அருகலை தொடரலை
தக்கார் தகவலறியும் நுட்பம் பெற்றார்
மிக்கார் மிகைகொளல் எண்ணும் அலை
அக்கம் பக்கம் போகாது அறிந்தார்
எக்கணமும் எங்ஙனமும் அருகலை ஆக்கத்தொடரலை.
ஆக்கம் தரும் வகையறியும் தமிழ் வளர்ச்சி
நோக்கம் அறிந்து செயல்பட முடியுமெங்கும்
ஊக்கம் உடைமை உள்ளாற்றல் பெருகுமங்கே
ஐக்கிய ஐம்பொறிகள்
இயங்கும் இயக்கம்.
இயக்குநர் ஆவர் மொழி முறைமை
தயக்கமின்றி செயலாற்றும் வரம்பு நிலை கருத்து
ஆயகலைகள் யாவும் வசப்படும் பற்றும்
அயர்ந்து தூங்கி அருளும் பெறும்.
பெற்றதனால் பேரும் புகழும் சேரும்
வற்றாத மலர்கள் பூக்கும் வண்ணம்
நிற்கும் நிலைத்த உள்ள ஒளியங்கே
கற்கும் பேறுகளில் ஊரகமே வாழ்வுறும்.