ஒன்றி நிற்கும் இலக்கம் ஒன்று
நன்றி நவிலும் பழக்கம்
வணக்கம்
என்றும் அன்பும் நட்பும் காணும்
இன்றும் இன்பம் துன்பம் சிற்றிலக்கம்.
இலக்கு நோக்கி செல்லும் இலக்கியம்
வலம் வரும் தொடர் நிகழ்வு
நலம் தரும் கை துணை
உலகம் யாவும் ஒரே நோக்கம்.
உளமாற வாழ்த்தி வணங்கி மகிழ்வோம்
தளம் தரத்தின் நிறைவில் உயர்வு
அளவு நிறை மறை முறை
வளைவு வளைந்து சுற்றும் சுழல்.
சிறிய குடிலுக்கு சேவை தேவை
வறிய நிலைக்கு கொண்டு கொடுப்பது
ஊறி இருக்கும் இயற்கை வனப்பு
ஏறி இறங்கும் இடமும் நிலைக்கும்.
ஏறு ஏற்று உயிரின் உயர்வு
அணி திரள்வது அழகின் சிரிப்பு
கணி இதமே கணிதம் ஆகும்
பணி புரிய இடம் போதும்.
கணம் தோறும் கணிப்பு செல்லும்
பணம் பகட்டு உணர்வுத் துடிப்பு
மணம் பரப்பும் மகிழ்வே சிறப்பு
மாண்புறும் தருணமே நிறைவுறு வாழ்வு.