ஏற்றம் தரும் சொல் செயலே.

இரவு பகல் பாராது பாதுகாப்பு
ஆரம்ப கால நேரம் கணிப்பே
மரபணு முறைமை இயற்கை தொகுப்பு
மரபு மக்களின் ரசனையை புரிதல்.

பல்கும் அறம் பொருள் இன்பம்
நல்கும் பதிகம் பாடல் வரிகள்
இல்லம் உறவு‌ உற்றார் உள்ளம்
நல் வாழ்வு வாக்கு வாய்ப்பு.

குறியீட்டு கல்வி கல்லின் தொடர்
அறிந்து கொள்வது ஆக்கத்தின் தேவை
வறியவர் நலமே சமூக பணி
கறிகனிகள் மெய் வாய்க்கு வாய்ப்பு.

உளமார பாராட்டு பெறும் வரை
தளத்தில் உழை நிறைவு உமதே
வளம் தரும் வழிபாடு நிலைப்பாடு
இளம் வயதே தொடர் உருநிலை.

சாதனை யாவும் பகிர்தலின் பகுதி
சோதனை மிஞ்சும் அளவே கடமை
இதம் தரும் இனிய நிலை
மதம் கொண்ட மனிதம் தூவும்.

மழைச்சாரல் குற்றாலக் குறவஞ்சி பாட்டு
தழைக்கும் தமிழ் குறிஞ்சி இசை
இழைந்தோடும் இனியவை கூறலின் தூரல்
வாழை மர வேரும் துளிர்க்கும்.

சுற்றுச்சூழல் புவியின் பரவும் தோற்றம்
சுற்றம் சூழ அமைவது உயிரினம்
பற்றும் தொடர் உருவாக்கம் பெறும்
ஏற்றம் தரும் சொல் செயலே.


Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA