அறிந்தும்
மனித வளர்ச்சி
இது என
உருவாக்கிக் கொள்கிறோம்.

மனித இனம்
பல ஏற்றத் தாழ்வுகளை கண்டு,
அதில் எவை சிறந்தவை என
ஒவ்வொரு காலப்
பதிவிலும் தம்மை
மேம்படுத்திக் கொண்டு உள்ளது.

மனிதம் மலர
அற வாழ்க்கை
நெறிகளை
வகுத்துக் கொண்டு
வாழும் பொழுது,
பற்பல
ஏற்றத்தாழ்வுகளும் கடந்து,
அனைவரும் சமமே
என சமய
நெறிக் கோட்பாடுகளை
வகுத்துக் கொள்கிறோம்.

மனிதம்
மலர்ந்து
செழிக்க,
அன்பும், அறமும்
சிறந்து விளங்க வேண்டும்.

அன்பு,
பண்பையும்,
அறத்தினால்
பயனையும்
மனித இல்வாழ்க்கை
செழிக்க உதவும்
சிறப்பு நெறிகளாகும்.

சுவாசி, நேசி
என்ற சொற்கள்
மனிதம்
வளர்க்க
உதவும் பண்பாக கருதலாம்.

‘ சுவாசி ‘ , ‘ நேசி ‘ ,
என்ற சொல்லை
‘ கரந்துறை பா ‘ வில்
விவரிக்க வேண்டுமெனில்,

சு-சுகாதாரத்துடன்

வா-வாழ்வதற்கு உண்டான

சி-சிறப்பே மேற்கொள்வதே

நமது
வாழ்வின்
சுவாசமாகக் கொள்வோம்.

நே-நேயமுள்ள

சி-சிநேகத்தை

வளர்ப்போம்.

மனிதம்,
சுவாசிப்பதையும்,
நேசிப்பதையும்
மனதார உறவுகளாக,
விரிவாக்கிக் கொள்வோம்.

பதிவர்,
செயல்மன்றம்.

24-01-2020

2020: செயல் மன்றப் பதிவு

மூளை:

‘ ம ‘னித
‘ ம ‘னத்தினுடனே
‘ ம ‘ எனும் எழுத்து
மூ(ம+ஊ) எனும்
‘ மூ’ ல
உயிர் மெய் எழுத்தோடு
இயங்க

‘ ள ‘ – எனும் எழுத்தில்
ளை-(ள+ஐ)
ஐவகை
புலன்களுடனும்
இழைந்து

‘ மூளை ‘ என்னும்
பொறி,
இயந்திரத்தில்
தொடர்ந்து
இயங்கி

மனித
‘மூளை’ யினுள்
வரையறைக்குள்,
இழைந்து
இயக்குகிறது
என்போம்.

கால நேரத்தில்
காற்றின் துணை கொண்டு
உயிர்ப்புடன்
விளங்கும்
மனித இனம்,

அன்பையும்
பண்பையும்
தவழும்
இயல்பினது
மனித
உறுப்புகளின்
துணையுடனும்,

‘மூளை’
எனும்
விந்தை
இழைகளுடன்
கூடிய,

கைம்மாறு
கருதாத
‘ உழைப்பே உறுதி ‘
என்று போராடி,

தொழில்
பல புரிந்து
நிலைக்கும்
செயல்களில்
பயன்களை அறிந்து,

மூளை எனும்
மனித உறுப்புகளில்
இயலும்
தொடர்
செயல்களுடன்
இயங்கும்
இயக்கம்
என அறிவோம்,
செயல்படுவோம்.

மனித
‘ மூளை ‘
நரம்பு மண்டலத்தின்
தலைமை
பொறுப்பில் ,
ஒரு
வலைப்பின்னலின்
மனித
உறுப்புகளில்
சிகரமாக
பிணைந்து
நல்இருப்பு
இயந்திரம்
ஆகும்.

மனித மூளை,
விழிப்புணர்வு
இன்றியும் இயங்கும்.

இச்சை
இன்றி
இயங்கும்
செயற்பாடு
மூச்சுவிடுதல்,

குறிக்கோளுடன் இயங்கும்
சமிபாட்டுச்சுரப்பி,
இதயத்துடிப்பு,
கொட்டாவி
போன்ற செயற்பாடுகளுக்கும்
இயக்க வைக்கும் என்போம்.

விழிப்புணர்வுடன்
நிகழும் சிந்தனை,
புரிதல்,
ஏரணம்
என அறிவு
அடிப்படையில்
ஓர் உண்மை
உயர்நிலை
செயற்பாடுகளையும்
கட்டுப்படுத்தும்
என்போம்.

மனிதனின் மூளை,
பாலூட்டிகளிலும்
ஒன்றி,
ஒன்று
என காணப்படினும்,

மனித
உடல்
எடை-மூளை
மற்ற வகை உயிரின
விலங்கு
அளவு விகிதத்தில்
சராசரியாக
5மடங்கு பெரியது
என்போம்.

மனித
மூளையின் நன்கு
விரிவடைந்த
பெருமூளைப் புறணிப் பகுதியாகும்.

நரம்பிழையத்தால்
உருவாகி,
பல
தொடர் மடிப்புகளை
கொண்ட இப்பகுதி
மனிதனின்
முன்மூளையில்
அமைந்துள்ளது.

மனிதனைப் பிரித்துக்காட்டும்
சிறப்பு செயல்பாடுகளான,
தற்கட்டுப்பாடு, திட்டமிடல்,
பகுத்தறிதல்,
கற்றறிதல்
ஆகியவற்றிக்குக் காரணமான
மூளையின்
முன் மடல்கள்
மனித மூளையில்
நன்கு விரிவடைந்து
காணப்படுகின்றன.

கண்
பார்வைக்குக் காரணமான
பகுதியும்
மனித மூளையில்
நன்கு வளர்ச்சி
பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

மூளையின்
படிவளர்ச்சியில்,
மிக முந்திய
சிறிய பாலுட்டியான
மூஞ்சூறில்
இருந்து
மனிதக் குரங்கு வழியாக
உயர்நிலை
விலங்கினங்களில்
ஒன்றான
மனிதன்
வரை
மூளை-உடல்
அளவு விகிதம்
படிப்படியாக உயர்ந்துள்ளது;

இதை
மூளைப் பருமனாக்கம்
என்று அழைக்கிறோம்.

மனித மூளையில்
உள்ள
சுமார் 50–100 பில்லியன் நரம்பணுக்களில்,
சுமார் 10 பில்லியன் நரம்பணுக்களுள்
10ல்10 மடங்கு
புறணிக் கோபுர உயிரணுக்கள்
ஆகும்.

இவ்வுயிரணுக்கள்
தமக்குள்
குறிகைகளை
அனுப்பி
கொள்ள ஏறத்தாழ
100 டிரிலியனில்
கிட்டதட்ட
10ல்14 மடங்கு
நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

மூளையின்
எந்த உறுப்பின்
செயல் புரிய வேண்டும்
என இடம் அறிந்து,
அந்த உறுப்பு
செயல்பாடுகளை
இயக்கி அவற்றின்
ஒன்றுடன் ஒன்று
பொருந்தி தொடர் செயல்புரிவதாகும்.

பெருமூளையின்
ஒவ்வொரு
அரைக் கோளமும்,
உடம்பின் ஒரு பாகத்தை
கட்டுப்படுத்துகிறது.

வலது பக்க மூளை
உடம்பின்
இடப்பக்க உறுப்புகளையும்,
இடப்பக்க மூளை
உடம்பின் வலப்பக்க உறுப்புகளையும்
கட்டுப்படுத்தும் என்பதை
அறிவோம்.

இதே
முறையில்,
மூளைக்கும்,
முதுகுத் தண்டுக்கும்
இடையே உள்ள
இயக்க இணைப்புகளும்,
புலன் இணைப்புகளும்,
மூளைத்தண்டின்
நடுப்பகுதியில்,
வலது இடதாகவும்,
இடது வலமாகவும்
இடம் மாறி செயல் புரியும்
என்று அறிவோம்.

ஒவ்வொருவரின்
மனித
மூளை உயிரகபகுதியில்
ஒன்றி இணைந்து
ஓராயிரம் இயக்கங்களும்
இயங்கும் வரை ஏற்கும்.

அண்டத்தில் இயங்கும்
பல எண்ணில்லா இயக்கங்களின்
நிலை போல
மனித
மூளை
நமது உடலின்
பல இயக்கங்களில்
செயல்களை
ஒருமைபடுத்துகிறது.

பதிவர்,
செயல் மன்றம்.

25-01-2020

2020 செயல் மன்றப் பதிவு

” அமை: ”

” அ “எனும் உயிர் எழுத்து

‘அ’கிலத்தில்
‘அ’ண்டத்தில் நிலைத்து

” ம ” எனும் எழுத்துடனும்
” ஐ ” எனும் எழுத்துடனும் இணையும்
பொழுது
” மை ” (ம+ஐ)
என
மையமாக அமைந்து

அகிலத்தின்,
அண்டத்தின்
மையமாகி

‘ அமை ‘
என்று
அண்டத்தின்
செயல்முறையாக
‘ அமைப்பு ‘
எனும்
செயல் முறையில்
நிலை பெறுகிறது.

” அ-அகிலத்தின்
மை-மையம். ”

‘ அமை ‘

என்ற
சொல்லை
அமைப்போம்.

உலக
அமைவாக
இரு.

” உலகமே ”

” உ-உருவ வடிவ பூகோளத்தின்
ல-லட்சிய கோட்டி்ல்
க-கடந்து வட்ட பாதையில்
மே-மேலும் உருண்டு செல்லும் முறை. ”

என்போம்.

உலக உருவம்
லட்சியக் கோடுகளில்
கடந்து செல்கிறது

என அறிவோம்.

உலக
மைய
உருவகமான
அமைப்பு,

தொடர்
செயல்முறையில்
புவியின் இயக்கம்
“அமை”ப்பு நிலை ஆகிறது
என அறிவோம்.

வளர்ச்சி
பரிணாமத்தின்
நிலைபாடு.

உயிர்களின்
செயல்பாடு
“அமை”ப்பு
பரிணாமத்தின் தோற்றத்தில்
நிலை பெறுகிறது.

கிரக,
நட்சத்திர
மண்டலங்களின்
நிலையான நடைமுறை
ஒவ்வொன்றின்
உயிர்செயல்களின்
செயல்முறைகளில்
உருவாகிறது என
அறிவோம்.

உயிரணுக்கள்
கருவின் நிலைப்பாடு
என்பதையும் அறிவோம்.

கருமை துளையில்
அகண்ட ஓளிகற்றை
நிகழ்வின் எல்லையை
பூமியில் இருந்து,
நிகழ்படம் எடுக்கும்
நம் அறிவின் இயல்பில்
“அமை”வது
தான்
என்பதை அறிவோம்.

கருந்துளை
அமைப்பின்
ஈர்ப்பு விசை
எந்த பொருளின்
அமைவிலும் உள்ளது
என அறிவோம்.

பேரொலி
மெய்
இயல்பு
“அமை”ப்பு,

அண்ட நுண் அலை
பிண்
அணி ஆய்வின்

செயல்பாடுகளில்
உறுதி
செய்முறை
“அமை”ப்பில்
நிலைப்பட்டது
என அறிவோம்.

ஒரு பத விரிவாக்கம்
ஏற்படும் போது,

தற்போதைய
விஞ்ஞான
புரிதலின் படி,

வேதிய இயல்பு பொருட்கள்
மேகங்களில் அமுக்கப்பட்டு,

விண்மீன் திரள்களாக
முன் ஓடிகளில்
பால் வழி மண்டலங்களில்
நட்சத்திரங்களின்
கூட்டங்களின்
“அமை”வுகளுடன்
சுழன்று உள்ளது

என
அறிவோம்.

நட்சத்திரங்களில்
ஒரு
சில,

நமது சூரியன் உள்பட
பொருளின் தட்டை
சூழல்,
வட்டத்தில்
“அமை”ந்து சுழல்கிறது
என அறிவோம்.

நமது சூரியன்
வாயுவும்,
தூசியும் சுழன்று இருக்கும்
இந்த சுழல் வட்டுக்குள்
மோதி,

சிறு துகள்கள்
ஒன்றி இணைந்து
மிகப் பெரிய “அமை”ப்பே
சிறிய கிரக “அமை”ப்பு,

பல கி.மீ விட்ட அளவில்
செல்லக் கூடியதாக
அமைகிறது.

மிகப் பெரிய
9 கிரகங்கள்
பாறை வடிவில்
“அமை”பவை
சூரியன் அருகிலும்,

வெகு தூரம் வாயுக்களால்
கிரக வடிவ
“அமை”ப்பு கொண்டவை

தொலை தூர
சுற்றுப்பாதைகளில்
சுழன்று “அமை”வில் உள்ளது
என அறிவோம்.

ஒரு பதத்தின்
வயது,

வெளி மண்டலம்,
சூரிய அமைப்பு,

புவியின்
அகவைகளை

நவீன விஞ்ஞான
முறைகளில்
தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு
வெளி மண்டலங்களின்
இடையே பிரிந்து
இருக்கும்
உள்ள திசை
வேகங்களின்
அளவை மட்டும்
அறிந்து விட முடியும்.

ஆனால் சரியான
இரு வெளி
மண்டலங்களின்
இடையே
சுழன்று கொண்டே
இருப்பதால்
தூரத்தின்
அளவு
நிச்சயமற்றது,

திசையின்
வேகத்தை
கணக்கிடலாம்
என அறிவோம்.

கடந்த சில
பத்தாண்டுகளின்
ஆராய்ச்சியில் கூட,

‘ஒரு பதம்’ என்ற
நமது அண்டத்தின் அகவையை
7 லட்சம் கோடி
ஆண்டுகளாகளில்
இருந்து 20 லட்சம்
ஆண்டுகளாக இருந்தது,

அண்மை கால
கணக்கெடுப்பில்
10 லட்சம் கோடி
ஆண்டுகளில்
இருந்து 15 ஆண்டுகள்
என கணக்கெடுப்பில்
உள்ளது என அறிவோம்.

அண்டத்தின்
அமைவதும்
பிண்டத்தின்
“அமை”வதும்

நம் அமைவின்
சூழல் நிலை
என்பதை
அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

26-01-2020

2020 செயல் மன்றப் பதிவு

ஒருமை–>ஒற்றுமை

‘ ஒ ‘ என்ற உயிர் எழுத்தில்
ஒன்றாகி நின்று
ஒன்றி இணைந்து
ஒற்றுமையுடன் இருப்போம்.

‘ ர ‘ என்ற எழுத்துரு
‘ உ ‘ என்ற உயிர் எழுத்தில்
‘ ரு’ (ர+உ) என்ற
உயிர் மெய்
எழுத்துருவுடன் சேர்ந்து,

‘ ஒரு ‘ என்று
‘ ஒரு ‘ பொருளில்
‘ ஒரு ‘ பதத்தில்
‘ ஒரு ‘ உருவத்திலும்

‘ஒற்றுமை’க்கு குரல் கொடுப்போம்.

‘ ம ‘ எனும் எழுத்துரு
‘ ஐ ‘ எனும் உயிர் எழுத்தில்
‘ மை ‘ (ம+ஐ) எனும்
‘ மை ‘ யம் ஆகி

‘ ஒருமை ‘ என
‘ ஒருமை ‘ யிலும்
ஒன்றி இணைந்து
‘ ஒற்றுமை ‘யை
என்றும் பாடுவோம்.

‘ ஒருமை ‘ என்ற
அமைப்பு நிலை
உண்மையை
உரக்கச் சொல்லும்
ஒற்றுமையை கடைபிடிப்போம்

‘ ஒருமை ‘ தன்மை எனும்
இலக்கு நிலை
அக்கணத்தே
நிலைத்து நிற்கும்
இலக்கணம் எனும்
மொழி பிரவாகத்திலும்
ஒரு பொருள் என நின்று
அறிந்து
உணர்த்தும்.

‘ ஒருமை ‘
ஒரு சொல்லின்
மையம்.

‘ ஒருமை, ‘
ஒரு பொருளின்
தனித்தன்மையைக்குறிக்கும்.

‘ ப் ‘ எனும் எழுத்துருவில்
‘ ஆ ‘எனும் உயிர் எழுத்துருவில்
‘ஆ’யிரம்
‘ஆ’யிரம்
என உயிர்ப்புடன்
ஓங்காரமாக
ஒலித்து
பா(ப+ஆ)
பா என
பாக்களை
மனதார
மனித இனம்
பாடும் இயல்பினை
நாமும் அறிவோம்,
பாடுவோம்.

‘ பா ‘வில்
‘ பா ‘ டும்
பண்பினை
பல நிலைகளில்
அறிந்து
உணர்த்தும்
பக்குவத்தை
நாம் அறிவோம்.

ஒன்றி இணைந்து
‘பா’வை இணைக்க

‘ ட ‘ என்ற எழுத்துருவில்
‘ உ ‘ எனும் உயிர் எழுத்தில் கலந்து
‘ டு ‘ (ட+உ) எனும் உயிர் மெய் எழுத்துரு
‘ பா ‘ வில்
‘ பா ‘ட்டினில்
பாட்டை
இணைக்கும்
‘ பாடு ‘ என
இணைக்கும்
பாங்கினை
அறிந்து
கொள்வோம்.

ஒருமையில்
ஒன்றி
பாடி
பாவினிலும்
ஒன்றே,

*ஒருமைப்பாடு*
என
‘ பா ‘ ட்டினிலும்
அறிந்து
உணர்ந்து
ஒருமைப்பாட்டினை
மேம்படுத்துவோம்.

*ஒருமைப்பாடு*
என
சொல்வதையும்

*செயலாக*

செ-செவ்வனே
ய-யதார்த்தத்தை
லா-லாவகமாக
க-கடைபிடிப்போம்.

‘ செயல் ‘
ஒவ்வொருவரது
வாழ்வில்
நிலைப்படும் தன்மை
என்போம்.

ஒன்றி
நமது
செயலாக்கமாக
இருத்தல்
அவரவரது வாழ்வின்
செயல்பாட்டிற்கு ஒற்றுமை புரியும்.

‘ அருமையாக ‘

அ-அன்பின்
ரு-ருசியை
மை-மையமாகக் கருதி,
யா-யாவரும்
க-கற்றுணர்வோம்.

மனித குல ஒற்றுமை நோக்கி
நமது பயணத்தை தொடர்வோம்.

கருமையில்,
காலத்தே,
நேரம்,
இடம்,
வெளிச்சம்
எங்கே என
மனித நிலை அடைவோம்.

கதை,
கவிதை
கட்டுரைகளில்
‘ஒற்றுமை’யை என்றும் நிலை நாட்டுவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

27-01-2020

2020-செயல் மன்றப் பதிவு

மொழி:

மனித அறிவும்,
உணர்வும்
‘ ஐவகை ‘
‘ தலைமை ‘
அகத்தின்
செயல்பாட்டில்
உள்ளது என அறிவோம்.

‘ மொழி ‘

‘ ஒலியை எழுப்பி
மனித அறிவுநிலையில்
‘கரு’த்தை தெரிவிக்கிறது ‘

என அறிவோம்.

‘ மொழி ‘

‘ ம ‘ எனும் எழுத்துரு
‘ ஒ ‘ எனும் உயிர் எழுத்தில்
ஒலி வடிவம் பெற்று,
‘மொ'(ம+ஒ) என சேர்ந்து
‘மொ’ட்டாக உருவ வடிவில்
நிலை பெறுகிறது,

என அறிவோம்.

மொட்டுகளாக,

மெட்டுகளாக
பெறும் ஒலி நிலை,

வழி, வழியாக
ஒவ்வொருவரும்
பின்பற்றும் நிலையில்,

‘மொ’ட்டு
உருவ வடிவம்
வ’ழி’, ‘வ’ழி’யாகி
‘மொழி’ என
ஒவ்வோரு எழுத்துருவும்
பெறுகிறது என அறிவோம்.

ஒவ்வொரு
மனிதர்களும்
இயற்கை நிலையில் நின்று
‘ மொ ‘த்தமாக
வ’ ழி ‘,
வழியாக இயற்கை நிலையில்
பின்பற்றுவதை
‘ இயற்கை மொழி ‘ என்போம்.

‘ ம ‘ க்கள்
‘ ர ‘ க வாரியாக
‘ பு ‘ ரிதலை

‘ மரபு ‘ என்போம்.

ஒலி எழுப்பி,
உதடு,
நாக்கு
உதவியுடன்,
காது மூலம்
கேட்கும் நிலை
அறிந்து,

பல
நுண்ணிய எண்ணில்லா நரம்புகளின் (நு.எ.ந)
துணையுடன்,

‘ மூளை ‘
எனும் தலைமை செயலகத்தில்
இருந்து
இடும் கட்டளையை,
ஓலியாக எழுப்பி,
வாய் மூலம்
எழுப்புகின்ற
ஒலி
அந்தந்த பகுதிகளில்
வாழும் மக்களில்
நிலைப் பெறுகிறது,

என அறிவோம்.

எழுப்பும் ஒலி,

எங்கெங்கு பதியப் படுகிறதோ,
அந்த பதிவுகள் நிலைப் பெறுவது,

ஒலிகள்
வரி வடிவமாகி,

வரி வடிவம்
எழுத்துருவில்
ஆங்காங்கே
நிலைப் பெறுவதே
‘ இயற்கை மொழி ‘
என்போம்.

மனிதருடைய
இயற்கை
‘ மொழி’ களில்,
ஒலியும்,
கை அசைவுகளும்,
குறியீடுகளாகப் பயன்படுகின்றன.

இவ்வாறு எழுப்பபடும்
ஒலிகளை
எழுத்து வடிவமாக மாற்றி
‘ எழுத்துரு ‘
நிலை பெற
அமைக்க முடியும்
என அறிவோம்.

சைகைகள்,
மனிதருடைய
மொழிகளில் இயங்கும்
மற்ற குறியீடுகள்,

சொற்கள் என்றும்,

அச்சொற்களின் விதிகள்
இலக்குகள் நோக்கி,
அந்தந்த கணமே
குறியீடுகளில் தோன்றும்
வேற்றுமை இலக்குகளையும்
நிர்ணயித்து,

இலக்கணங்கள் என
அழைக்கிறோம்.

மொழி,
ஒரு
கருத்துப் பரிமாற்றக் கருவி.

முழுமையாக அறிவினாலும்,
செயல்பாடுகளிலும்,
அந்தந்த கால,
இடத்தின் பதிவிற்கு ஏற்ப
இயற்கை மொழியாக உருவாகிறது.

இயற்கை கூறுகளின்
விளக்கமே மொழி ஆகும்.

இயற்கை ‘ மொழி ‘
பேசும் இனத்தின்
அரசு இயல்,
கலை,
வரலாறு,
சமூகநிலை,

பழக்கவழக்கம்,
ஒழுக்கநெறிகள்
மற்றும் எண்ணங்களில் தோன்றும்
பல வாழ்வியல் கூறுகளையும்,

பண்பாட்டு நிலைகளையும்
வெளிப்படை விளக்கமாகவும்,
உள்முகச் செய்திகளாகவும்
செயல்பாடுகள்
கொண்டு விளங்கி கொள்கிறோம்
என அறிவோம்.

மனித மொழியானது
இயற்கையான மொழியாகும்.

மொழியினை கற்க
முற்படும் அறிவு இயலுக்கு
மொழி இயல்பு என்போம்.

மொழியின்
வளர்ச்சிப்பாதையாக
பேச்சு,
எழுத்து,
புரிதல், மற்றும்
விளக்கம் எனும்
படிகளைக்கொண்டது.

மனிதர்களின்
பயன்பாட்டுக்காக
இயற்கை மொழிகளின்
இலக்கணங்களாக அமைகிறது.

மொழி
மனித இன பிறப்பு,
இறப்பு,
வளர்ச்சி,
இடம்பெயர்தல்,
மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம்
என பன்முகம் கொண்டது.

எந்த ஒரு மொழி
மாற்றத்திற்கோ
அல்லது
மேன்மையுறுதலுக்கோ
இடங்கொடாமல்
இருக்கிறதோ
அம்மொழி
‘ இறந்தமொழி ‘ எனப்படும்.

மாறாக,
எந்த ஒரு
மொழி தொடர்ந்து
காலத்திற்கேற்றாற்போல்
தனக்குள்
மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ
அம்மொழி வாழும்
மொழியாக கருதப்படும்.

ஆடலினாலோ
பாடலாலோ உணர்த்தப்படும்
‘ மொழி ‘
பேச்சொலி
வகைக்குள் அடங்குகின்றது.

மேலும்
இலக்கணம்
என்பது
ஒரு மொழியில்
சொற்களின் உற்பத்தி
மற்றும் பயன்பாட்டை
அந்த சொற்களை இலக்கை
அக்கணமே
நிர்வகிக்கும் விதிமுறைகள்
தொடர்பான நடைமுறை ஆகும்.
இந்த விதிமுறைகள் ஒலிகளுக்கும்,
அந்த சொற்கள் தரும்
பொருளுக்கும் பொருந்தும்.

ஒலிக்கும்
ஒலி அமைப்புகளின்
அமைப்பு சார்ந்த
குரல் இயல்,

சொற்களின் அமைப்பு
மற்றும் உருவாக்கம்
சார்ந்த உருபனியல்,

சொற்றொடர்கள் உருவாக்கம்
மற்றும்
அமைப்பு சார்ந்த
தொடர்ந்து இயல்பு
ஆன உட்கூறுகள்
சார்ந்த துணைவிதிகளையும்,

இலக்குகளை
அந்த கணமே
இலக்கணம்
வரையறை செய்கிறது.

பேச்சு,
மனித இனம்
எளிதில் பின்பற்றலாம்.

மனித இன மூளையில்
உள்ளார்ந்த அறிவாக
“மொழிப் பிரிவு”
ஒன்று உள்ளதாகவும்,

அதற்கான அறிவு,
எழுத்தைவிடப் பேச்சைக் கற்பதன்
மூலமாகவே கிடைக்கிறது
என்றும் அறிவு
இயல்பாளர்கள் கருதுகின்றனர்.

எழுத்து
‘ மொழி’ யைப் பயில்வது
கடினமானது.

எழுத்தை கற்றுக் கொள்வதே

‘ம-மக்களின்
தி-திருப்புமுனை ‘ ஆகக் கூடிய

‘ மதி ‘ஆகும்.

பெருமளவு
மக்கள் பேசும் பேச்சு,
மொழித் தரவுகளை உருவாக்குவதும், கண்டுபிடிப்பதும்
கடினமாகும்.

எழுத்து முறைமை
ஆக ஆய்வுக்கும் பயன்பாட்டிற்க்கும்
என்றும் உட்பட்டதே ஆகும்.

பதிவர்,
செயல் மன்றம்

30-1-2020

2020 – செயல் மன்றப் பதிவு :

பொருள் :

‘ ப ‘ எனும் எழுத்து உருவில்
‘ ப ‘ல வாறு
‘ ப ‘லவற்றிற்கு
‘ ப ‘ல நிலைகளிலும்
பயனுற,

‘ ஒ ‘ எனும் உயிர் எழுத்தில்
‘ ஒ ‘ ன்றுடன்
‘ ஒ ‘ன்றாகி
‘ பொ(ப+ஒ) ‘ என்ற
எழுத்து உருவில்
உயிர்மெய் எழுத்தில் நிலைப் பெற்று,

‘ ர ‘ என்ற எழுத்து உரு
‘ உ ‘ எனும் உயிர் எழுத்தில் சேர்ந்து
‘ ரு (ர+உ) ‘ என உருப் பெற்று
‘ பொ ‘ எனும் எழுத்தாகி
‘ பொரு ‘ என நிலையாக பொருந்த

‘ ள ‘ என்ற எழுத்து உரு
‘ ள்(ள+்) ‘ எனும் மெய் எழுத்துடன்
‘ பொரு ‘ எனும் சொல் ‘ ள் ‘ எழுத்து உருவில்
‘ பொருள் ‘ ஆக நிலை பெறுகிறது.

‘ பொருள் ‘ என்ற சொல்
பொருட்களாக
உலகில் நிலை பெற
‘ பொருள் ‘ பயனுறும்
நிலையில்
பல காலம் பயன் பெறும்
பொருட்கள்,

மனித இனம்
நிலைப்படும் என்பதை
அறிந்து,

தமது தொடர்
செயல்களால்
நிலை பெறச் செய்கிறது
என்பதனை
அறிவோம்.

வாழ்விற்கு
பொருள் தரும்
கூறுகளை விளக்கிக் காட்டுவது
பொருள் இலக்கணம்,

இலக்கு
அக்கணமே
ஆகும்.

‘ பொருள் ‘
இலக்கணம்
தமிழ் மொழியில் உள்ளது.

பாடல்களில்
வரும் பொருள்
எப்படி எல்லாம்
இருக்கும் என்று
எடுத்துக் கூறும்
‘ பொருள் ‘
இலக்கணம்
தமிழுக்கு சிறப்பு ஆகும்.

பொருள் இலக்கணம்
அகப்பொருள்,
புறப்பொருள் என்று அறிவோம்.

அகப்பொருள்
என்பது
மனித இனத்தில்
ஓர் ஆணுக்கும்
ஒருபெண்ணுக்கும்
இடையில்
ஏற்படும்
காதல்
உணர்ச்சியைப் பற்றிக்கூறுவதாகும்.

அகப்பொருள்
பாடல்களில்,
தலைவன்,
தலைவி,
காதலன்,
காதலி
என அகப்பொருள்கள்

திணை,
பாடல்,
நாடகம்,
கதை,
திரைத்துறை
என
நிலைப்படுக்கப்படுகிறது.

புறப்பொருள் என்பது
வீரம்,
போர்,
வெற்றி,
கொடை,
நிலையாமை
அறிவியல் பொருள்
போன்ற
புறப்பொருள்களைக் கூறுவதாகும்.

ஒரு ‘ பொருள் ‘
தாமே தனித்து நிற்பதை
‘ தனி உருபன்கள் ‘ என்போம்.

ஒரு
பொருளுடன்
‘ ஐ, ஆன், கண் ‘
எனும் வேற்றுமை
உருபுகள்
‘ கட்டு உருபன்கள் ‘
என்போம்.

பயன் பெறும்
பொருட்களே
நிலை பெறுகின்றன.

நிலை பெறும் சொற்கள்,
வழி,
வழியாக
மக்களின் பழக்கத்தில்
சொல்வதே நிலைத்து நிற்கும்.

மனிதர்களின்
பழக்கத்தில் உள்ள
சொற்களே
தேர்ச்சிப் பெற்று
பேச்சிலும்
சொற்களிலும்
எழுத்திலும் நிலை பெறுகிறது
என அறிவோம்.

வணிக உற்பத்திக்கு
பயனுறும் போது
பொருட்கள்,

பழைய
பழக்கத்தில் உள்ளது
மறைந்து,

வெவ்வேறு
சொற்கள்
வணிக,
வியாபாரத்திலும்
நிலை பெறுகிறது.

மனித இனத்தில்
இயற்கையின்
சூழலால்
நிலைக்கப்படும் பொருட்கள்,

அறிவாற்றலின்
செயலினால் பெறப்படும்
பொருட்கள்,

காலத்திற்கு
ஏற்ப
பயனுறும் பொருட்களாக
நிலைக்கப் பெறுகின்றன.

பொருட்களை
அறிவதற்கு

‘ பொருள் ‘ அறிவியல் என்போம்.

அணுக்கருப் பொருள்கள்,

அயமின் பொருட்கள்,

ஆவணப் பொருட்கள்,

இயற்கை பொருட்கள்,

உலோகப் பொருட்கள்,

உற்பத்திப் பொருட்கள்,

ஊர்தி பொருட்கள்,

எழுது பொருட்கள்,

கருத்தியல் பொருட்கள்,

கலைப் பொருட்கள்,

கைவினைப் பொருட்கள்

செயற்கைப் பொருட்கள்,

தொல்பொருட்கள்,

மீக்கடினப் பொருட்கள்,

வானியல் சார் பொருட்கள்,

வேதிப் பொருட்கள்

என கண்டு பிடிப்பாளர்கள்

பொருட்களின்
நிலைப்புத் தன்மை அறிந்து,

பயன்பாட்டிற்கு
தக்க வாறு
நிலைக்கப்படுகிறது
என அறிவோம்.

பதிவர்,
செயல் மன்றம்.

31-01-2020

2020 : செயல் மன்றப் பதிவு :

அறிவு :

‘ அறி ‘ என்ற சொல்
ஒரு செயலைக் குறிக்கிறது.

‘ அறிவு ‘ என்ற சொல்
ஒரு நிலையைக் குறிக்கிறது.

‘ அறி ‘
என்ற சொல்,

கற்றுணர்ந்த செயல்
அனுபவத்தில்
பெறப்பட்ட
உண்மைகள்,

தகவல்களை
சேகரித்து
தொடர் செயல்களில்
ஈடுபடுவதே
ஆகும்.

‘ அறி ‘
என்ற சொல்லில்
‘ வ ‘ எழுத்து உருவில்

‘வ’ந்து
‘உ’யிரில் உணர்ந்து
வு (வ+உ)
என்ற வடிவத்தில்,

‘ அறிவு ‘

என்ற சொல்லாக
ஒரு கருத்தை
நடைமுறை படுத்துகிறது
என்போம்.

‘ அறிவு ‘

பொருள்
சார்ந்தோ,

கருத்து
சார்ந்தோ
இருக்கலாம்.

அதிகமாகவதோ
அல்லது குறைவதோ
அறிவை பயன்படுத்தும்
கால அளவை பொறுத்தது.

மெய் அறிவு புரிதலின்
நிலையில்
நன்கு விளங்கும்.

நியாயப்படுத்தப்பட்ட
உண்மையான
நம்பிக்கை
அறிவினால்
ஏற்றுக் கொள்ளப்படும்.

‘அறிவு ஒரு
கருவி,
துன்பத்திலிருந்து
மக்களைப் பாதுகாக்கும்
கருவி.

செவி
வழிக்கேட்கும்
செய்திகளை,

அவற்றில்
உள்ள நன்மை,
தீமைகளை ஆய்வு
செய்வது அறிவு.

ஏற்றுக் கொள்ளக் கூடிய
நன்மைகளை
மட்டும்
ஏற்பது
அறிவுடைமை.

அறிவு, ‘
செவி
வழி கேட்டு
நன்மை,
தீமைகளை
உணர்ந்து
ஆராய்ந்து,

நன்மைகளை செயலாற்றும்
தன்மை கொண்டது.

அறிவு என்பது
மனித இனத்தில்
அனைவராலும்
பகுத்து
அறிந்து கொள்ளக்கூடிய
ஒன்று.

அறிவு செயலாக
மாறுவது,
ஒவ்வொருவரின்
நிலைப்பாடே.

அறிவை,
இயற்கையறிவு,
உணர்வறிவு,
படிப்பறிவு,
பட்டறிவு,
கல்வியறிவு,
தொழில்சார் அறிவு,
துறைச்சார் அறிவு,
அனுபவ அறிவு,
பொது அறிவு,
ஆள்மனப்பதிவறிவு

என
பல்வேறு
வகைகளாகப் பிரிக்கலாம்.

இந்தப்பிரிவுகளில்
மேலும்
பல்வேறு
உட்பிரிவுகளும் அடங்கும்.

மனிதன்
பிறக்கும் போது
தம் உடலில் உள்ள அடிப்படை
செல்களில் இருந்து பெற்று
இருப்பதை,

மேலும் நிலைப் பெற
உலகளாவிய
நிலைகளை
அறிந்து செயல்படுவதே
‘ இயற்கை நிலை அறிவு ‘
ஆகும்.

கற்கும்போது
ஒவ்வொரு பொருட்களில்
உள்ள
சுற்றுப் புறச்சூழலில்
உள்ளார்ந்த
செயல்பாடுகளை
அறிவது
நூலின்
அறிவின்
மூலமும் நிலைப்படும்.

அறிவில் நிலைப்படுவது
ஓவ்வொருவரின்
தொடர் செயல்களை
ஆராய்ந்து,

ஆய்வில்
அறிந்ததை
இயல்பின் அறிவில்
உருப்பெறும்.

பொருட்களின்
நுட்பம்,
அதன் இயல்பான
வடிவமைப்பு
செயல்கள் ஆகும்.

நுண்ணறிவில்,
அந்தந்த
பொருட்களின் செயல்பாடு
எப்படி
என்பது தொடர்
செயல்களில்
அறிந்து கொள்ளலாம்.

தொடர்ந்த செயல்கள்,
ஒவ்வொருவரின்
அனுபவத்தில் பட்டறிவு
துணை கொண்டு,

எல்லா
பருவங்களிலும்
அறிவுடன்,
உணர்வோடும் நிலைப்படும்.

வாழ்வின்
வாயில்தோறும்
மனிதனை மாட்சிமைப்படுத்துவது
அறிவே ஆகும்.

அறிவில்
இயல்பாவது,
நம் செயல்களின் தொடர்ச்சியே.

ஒவ்வொருவரின்
அறிவின்
தொடர்
செயல்களிலேயே
நிலை பெறுகிறது.

பொருட்களின்
நிலைப்புத்தன்மை
அவரவர்களின்
நல்ல செயல்பாட்டிலேயே
வாய்ப்புகள் உருவாகும்.

பதிவர்,
செயல் மன்றம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA