குறள் – நமது குரல்

குறள் – நமது குரல்

663 –

கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமம் தரும்.

செயல்கள் முடியும் வரை ரகசியம் காப்பதே ஆளுமை எனப்படும்.

ரகசியம் வெளிப்படுமானால், செயலுக்கும், அச்செயலை செய்பவர்களுக்கும்

நீங்காத துன்பத்தைத் தரும்.

சிந்தனை :

செயல்கள் வெற்றி பெறும் வரை அமைதியோடு

இருப்பது நல்லது. சில நேரங்களில், சில செயல்கள்

வாழ்நாள் சாதனையாகவே இருக்கும்.

பல்லாயிரக் கணக்கான செயல்கள் முழு தோல்வியுடனே

அமையும். தோல்விகளை பதிவதும், மற்றவர்கள் அந்த

தவறைச் செய்யாமல், மற்ற வழிகளில் சிறப்பாக செயல்பட வழி வகுக்கும்.