தமிழ் கணக்கு 4
முன்னுரை:
கணிப்பில், வாய்வழி வரும் சொற்கள் வாய்ப்பாக அமையும் தமிழ் சொல், “தமிழ் கணக்கு” எனலாம்.
தம் இதழில் வெளிவரும் கணிப்பு, கணக்கிடுகையென அளவீடு செய்யும்.
தம் வருவாய் கணக்கீட்டு இலக்கு தம்மைச் சார்ந்தோருக்கு வழங்கும் வாழ்நாள் நிலை பெற்று வரும்.
பெறுதல், வருதல், என்ற இரு நிலை, இக்கால கணக்கியல் இரட்டை பதிவு விதிகளின்படி,
‘ பற்று – வரவு ‘ எனும் இருப்பினைக் காட்டும், வீட்டு இருப்பு நிலையிலும் குறிக்கலாம்.
பொதுவாக, ஒரு பலனை அளிக்கும் இருப்பு, நாள் குறிப்பில் இருந்து, தொடர்ந்து ஆண்டு அறிக்கை வரை ஓர் “ஆண்டின் இருப்புநிலை” குறிப்பதாகும்.
‘பொதுவாக’ என்ற சொல் ‘பொறுப்பின் துணையுடன் வாழும் கடமையென ‘ ஊர், நாடு இடம் என வாழ்வு நிலையாகும்.
“பொறுப்பே இருப்பு ” என்போம்.
நாடும் கணிப்பியலே, கணக்கியல்.
நாட்டின் குறியீடு இயற்கை பங்கில் உள்ளவற்றை சார்ந்திருக்கும்.
நாம் பெறும் அனைத்து ஆற்றலும் இயற்கை வழங்கும் அறக்கொடை .
பெற்றவற்றில் வழங்கும் வழக்கம் குடும்பம், குழு, ஊர், நாடு என பிரித்து, நாம் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
அவ்வாறு நாம் வழங்குவதை ‘வரி’ என்று நாம் தற்போது கூறினாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனதன் நாட்டின் அரசு இயல்பின் இலக்கிற்கு தக்கவாறு சொற்கள் மாறி உள்ளதை காண்போம்.
முதல் சொல் ‘திறை’, என அரசு அங்க முறைமையில் உள்ள சொல் ஆகும்.
‘ அரசு, ‘அனைவருக்கும் ரக வாரியாக சுற்றத்தாருக்கு ‘
என
“பொறுப்பினை துறை, வாரியாக கடமையுடன், ‘பொதுவாக’
பெற்று, பிரித்து
கீழ்த்தட்டு மக்களில் இருந்து வழங்க வேண்டிய ஒன்றாகும்.
தமிழ் கணக்கு பதிவினை
பல்வேறு வகைப்பட்ட கணக்கர்களை குறித்து இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
தமிழகத்தில் வாழ்ந்துவரும் பல்வேறு இனக்குழுக்களில் கணக்கீடு செய்யும் இனக்குழுவினர் முக்கிய இடம் பெற்று உள்ளனர்.
காலத்தை, பொருளின் அளவை கொண்டும், சமயத்தை, சமூக அளவினை ஓர் அளவை நிலையில் குறியீடு செய்தனர். பின்னர் கணக்கீடு செய்யும் முறையை தமிழர்கள் முறைமையாக சங்ககாலத்தில் இருந்தே பதிந்து வந்துள்ளனர்.
அவற்றை ஓலைச்சுவடிகள் பயன்படுத்திய காலத்தில்
ஓலைக்கணக்கர், எனத் திகழ்ந்தனர்.
பின்னர் நாழிகையை கணக்கியலாக கொண்டு
நாழிகைக் கணக்கர் எனப் பெயர் பெற்றனர்.
பிறகு, மந்திரக்கணக்கர்,
சமயக் கணக்கர், அமயக் கணக்கர், ஆசிரியக் கணக்கர், பெருங்கணக்கர், கணக்கியல் வினைஞர், காலக்கணிதர், ஆயக்கணக்கர்போன்ற பல குழுவினர் கணக்கீடு செய்யும் குழுவினராகச் செம்மொழி இலக்கிய காலத்தில் இருந்து வந்துள்ளனர்.
இதற்கான சான்றுகள் பல செம்மொழி இலக்கியங்களில் உள்ளன.
அவற்றுள் சில கணக்கர்கள்
ஓலைக் கணக்கர்:
“ஓலைக் கணக்கர்” எனும் சொல், ஓலைப்பதிவில் பயனுள்ள சொற்களை பயன்படுத்திய கால வரையறைக்குள் உள்ள விளக்கம் ஆகும்.
கண நேரத்தில் தோன்றும் கணிப்பு இயல் ‘கணக்கியல்’ பதிவு செயலாக தொடந்த காலம் எனலாம்.
அந்த வகையில் ஓலைக் கணக்கர் என நாலடியார் 397 இல் பதிந்து உள்ளனர்.
397. நாலடியார்:
ஓலை கணக்கர் ஒலி அடங்கு புன்செக்கர் (அந்தி மாலை)
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட்டு அழுதாள்; வன
முலைமேல் கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து.
கணக்குப் பதிவு செய்யும் ஓலைக் கணக்கர்
பறவைகளின் ஒலி அடங்கும்
சிவப்பு நிறச் செக்கர் வானம் தோன்றும் மாலை வேளையில்,
என்னை மணந்தவர்
பிரிந்திருக்கிறாரே என்று நினைத்தவள்
தான் சூடியிருந்த மாலையைக் கழற்றி எறிந்துவிட்டு,
தன் முலைமேல் அணி செய்து
பூசியிருந்த சந்தனத்தை வழித்து எறிந்துவிட்டு
அழுதாள்.
தமிழ் கணக்கு 4:
குறளடி வெண்பா:
வரிவட்டி யெல்லாம் வருவாய் கணிப்பு
பெரியதாக பெற்றதைதரும் வாய்ப்பு.
திறை :
திறை எனும் ஊரின் வருவாய்
உறை கொண்டு வரும் பணிவாய்
கறை படியா செயலுரு தரும்வாய்ப்பு
நிறைவு வழிவரும் இயற்கை எழிலே.
எழில் கொஞ்சும் புவி நாளும்
வழி தேடி வளரும் வேளை
ஆழி(கடல்) சூழ் உலகு அழகு
ஊழித்(காலப் பகுதி) திரை யலையாய் மலரும்.
மலரும் வாழ்வு முறை, திறை
இலக்கு, பந்தம், பாசம் அன்பு
நலம் தரும் யாவும் பல்லுயிர்
பலம் பெறுக விதிக்கும் ஒப்பம்.
ஒப்பற்ற களப் பணி மேலும்
ஒப்பி இடும் பழக்கம் திறையும்
தப்புத் தவறின்றி செலுத்தும் வழக்கம்
கப்பல், விமானத்துறையும் ஏழைப்பங்கில், திறை.
திறை, அறை, நிறை கணிப்பு
உறை, இறை, மறை இயல்பு
வறை(சரக்கு), தறை(தட்டையாதல்), பறை(தேய்தலும்), முறை
கறை, துறை, நறையே(தேன்) இருப்பு.
தமிழ்நாட்டில் கணக்கு தொடரும்.,