வளி அறிகுறி! ‌ ‌ ஒளி வழித்தடம்!!

வளி அறிகுறி !
ஒளி வழித்தடம் !!

மண்ணில் தோன்றும் சொற்பொருள் விளக்கம்
       விண்ணில் பறக்கும் நற்றொடர் அன்றோ!
பண்ணில் பாடும் பாணரின் மெய்
        கண்ணில் படும் எழுவாய் சொல்லும்.

சொல் முறைமை கோடி யாண்டும்(என்றும்)
      வல்லமை உந்தவோர்  முன்னணி குறியீடு;
பல்சுவை இதழ் குறிப்பின் மூலம்
        நல்லியல்பு வழங்கும் வழக்கம் ஆகும்.

ஆகும் கருணை உள்ளம் உள்ளும்
      போகும் வண்ணம் பண்பே மரபணு
நோகும் நோய் எதிர் தடுப்பு
       ஏற்கும் வகை மரபில் சேர்க்கும்.

சேரும் இடம் பெற்றவை பொறுப்பு
        ஆரும் அடங்கும் கடக்கும் நிலை
தாரும் உவகை பொங்கிப் பாடும்
       வரும் வகை யறிந்திடுவதே ஞானம்.

ஞானம் பெறும் ஆற்றல் வாய்ப்பு
      வானம் வசப்பட வேலை செய்யும்
தானம் தவமிரண்டும் வழங்கும் நீரது
      ஆன முதல் தொகுப்பே சுழல்.

சுழல் உட்புற வட்டம் விரியும்
     அழல்(நெருப்பு) கொள்ளளவு தொடும் அளவே
நிழல் நிலத்தில் பதியும் வண்ணம்
      தழல் சுடர் ஒளி வழித்தடம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்

%d bloggers like this: