நூல் விமர்சனம் – சமுதாய புலனாய்வு


சமுதாய புலனாய்வு (Social Intelligence)
– நூல் விமர்சனம்

நூல் ஆசிரியர் : டானியேல் கோல்மேன்.
——————————————–

சமுதாயம், சகல மனித இனங்களையும் ஒன்றென மதிக்கும்

பரவலாக இயக்கும், இயங்கும் ஓர் தளம்.

‘ சமுதாயமே ‘ கருத்தை, கரந்துறையில் தெரிவிக்க கீழே

குறித்து உள்ளேன்.

‘ ச – சகலமானவர்களின்
மு – முன்னுரிமைக்கும்
தா – தானே
ய – யதார்த்தமாக
மே – மேன்மைபடுத்துவது ‘

இந்த நூல் ‘ சமுதாய புலனாய்வை ‘ கருத்தில் கொண்டு

அமைந்து உள்ளது.

நூலின் விமர்சனம், சமுதாய முன்னேற்ற உரிமைக்கான ஓர்

விதை.

எக்காலமும் நூலும், நூலின் விமர்சனமும் அக்கால

கருத்துக்கேற்ப விரிவடையும்.

இந்நூல் ஆசிரியர் ஒர் புதுமையான மனித அறிவியல்

உறவாளர்களில் ஒருவர்.

இவரின் நூல்கள் அனைத்தும்

உணர்வை பல பகுதிகளாக பிரித்து புலனாய்வு செய்து,

நடைமுறை முன்னுதாரணத்துடன் விளக்குபவர்.

இந்நூலில் முன்னுரையாக ஒரு புது அறிவியலாக

விவரித்து உள்ளார்.

சமுதாய மூளை, நம்மிடையே தோன்றும் திட்டமிட்ட

எண்ணங்களுடனும் உணர்வுகளுடனும் ஒரு நரம்பு கூட்டு

வழிமுறையாக உள்ளது என விவரித்து உள்ளார்.

நமது சமுதாய தொடர்பு, நமது மூளையை, தொடர்

அனுபவங்களுடன் பல்வேறு விதமான நியுரான்களையும்

நரம்பு உருவாக்கத்தோடு புதிதாக அமைக்க உதவுகிறது.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால்,

‘ சமுதாய புலன் , நமது மூளை நரம்புகள் போல , பல

உருவாக்கத்துடன் இணைந்தது. ‘ எனக் கூறலாம்.

எட்வர்ட் தார்னகி ‘ சமுதாய புலனறிவை ‘ என்ற சொல்லை

முதன் முதலி்ல் உருவாக்கம் செய்தார்.

மனித உறவுகளை, அறிவுப் பூர்வமாக செயல்படுத்துவதை

முன்னுரையில் வலியுறுத்தி உள்ளார்.

இந்நூலை 6 முக்கிய பிரிவுகளாகப் பிரித்து உள்ளார்.

தொடர்பு நுண்கம்பி, உடைந்த பந்தஙகள், இயற்கையை

வளர்ப்பு, ஆரோக்கிய இணைப்புகள் சமுதாய விளைவு

என எழுதி உள்ளார்.

உணர்ச்சி தொற்றும் படரும் தன்மை உடையது.

நாம் மிகத் தீவிர உணர்ச்சியை பற்றிக்கொள்ளும் தன்மை

உடையவராக காண்டாமிருகம் போல பலம்

கொண்டவர்களாகவும்- அதிலிருந்து குறைந்து குளிர்ந்த

தன்மையுடவர்களாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு தொடர்பும் உணர்ச்சியை உள்ளடக்கியதாக

இருக்கும்.

மூளையில் உள்ள அமிக்டாலா என்ற பகுதி, புதுமையான

செய்திகளை , புதிர்கள் முக்கியமாக கற்க

வேண்டியவைகளை நமது கவனத்தில் கொண்டு

செயல்படும்.

உணர்வு பொருளாதாரம்

நம் உணர்வே நமது பொருளாதார அமைப்பு.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA