ஒருமை அணி உறுப்பின் செயல்.

பெருமை பேசும் மனிதம் தூவும்
ஒருமை அணி உறுப்பின் செயல்
அருமை ஆற்றல் மாறும் மொழி
கருமை நிறம் இறையில் பரவும்.

நம்மில் பலர் கருத்தில் வேற்றுமை
தம்மில் மலரும் உணவுச் சத்து
உம்மில் காணும் உலகம் உயிர்மை
இம்மி அளவும் தாயனை ஆறனை.

ஆறனைத் தொடர் உருநிலை உருவம்
பேறு பெற்ற நிலை சதை
வேறு தர இயக்க மெய்
மாறி மாறிவரும் அளவு செல்லறை.

செல்லறை செல்லும் வழி இயல்பு
மல்லாந்த  மார்பு செயல் நிறுத்தம்
உல்லாச ஊர்திக்கு மறைந்த சிந்தனை
கல்லறை  உள்ளமை உரிய அடக்கம்.

ஓரளவில் சேர்ப்பது சேவைத் தொடர்
பரந்த அளவில் பல்வேறு வகை
வரம்பு வரையறை உள்ள வேதியியல்
ஆரம் ஆரம்ப ஆற்றல் இயற்கை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA