புனித புதிய வழி நாளும் ஆகும்.

பாலக வீதி உலா வரும் வேகம்
காலத்தின் தேர்வு மூலதனப் பயணம்
உலகத் தொடர்பு கொள்ளும் மண்டலம்
பலதிறன் கொண்ட
சூரிய விசையும்.

பாருக்குள் பாரு நொடித் தொடரே
கார்கால மேகம் பேறுகளும் புவியமைவும்
தேர்வு நிலையில் சார்பு கொள்ளும் நிலம்
வார்ப்புரு உருவகம் மனித எல்லையோ!

எல்லை வகுத்து விளக்கம் தருவது
தொல்லை தொடுக்கும் போர்க்குண வாழ்வு
பொல்லாப் பேரழிவு ஆயுத மனமோ!
நல்லவை நிலைக்க பேர்விளங்க நாள்படும்.

மனமே நலமாக உறவாக வழித்தேடு
தனம்தரு புவியை தடமே அறிவு
மனித குணமொரு ஒரே இனமென்று
புனித புதிய வழி நாளும் ஆகும்.

சத்தியம் செய் பலனை காணலாம்
உத்திரம் உள்ள ஒன்றிய உலகம்
ஒத்திகை பார்த்துக் கொண்டே இருக்கும்
இத்தகைய செயலே என்றும் நிலைக்கும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: