உன்னில் உள்ளதை உள்ளபடி உணர்ந்து அறிவோம்.

உண்டு! உண்மைக்கும் நேர்மைக்கும் அறமே வாழ்வு
உண்டு! உணவுக்கும் உழைப்பிற்கும் காக்கும் கரம்
கண்டு கேட்போர் தொண்டில் திளைக்கும் செயல்
பண்டு தொட்டு பார்க்கும் பழக்கம் உண்டு.

உண்டு வாழ்வு தரும் உணவு உடை
ஈண்டு புறத்தே உயிர் காக்க வாழு
தண்டு செழித்து தரணியில் பயிர் வளரும்
ஆண்டு பலவானாலும் பழக்கம் வழி வகுக்கும்.

பாருக்கும் பாங்காக நலம் வேண்டி உழைத்திடுவோர்
யாருக்கும் நல்லது செய்திடுவோர் பட்டியலில் சேர்ந்திடுவோர்
ஊருக்கு உழைத்திடல் தாகம் தீர்க்கும் யோகம்
வாருங்கள் எக்காலம் என்றாண்டும் தரம் வாய்க்கும்.

அன்பே அனைத்தும் ஆட்சி செய்யும் பங்கு
இன்பம் இனிமை தரும் வழிபாட்டு முறைமை
தன்மை முன்னிலை படர்க்கையில் பகிர்ந்தளிக்கும் பண்பு
உன்னில் உள்ளதை உள்ளபடி உணர்ந்து அறிவோம்.

அண்டம் அறிவியல் பாலகப் பாதை வீதி
கண்டம் கணக்கு கணிப்பில் திகைப்பு உண்டு
பண்டம் பரிமாற்றம் மாற்றத்தில் திறனாக்கும் முயற்சி
திண்ணம் ஆய்வு மையம் இணையத் தளமாகும்.
Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA