கல்வியறிவே நிறைச்செறிவு.

இகழ்வாரை கேட்காத மனித இனம்

புகழ்வாரைத் தாங்கும் நிலை யிடம்

புகழ்வாரைத் தாங்கும் நிலை யிடம்
    இகழ்வாரை கேட்காத மனித இனம்
புகழ்வாய்ப்பு பெற்றோருக்கே பேரும் புகழும்;
    நிகழ்வாய்ப்பிலா நிலைத் தரவுத்  தானெங்கே?

இங்கங்கு மெங்கும் பறை சாற்று வோரே
       தங்கமெங்கும் இல்லார் பலகோடி மடங்கு
இங்கிதம் முறைசார்பு கொள்வீரோ, துதிபாடிகாள் !
     தங்குமிடம், உணவு, உடை இல்லார்க்கெனும்
      பங்கு சந்தை பட்டியல் நிலை நிலைத்ததுமுண்டோ!

நிலைத்தவை, புவி; புதிய விசை
    அலையலையாய் காற்று சீரமைப்பு நிறுவல்
வலைப்பதிவு காப்பகம் முகப்பு பக்கம்
       கலைச் செல்வம் கொண்டவை கல்வியறிவே.

கல்வியறிவு உயிரியல் புவியின் வளிமண்டலம்
       பல்லுயிர் பெருக்கம் என்றும் மண்ணுயிர்க்கு
கல்லைக் கொண்டு கற்றறிந்தோர் செயலும்
       அல்லும்பகலும் உழைப்போருக்கும்  அறிவுச் செறிவாகட்டும். 

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA