முதுமை எனும் சொத்து தினமணி

தினமணி

முதியோர் எனும் சொத்து எனும் தலைப்புக்குரிய

13 12 2018

எமது எணனி பதிவு-

அன்பு அரவணைக்கும். அன்பு உலகை நிலை நாட்டும். முதுமை, கரந்துறையில் சொல்ல வேண்டுமானால் , முற்றிலும் துணையான மையமாக உடையவர்கள் எனறு கூறலாம். முதுமை எண்ணிக்கையில் அதிகம் உடையவர்கள் நாடு என்றும் சிறந்து விளங்கும். பள்ளியில், நூலகங்களில் விவிரிக்க முடியாத பல கருத்துக்களை, முதியவர்கள் வெகு இயல்பாக நடைமுறையில் அனைவருக்கும் பயன்படும் வண்ணம் தமது கருத்துக்களை விளக்குவார்கள். கண்டுபிடித்த விஞ்ஞான தொழில் நுட்ப கருவிகள் இன்று பயன்படலாம். மனித குலம் இன்று தழைத்து நிற்பதற்கு முக்கிய காரணம், முதியவர்கள் பொது வாழ்க்கை குறித்த கருத்துக்களை மையமாக வைத்து பல சமுதாய நற்செயல்களைச் செய்பவர்களால் தான். இந்த கட்டுரை ஆசிரியர் பதிந்ததைப் போல, வேதாந்த மகரிசி, நம்மாழ்வார், கி.ராஜநாரயணன் போன்றவர்கள் என்றும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். தாங்கள் ஈடுபட்ட பணியை தொடர்ந்து எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல தொடர்ந்து பணியாற்றும் பக்குவம் முதியவர்களுக்கு இயல்பாகவே அமைந்து விடும். குடும்ப உறவும், சமுதாய உறவும் முதியோர்களால் தான் என்றும் நிலை பெறும் சமூக பொருளாதார அமைப்புகள் மனித குலத்திற்கு வழங்கிய நற்கொடை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: