பறவைப் பார்வை
சாகித்ய விருது வாங்கிய ராமகிருஷ்ணன்
‘பறவைக் கோணம்’ என்ற பேச்சைக் கேட்டேன்.
அவர் பேச்சில் சொன்ன கருத்துப் பதிவு.
அவருடைய சக ரயில் பயணி கேட்டார். ‘பறவை பார்வை’ என்றால் ‘மேம்போக்கான பார்வை தானே’ ‘இந்த தலைப்பில் என்னத்தை பேசப் போறீங்க? ‘ என்றாராம்.
இந்த சிந்தனை பெரும்பாலோர்க்கு வரக்கூடியது தான்.
இந்த தலைப்பு மிகவும் வித்தியாசமானதே. பறவையின் பார்வை என்பது மிகவும் உயர்ந்த இடத்தில் பார்க்கும் போது அனைத்து செயல்களும் மிகவும், மிகச் சிறிய அளவிலேயே தெரியும்.
காக்கை, பருந்து கொக்கு போன்ற பறவைகள் மிகவும் உயரத்தில் பறந்து, இரையைத் தேடி உண்டாலும், அதனுடைய பறந்த விரிந்த இயல்புகளும் மிகவும் உயர்வானவையே. அவற்றிற்கான உயிர்களின் இயல்பு அப்பார்வையிலேயே நிலைக்கப்படுகிறது.
அவரது பேச்சில், ‘நகரங்களில் , கிராமங்களில் பறக்கும் காக்கைக்கு’ காலப்போக்கில் ஏற்படும் மாற்றத்தை விவரித்தார்.
ஆம், நகரங்களில் எல்லைகளில் பறக்கும் காக்கை நகர மக்கள் எதை உண்கிறார்களோ, அவற்றையே உணவாக, நகரத்தில் வாழும் மக்களைப்போல தனியாகத்தான் இரையைத் தேடுகின்றன, உண்கின்றன. இதற்கான எடுத்துக் காட்டையும்
எழுத்தாளர் ராம கிருஷ்ணன் அவர்கள், அவரது மகனிடம் நடந்த உரையாடலை விவரித்தார்.
நாங்களும், சென்னை நகரத்தில் எமது மகள் வீட்டில் சில மாதங்கள் இருந்த பொழுது, சேலையூர் ஏரிக்கு அருகில் உள்ள புளிய மரத்தில் ஒரு சில காகங்கள் தொடர்ந்து கரைக்கும். காகங்களுக்கு மாடியில் ஒரு கிண்ணத்தில் தொடர்ந்து சாதத்தை வைத்தோம்.
ஒரு சில காகங்கள் பால்கனியில் இருந்து கொண்டு காகம் கரைக்கும் பொழுது ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் சிறிது சாதம் வைத்தோம். சில நாட்களுக்குப் பிறகு, ஒரு காகம் மட்டும் தொடர்ந்து வந்து பால்கனியில் உள்ள கம்பியில் இருந்து கரைக்கும். கதவு மூடி இருந்தால்
கதவை கொத்தி தனது இரையை பெற்றது. இது எங்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
காகங்களும் இரை தேடுவதை, நகரங்கள், கிராமங்களில் காலச் சூழலுக்கேற்ப ஏற்படுத்தி இருக்கும் மாற்றத்தை உணர முடிந்தது.
அவர் பேசிய பேச்சிற்கேற்ப கால மாற்றத்தை நாங்களும் உணர்ந்ததால் இந்தப் பதிவு.
நாமே உயரத்தில் விமானத்தில் பறக்கும் பொழுதும்,
மாடி வீடுகளில், மலைப்பகுதியில் இருந்து கீழே பார்க்கும் பொழுது, நமது எண்ணங்களும் உயர்வானவையாக அமையும்.
இது எனது தொடர் கனவு.
‘கனவு காணுங்கள்’ என்று
அப்துல் கலாம் தமது பேச்சில் வலியுறுத்தும் கனவுக்கு முற்றிலும் வேறுபட்டது.
இரவில் நாம் உறக்கத்தில் தோன்றும் கனவு ஓர் கலைந்து செல்லும் அலைக்கற்றைகளின் எண்ணப்பதிவு.
நாம் அன்றாடம் பழகிய இடம், நபர்கள் கூட கனவுகளில் முற்றிலும் மாறுபடும்.
நினைவில் நின்ற கதைகளைக் கூட சிலர் மணிக்கணக்கில் விவரிப்பார்கள். இது நிஜத்தில்
நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் முற்றிலும் இல்லை.
அப்துல் கலாம் அவர்கள் பதிந்த கனவு,
‘ குறிக்கோள்களை செயலாக்குவதே’.
எம் கனவில் எம்மால் முடியாத கனவையும் பகிர்ந்து கொள்கிறேன்.
உறங்கும் பொழுது, என்னுடைய கையை பறவை பறப்பது போல இரு கைகளையும் விரித்து பறந்து பல இடங்களுக்குச் செல்வேன். ஆஹா! இது போன்ற பறக்கும் ஆற்றல் எப்பொழுது வந்தது என்று கூட ஆச்சர்யப் படுவேன்.
விடிந்ததும் கனவு மெய் படவில்லை என்பதை உணர்ந்த பின் தான் ‘ இது ஒரு கனவு என்று உணர்வேன்’ .
‘ கனவு மெய்ப் படவேண்டும்’ என்று பாரதியின் கூற்று
மிகச் சிறந்த பதிவு. ஆம், நாம் மெய்யால் உணரபபடவேண்டும்.
அதற்காகத்தான் நாம் காண்பது கனவா, நினைவா என்பதை நமது கையால் நம்மைக் கிள்ளிக் கொள்கிறோமோ!
பள்ளி நாட்களிலும் சரி, அலுவலகம் மற்றும் சமூகச் செயல்களின் ஈடுபாட்டிலும், எமது தொடர் நிகழ்ச்சிகளாலேயே எம்மை இது போன்ற பதிவுகளுக்கு எம்மால் வித்திட முடிந்தது.
வணிக முதுகலை பட்டயப் படிப்பு, எம்முடைய,
எண் கணக்குப் பணியிலும் ஓர் அடித்தட்டு கணக்குப் பிரிவு அலுவல்களில் ஈடுபட முடிந்தது.
பறவைப் பார்வையினால் என்னால் பறக்க முடியவில்லை, பதிய முடிகிறது.
செயல் மன்றம் / Seyalmantram
Like this:
Like Loading...