இறை நோக்கு :
தத்தம் இதழில் தவழும் மொழி
நித்தம் பழகும் வாய்த் திறன்
முத்தம் இட்டு உதவும் உதடுகள்
சத்தம் இட்டு ஒலிக்கும் முறை.
உயிர் மூச்சில் உள்ள கட்டளை
ஆய்ந்து அறிந்து பயிலும் பயிற்சி
இயல்பில் தரமிக்கவை புரிந்து உணரும்
நயந்து நயமுடன் நம்மில் பழகிடும்.
பழகும் விதம் பார்த்து தொடரும்
ஆழ ஊடுருவி மெய்ப்
பொருளின் மூலம்
எழும் கேள்வி பதிலில் பகிரும்
தழுவும் மனம் திறந்து விடும்.
இறைப் பார்வையில் இருந்து பரவும்
துறை தோறும் தோற்றம் பெறும்
மறை மதி நுட்பம் சார்பு
உறை வாழ் உணவில் காப்பீடு.
காப்பு கரந்து உயிர் வாழும்
ஒப்புமை வலிமை குறியீடு ஊரும்
தப்புத் தாளங்கள் தவிர்க்க முழங்கும்
ஏய்ப்பு வழக்கு தண்டம் கண்டம்.
அறம் பொருள் இன்பம் சமூகம்
பறவை புல் பாசிகளின் தாயனை
உறவு முறை வாழும் தொடரனை
ஆற அமர யோசித்து நோக்கு.
உள் நோக்க நுழைவு வாயில்
ஆள் பார்த்து பேசி வளரும்
துள்ளி குதித்து நுண் உயிரணு
அள்ளிக் கொடுத்து வானமும் வசப்படும்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0DQcFUoDzh8NEfiy6CdVBksbdeG2Qf5Cdowr1mcjCPmVLZQ8Vrxh9wLitM3RA314Ml&id=100009392211638&sfnsn=wiwspmo

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்

%d bloggers like this: