கடல்சார் புவிச் சூழலிலும்  நிலைக்கும்.

விண்முட்டும் வியப்பு கண் சொக்கும் அமைப்பு
பண்ணில் பாவை  விழியும் பேசும்
கண்ணாரக் கண்டுள்ள கணக் கிலாதோர்
ஊண் உண்டு உயிர்வாழ கருவன்றோ!

நம் மெய்யும் மொழியும் மனமும்
தம் தேசம் என்போர் பலர்
உம் ஊரும் பேரும் புகழும்
தத்தம் நிறைவே நினைவில் கொள்வோம்.

மனிதம் காக்க உயிர்கள் போராடும்
புனிதம் போற்ற துறவிகள் உண்டு
நனி நன்றி நனவிலும் கனவிலும்
இனிய இசை தமிழ் இசைவு.

கன்னித் தமிழ் இன்பத் துளி
இன்னிசை வெண்பா அறிவுச் சுடர்
அன்பு பண்பினில் பாசப் பிணைப்பு
இன்பம் பெருகும் துன்பம் துடைக்கும்.

வானமளவு வளர்ந்திடும் உறவு பெண்
தானமவள் மேகமவள் சிந்திடும் தூரலவள்
நன்னெறி வளமூட்டுபவள் மண்ணின் செழிப்பு மவள்
பொன்னியவள் கங்கையவள் நைல் நதியுமவளே.

தொடர் உருநிலை வரும் வரலாறு
ஊடகத் தமிழ் அகத்தின் வரிகள்
இடர்பாடு இல்லா மூளை நரம்பும்
கடல்சார் புவிச் சூழலிலும்  நிலைக்கும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA