குறள்-நமது குரல்

குறள்-நமது குரல்

403.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லாது இருக்கப் பெறின் .

விளக்கம் :

கற்றவர் முன் கல்லாதவர், நம் அறியாமையை புரிந்து

கொண்டு பேசாதிருப்பதும், நல்ல செயலே.

நினைவக செயலுக்கு :

கற்ற நிலை காலத்திற்கும் மாறும் நிலை கொண்டது .

தாம் கற்றவர்கள் என்ற பண்பு, பட்டங்களிலும் ,

பதவியை தக்க வைப்பதிலும் நிலை பெறாது .

சமுதாய நிலைப்புத் தன்மை, மாறும் தன்மைக்கு ஏற்ப

செயல்பட வேண்டிய ஒன்று .

மாறுவோம்! மாற்றத்திற்கேற்ப செயல்படுவோம் .