கற்ற மனம் தளராத பங்கு
பெற்ற சிற்றறிவு இலக்கில் சிந்தை
வற்றாது வழங்க பற்றுவது சிறப்பு
உற்று நோக்கங்கால் உறுதி கொள்ளும்.
இன்மை புகு முன்பே வளர்
தன்மை பல தொடர் வரிசை
நன்மை செயல் செய்தே ஆகிடும்
பன்மை இத்தொடர் நிகழ்வு
செழிக்கும்.
ஆக்கம் நிறை ஆக்கும் பொழுது
ஊக்கம் உடைமை தோன்றும் வழி
நாக்கும் பழகும் வாய்ப்பு வழங்கும்
வாக்கும் மனமும் அன்புடன் பெருகும்.
ஆற்றும் பணி இயலாகத் தொடர
ஊற்று நீரும் தரம் தரும்
போற்றும் வண்ணம் பண் பாடும்
ஏற்றம் பெறும் செயலும் விளைவாகும்.
உள்ளம் உள்ளல் உயர்வு தாழ்வு
பள்ளம் பார்த்து நடக்கப் பாதை
கள்ளம் இல்லா வாழ்வு முறை
தள்ளும் அகவையிலும் அணைக்கும் வையகம்.
ஆராய்ந்து செல்லும் நிலைக் கல்வி
உராய்வுத் தகுதி நற்குணத் திறமை
ஊரார் தகவல் தொடர்பில்
தொடரும்
பாராட்டும் வழக்கத்தை போற்றி மகிழ்வோம்.