தமிழ் கணக்கு 3 – மௌன மொழி

27-06-2023

தமிழ் கணக்கு 3

தமிழ், அதாவது, தம் இதழ்
(தமி(ம் +இ)(த)ழ்), மனம், மெய்யியல்பில், மொட்டு விட்டு வழி காட்டுதலே, மொழி என்போம்.

நம் பகுதி வரலாற்று கண நேர செயல்பாடுகளின், தொடர்,
தொடர்பு நிகழ்வுகளை,
கடியலூர் கண்ணனார் பதித்த
‘ பட்டினப்பாலை ‘ பாடல் வரிகளிலும் அறியலாம்.

பட்டென அறிவு இனமாக அறிந்து ‘பட்டினம்’ என்ற பெயரில் மொழி முறைமை வழிமுறை ஆக நிலைத்து விட்டது.

பட்டினப்பாலை பண்டமாற்று முறை ஆரம்ப கால வாழ்க்கை வரலாற்றில் பதிவுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

பட்டி என்ற சொல் சிற்றூர் எனவும் குறிக்கும் வகையில் பயனுள்ள பதிவுகளாக அவரது பாடலின் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

ஓர் இனம் மிகுந்து, வேறொரு வேற்றுமை இனப் புணர்ச்சியில் தோற்றம் தரும் இயற்கை உயிரினம் மனித உயிரின தோற்றமும், ஓர் மாற்றம் ஆகும்.

பட் என்ற சொல் முறைப்படி,
டி(ட+இ) என பாக்களில், இனமாக ஒன்றி ‘ பட்டினம் ‘என்ற சொல் கருத்தினை அனைவரும் ஏற்றனர், பின்னர் பழக்கத்திலும்
உள்ளது.

இவையே பட்டி என்ற சொல் நாம் அனைவராலும் அழைக்கப்படும் ஒவ்வொரு ஊராக விரிவாக்கம் அடைந்தது எனலாம்.

‘பட் ‘ என்ற சொல் முறைமை கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பதிவு நிலையிலும் , 800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே எல்லா மொழிகளிலும் இடம் பெற்று இருப்பதை அறியலாம்.

பட்டி என்ற சொல் முறைப்படி கலித்தொகை 84வது பாடல் 20வது வரியில் இடம் பெற்றுள்ளது.

“சிறுபட்டி; ஏதிலார் எம்மை எள்ளுபு நீ தொட்ட ., “

என பதிந்து உள்ளார்.

வருவாய் சொல் முறைமை அறிவோம்.

வருவாய் வரும்படி, பொருள் விளங்கும் படி
விளங்குவது சுழளாதாரம்.

சுழளாதாரம் என்பது புவிதள
கொள்முதல் தொடர்
மனித இன அறிவாகும்.

வரும் பொருட்கள் பெறும் ஆற்றல் பெற பயன் படுத்தும் உழைப்பு, வேலை என்போம்.

பெறும் ஆற்றலும், கருப்பொருளில் நிரம்பிய பயிற்சியும் கலந்து ஈடுபடுவது தொழில்சார் நிலை ஆகும்.

பயிர் தொழில் நுட்ப அறிவும், அனுபவமும் தொடர்ந்து நீடித்து நிலைத்தவை வானம் வழங்கும் நீரதனைக் கண்டனர்.

ஐம்பொறிகளில் ஒவ்வொன்றும் விளங்கிய காலம் என்ற ஒன்று உண்டு.

தள வரைபடம் மூலம் பல முறைப்படி வழங்க முடியும் வரை செல்லும் வல்லமை கொண்டது.

தள மூலப்பொருள் வளம் தரும் வழிபாட்டுக்கு உரியவை.

நல நீர்ச்சுற்றே நில அமைப்பு.

தம்மிதழ் வழங்கும்
மெய்யுறுப்பு தொகுப்பு, சொல்லுடன் கூடிய மொழி முறைமை ஆகும்.

பலரறியச் செல்லும் வழியே மொழி எனலாம்.

கூடுதல் பணியில் கிடைக்கும் வெகுமதியும், ஊருக்கு வழங்கும் தன்மையுமே, தனம் தரும்.

பற்றுதல் கொண்டு செயல்படும் திறன் கொண்ட மனிதர்களால் மேன்மேலும் செழிப்பது நாடு.

இயல்பிலே ஈடுபட்டு, காத்து வகுத்தலில் வல்லமை கொண்டது அரசு.

அனைவருக்கும் கல்வி இயக்க முறைமையே, தற்கால இயக்க இயற்கை வழிமுறை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஆகும்.

நடைமுறை கருத்தில், இடைத் தொகுப்பு அறிவதும், கல்விப் பயிற்சி நிகழ்கால செயல் முறையுடன், வருங்கால தலைமுறை காக்கும்.

வருவாய், வட்டத் தலைமுறை தாங்கும் திறன் , அறம், பொருள், இன்பநிறைவு குறியீட்டெண் கணக்கீடு அளவு.

வருவாய் பெறும் ஆற்றல், காலத்தே தனம் தரும் நிலப்பயிர், பச்சை வயல் வெளி இணைப்புகள் கொண்ட தொடர்.

வரிசை வரையறை விளக்கும் நிலைப்பாடு, வரி வரியாக வழங்கும் இயற்கை பங்களிப்பு.

நிலமே, நிலையசைவு நிலையக் கோட்பாடு.

வரி, வரிசையாக அமைந்த ஒரு படி மலர்ச்சி நிலை.

“வரி” வரிசையில் வரும் வருவாய் வட்ட பயன்பாடுடைய பண்பாட்டின்‌ பயணம்.

‘வரி’ வருவாயினமாக பெயரளவில் கொடுப்பதற்கும், வாங்குவதற்கும் உண்டான நிலை அளவீடு ஆகும்.

வரி, வருவாய் வரிகளில்
ஒரு சிலவற்றை காண்போம்.

ஆயவரி , ஆரம்ப கால வரி விதிப்பு தொடர்பில் ஏற்பட்டது.

ஆயம் என்பதன் பொருள் ஒருவரைச் சேர்ந்த கூட்டம் என்போம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நில ஆளுமைக்கும், அதனால் பயனடைவதற்கும் உண்டான நடவடிக்கைகள் ஆகும்.

இறைவரி:

இறை, இயற்கை எனும் சொல்
இறைந்து இயற்கையில் கிடைக்கும் அகப்புற நிலைப்பாடு ஆகும்.

“சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”

என்கிறார், தொல்காப்பியர்.

தமிழ் கணக்கு – 3

மௌன மொழி

உள்ளம் அள்ளும் உவகை நிற்காது
தள்ளும் தவழும் குறும்புத் தளம்
துள்ளும் துடிக்கும் துவண்டு விழும்
அள்ளும் அரும்பணி பதிவில் சிறக்கும்.

சிறப்பு பகிர்வு நாளும் நிறைவு
பறந்து செல்ல பறவை கேட்டோம்
உறவு முறைகள் பாசம் நேசம்
துறவு பூண்டார் கொண்டார் நிகழ்வில்.

நிகழ்வு என்றும் நினைவில் தங்கும்
புகழும் தற்படம் தம்பட்டம் அடிக்கும்
ஆக மொத்தம் நாக்கு சொல்லும் ‌
போகும் போக்கு வல்லமை கொண்டதே.

கொண்டு கொடுத்து உண்டு மகிழ்வோம்
கண்டு உயிர்த்து உண்மையில் வாழ்வோம்
தொண்டு புரியும் தொழில்கள் யாவும்
பண்ணும் பாடும் பழகும் நிலைக்கும்.

நிலைப்பது நிலைக்கும் நில்லாது செல்லும்
அலை அலையாய் வரும் பேரலை
தலைமுறை வரை கொள்ளும் அளவு
நிலைமுறை கொண்டதென அறிந்து பகிர்வர்.

பகிர்வின் படம் சுட்டும் விளங்கும்
கதிர் வீச்சு சுழல் காற்று
ஆதி அந்தம் பந்து ஒன்றில்
உதிக்கும் சூரியனில் புவிசுற்று.

புவிசார் குறியீடு கோள்கள் நட்சத்திரம்
ஆவி கொண்ட நீராவி மழை
ஏவி விடும் திறனே அழகே
தாவி தழுவி ஒன்றிய கண்டம்

கண்டம் சுற்றும் சுழலில் நகரும்
விண்ணகம் அகண்ட பிண்ணனி அறிவு
கண் நிறுத்தி புவிபிரிவைப் பார்
ஆண்டுகளில் உட்பிரிவே கண்டத்தில் மாற்றம் .

தமிழ் கணக்கு தொடரும்.,

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA