இன்றைய நமது குரல்-திருக்குறளில்

செயல் மன்றம்

திருக்குறள்- 517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன்கண் விடல் .

விளக்கம் :

இந்த செயல் இவர்களால் திறம்பட செய்யமுடியும்

என்று ஆராய்ந்து அந்த செயலை அவர்களை செய்யவிட

வேண்டும் .

இன்றைய சிந்தனை :

அனைத்து இயங்குகின்ற ஆற்றல்களும் , அதன்

வேலையை செவ்வனே செய்கின்றன .

மனித இனம், சிந்தனையும் உணர்வும் சேர்த்தே

இயங்குவதால் அனைத்துவித இயக்கங்களும்

ஏற்ற இறக்கம் உள்ளதாகவே இருக்கும் .