கரந்துறை-கவிதை வடிவில்

கரந்துறை கோள்


கரந்துறை

தமிழில் கவிதைக்கு

முக்கியத்துவம் உண்டு .

கவிதையை , கரந்துறையில்

பதிய வேண்டுமெனில் ,

கவிதை –

க ற்பனையில்
வி தையை
தை ( உண்டாக்கு ) .

எழுத்து , கற்பனையில் தோன்றும்

அற்புத வடிவமைப்பு .

கவிதையில் , மரபு வழித்தடம்

புதிய வழித்தடம் எனப்பிரிக்கலாம்.

*மரபு * என்ற சொல்லை

கரந்துறையில் பகிர வேண்டுமெனில்

*ம க்கள்

ர சனையின்

பு துவடிவம் *

ஆம் , மக்கள் ரசனை ஒவ்வொரு காலத்திலும்

புது வடிவம் பெறும் .

புதியன தோன்றுதல் வழி வழி வந்த மரபு .

புது கவிதை =

பு திய

து ணையுடன்

க ற்பனை

வி னையில் ( செயல் வடிவத்தில்)

தை த்தல் .

நற்றிணை- 398ல்

* உருகெழு தெய்வம்

கரந்துறை இன்றே * என்ற வரியில்

மறைந்து , ஒரு இடத்தில் இல்லாமல் இருப்பவர்

என வலியுறுத்துகிறார் .

கரந்து என்ற சொல் ,

பால் கரப்பதற்கும் , உறை என்ற கூற்று

உறைவிடம் எனக்கூறலாம் .

பசு மாட்டில் , கரப்பது போல

ஒவ்வொரு கரந்துறை சொல் உருவாக்கத்திலும்

எழுத்துக்களை கரந்து பின்னர் அச்சொல்லின்

கரந்துறை சொல் உருவாகிறது .

கரந்துறை கோள் என வானில் தெரிந்தும் ,

தெரியாமலும் இருக்கும் என்பர் .