வாழ வழி

நாளொன்று போனால் பொழுதொன்றே வழி
ஆளொன்று வீதம் நாமொன்றிய திறன்
தாளொன்றில் தொகுத்து நாவினில் பாடு
பள்ளம் மேடு பார்ப்பதே நல்வழி.

நல்வழி காட்டும் நன்னெறி பழக்கம்
கல்விச் சாலையின் தொடர் புத்தகசாலை
பல்வேறு மொழியும் தாய்மொழியில் ஒன்றிடும்
வல்வினை யாற்றிடும் பிறப்பே சிறப்பு.

சிறப்பு கடைசி வரை காக்கும்
பிறப்பு ஒரு கருவினை யாக்கம்
உறுப்பில் இருக்கும் கருத் தாயனை
பொறுப்பில் மலரும் தொடரனைக் கல்வி.

கல்லில் உள்ளம் தோய்ந்த காலம்
ஆலிழை விதை நேர்த்தி மரம்
பாலில் கலந்து தேனும் சாப்பிட
இல்ல உதவி மாற்றமே செயல்.

வாடி வதங்கிய செடிகொடிகளின் விதைகள்
நாடிச் சென்ற நன்மை தன்மை
ஓடிச் சென்று வேரில் ஊறும்
பாடி பழகி வருவதே நலம்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

%d bloggers like this: